களைக்கொல்லி

களைக்கொல்லி (Herbicide) தேவையற்ற தாவரங்களை அழிப்பதற்குப் பயன்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். .[1] தெரிவுசெய்த களைக்கொல்லிகள் குறிப்பிட்ட களைகளைக் கட்டுபடுத்தி தேவையான பயிர் வகைகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால் வணிகமுறையில் பயன்படுத்தும் தெரிவுசெய்யாத களைக்கொல்லிகள் முற்றழிப்புக் களைக்கொல்லிகள் களைகளின் வளர்ச்சியைச் சிதைப்பதன்மூலம் செயல்படுகின்றன. இவை பொதுவாகத் தாவர வளரூக்கிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவை குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமன்றி அதன் தொடுகைக்கு உட்படும் எல்லாத் தாவரங்களையுமே அழித்து விடுகின்றன. தரிசு இவ்வாறான களைக்கொல்லிகள் நிலங்களைத் தூய்மைபடுத்துவதற்கும் நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள் போன்றவற்றின் பேணுதலுக்கும் அதாவது முழுமையான தாவரவளர்ச்சிக் கட்டுப்பாடு தேவையான இடங்களில் எல்லாம் பயன்படுகின்றன. தெரிவு செய்த, தெரிவு செய்யாத வகைகளைத் தாண்டி, எஞ்சியிருக்கும் வரை செயல்படும் வகையும் உட்கொள்நிலைசார்ந்து செயல்படும் வகையும் இயங்குமுறை சார்ந்து செயல்படும் வகையும் என மூவகைகள் உள்ளன. வரலாற்றியலாக, சாப்பாட்டு உப்பும் பிற பொன்ம உப்புகளும் களைக்கொல்லிகளாக பயன்பட்டுள்ளன. என்றாலும் இவை பின்னர் வழக்கிறந்துவிட்டன. சில நாட்டு அரசுகள் இவை நிலையாக மண்ணில் தங்கி விடுவதால் இவற்றைத் தடை செய்துள்ளன. இவை போரிலும் பயன்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையிலும், புல்தரை மேலாண்மையிலும் களைக்கொல்லிகள் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொதுவாகத் தேவையற்ற களைகளை மட்டுமே அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

களைக்கொல்லிகளால் களைகள் கட்டுபடுத்தப்படல்

தற்காலக் களைக்கொல்லிகள் தாவர இசைமங்களால் தொகுப்புவகைப் போன்மிகளே. எனவே இவை இலக்குப் பயிர்களின் வளர்ச்சியுடன் குறுக்கிடு செய்கின்றன. இப்போது இயற்கைக் களைக்கொல்லிகள் இயற்கை வேளாண்மையில் பயன்படுகின்றன. சில தாவரங்கள் அல்லது பயிர்கள் தம் கருப்பு வாதுமை, வாதுமை போன்ற தாவரங்கள் இயற்கைக் களைக்கொல்லிகளை உருவாக்குகின்றன; இயற்கைக் களைக்கொல்லிகளின் செயல்பாடும் இதுசார்ந்த வேதிப்பொருட்களின் ஊடாட்டமும் தாவர உயிர்வேதி ஊடாட்டம் எனப்படுகிறது. வேளாண் பயிர்களின் களைக்கொல்லித் தடுதிறத்தால் களைக்கொல்லிகள் வேற்றுச் செயல் பொருட்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை களைக்கொல்லியோடு தீங்குயிர் கட்டுபாட்டு முறைகளையும் பயன்கொள்கிறது.

ஐக்கிய அமெரிக்காவில் 2007 இல் 83% எடையுள்ள களைக்கொல்லி பயன்பாடு வேளாண்மையிலேயே அமைந்தது.[1]:12 உலகளாவியநிலையில் 2007 ஆம் ஆண்டைய தீங்குயிர்கொல்லி பயன்பாடு 39.4 பில்லியன் டாலராக இருந்தது; இதில் களைக்கொல்லி பயன்பாடு பேரளவாக 40% ஆகவும் எஞ்சிய பகுதி பூச்சிக் கொல்லியாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் பிற வகைகளாகவும் அமைந்தது.[1]:4 களைக்கொல்லிகள் கானியலிலும் பயன்படுத்தப்பட்டன.[2] கானியலில், குறிப்பாக வன்மரங்கள் திட்டமிட்டு நீக்கி, ஊசியிலை மரங்களும் மேய்ச்சல்பயிர்களும் வளர முன்னுரிமை தரப்பட்டது.[3] இந்த இடங்கள் காட்டு விலங்குகள் வாழிட மேலாண்மைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

வரலாறு

களைக்கொல்லிகள் பரவலான பயன்பாட்டுக்கு வருமுன், வளர்ப்புமுறைக் கட்டுப்பாடுகளே பயன்பாட்டில் இருந்தன. இவை மண்ணின் பிஎச் (pH) அளவு, உப்புத்தன்மை, வளமைநிலை என்பவற்றை மாற்றுதல், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. .[4] எந்திரவழிக் கட்டுப்பாடுகளும் களைகளை அகற்றுவதற்குப் பயன்பட்டன; இன்றும் பயன்படுகின்றன.

முதல் களைக்கொல்லி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே களைக்கொல்லிகளின் ஆராய்ச்சி தொடங்கிவிட்டாலும் இரண்டாம் உலகப்போரின் களைக்கொல்லிப் போர்க்கருவியாகவே முதல் களைக்கொல்லி ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் கண்டறியப்பட்டது].[5] 2,4-D எனும் முதல் களைக்கொல்லி இம்பீரியல் வேதியியல் தொழிலகத்தில் டெம்பிள்மன் என்பவரால் தொகுப்புமுறையில் உருவாக்கப்பட்டது. இவர் 1940 இல் " வளரூக்கிகள் முறையாக பயிரின் ஊடே அளிக்கப்பட்டால் அகன்ற இலைக்களையைப் பயிர்வளர்ச்சிக்கு ஊறு நேராமல் அழிக்கலாம் " என விளக்கிக் காட்டினார். இவரது குழு 1941 இல் இதற்கான வேதிப்பொருளைக் கண்டறிந்தது . இதெ ஆண்டில் இது அமெரிக்காவிலும் செயற்கைமுறையில் தொகுக்கப்பட்டது.[6]

பரவலாகப் பயன்பட்ட முதல் களைக்கொல்லி 2,4-டைகுளோரோபீனாக்சியசெட்டிக் அமிலம் ஆகும். இப்பெயர் பொதுவாக 2,4-D எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது. முதலில் ஷெர்வின்-வில்லியம்ஸ் பெயின்ற் கம்பனியினால் விற்பனைக்கு விடப்பட்ட இது, 1940களில் பரவலான பயன்பாட்டில் இருந்தது. இலகுவாகவும், மலிவாகவும் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்த இது, பெரும்பாலான அகன்ற இலைத் தாவரங்களை அழித்தது; ஆனால், புல்வகைகளைத் தாக்கத்துக்கு உட்படுத்தவில்லை. எனினும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டபோது சோளம், கூலங்கள் போன்ற பயிர்களையும் அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் தாக்கியது. இதன் குறைந்த விலை காரணமாக இன்றும் இது பயன்பாட்டில் உள்ளதுடன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. தற்காலக் களைக்கொல்லிச் சேர்க்கை முறைகள், மும்மெதைலமைன் போன்ற அமைன் உப்புக்களையோ, தாய்ச் சேர்மத்தின் ஏதாவதொரு எசுத்தரையோ பயன்படுத்துகின்றன. இவற்றை அமிலங்களைவிட இலகுவாகக் கையாள முடியும்.

1950 களில், ஆட்ராசைன் போன்ற மூவசைன் குடும்பக் களைக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை நிலத்தடி நீர் வளங்களை மாசடையச் செய்வது தொடர்பில் பரவலான கவலையை ஏற்படுத்தின. நடுநிலைக்கு மேலான பிஎச் அளவு கொண்ட மண்ணில், இவற்றைப் பயன்படுத்தும்போது, பல வாரங்களுக்கு ஆட்ராசைன் சேர்வை உடையாமலேயே இருக்கும். கார நிலைமைகளில் ஆட்ராசைன் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீருடன் கலந்து அதை மாசடையச் செய்கின்றது.1974 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளைபோசேட்டு வகைக் களைக்கொல்லிகள் தெரிவுசெய்யாத களைக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்கே பயன்பட்டது. பின்னர், இதற்கு எதிரான எதிர்ப்பாற்றல் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டதனால் இன்று இது ஒரு முக்கியமான தெரிவுசெய்த களைக்கொல்லியாகப் பயன்படுகின்றது.

வேளாண் துறையில் பயன்படும் பல தற்காலக் களைக்கொல்லிகள் குறுகிய காலத்துள் அழிந்துவிடக் கூடியனவாகவே உருவாக்கப்படுகின்றன. இதனால் இக் களைக்கொல்லிகளினால் தாக்கத்துக்கு உள்ளாகும் தாவரங்களையும் பின்னொரு காலத்தில் அதே நிலத்தில் பயிர் செய்யும் வாய்ப்பு உள்ளது. எனினும் இத்தகைய களைக்கொல்லிகள் பயிர்களுக்கு அதன் பருவகாலம் முழுதும் பாதுகாப்புக் கொடுக்கத் தவறிவிடும் வாய்ப்பும் உண்டு.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • A Brief History of On-track Weed Control in the N.S.W. SRA during the Steam Era Longworth, Jim Australian Railway Historical Society Bulletin, April, 1996 pp99–116

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Herbicides
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
பொது தகவல்
கட்டுபாட்டுக் கொள்கை
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=களைக்கொல்லி&oldid=2868498" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை