களை

களை (Weed) என்பது குறிப்பிட்ட சூழலில் அமையும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் ஆகும். பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவர த்தை இது குறிக்கும். பொதுவாக, இச் சொல் வேகமாகப் பெருகும் தாயக, அயல் இடத்துத் தாவரங்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. வகைப்பாட்டியலாக தாவரவியலில் களை எனும் சொல் அவ்வளவு பொருளுள்ள சொல் அல்ல. ஒரு சூழலில் களையாக அமையும் தாவரம், அது வேண்டப்படும் வேறொரு சூழலில் அது களையல்ல; பயனுள்ள தாவரமாகும். அங்கு அதே பேரினத்தைச் சேர்ந்த வேறொரு தாவரம் களையாகிவிடும்.. அதாவது பயிரிடப்படும் உலோகன்பெரியில் வளரும் பிராம்புள் பெரி களையாகி விடுகிறது. இதே போல, நாம் விரும்பி வளர்க்கும் பயிரே, அடுத்த பயிரில் வளர்ந்தால் அதுவும் களையே. நாம் களையெனக் கருதும் பல தாவரங்கள் தோட்டம் போன்ற சூழல்களில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் இவை நலந்தரும் களைகள் எனப்படுகின்றன. மிகவும் வேகமாக வளரும் முனைப்பாக இனப்பெருக்கம் செய்யும் தாவரமும் களை எனப்படும். அல்லது அதன் முதல் வாழிடச் சூழலுக்கு வெளியேஆதுவே முற்றுகை இனங்கள் எனப்படும்.[1] மிக விரிந்த பொருளில் "களை " என்பது பன்முகச் சுற்றுச்சூழல்களில் தரித்து வாழ்வதோடு வேகமாகத் தன்னைப் பெருகச் செய்ய வல்லதாகும்; இந்தப் பொருளில் இது மாந்தருக்கும் கூடப் பொருந்தும்.[2]

Yellow starthistle, தெற்கு ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்குக்கும் சொந்தமான ஒரு தாவரம், வட அமெரிக்காவில் ஓர் ஆக்கிரமிப்புக் களையாகக் கருதப்படுகிறது.
நச்சுக் களைகளை உண்டு 700 கால்நடைகள் ஓரிரவிலேயே இறந்தன.

களைகள் பயிர்களுக்கு இடையே வளரும் விரும்பத்தகாத, பயிர்களுக்குண்டான நீர், நில வளங்களுக்குப் போட்டியிட்டு, பயிர் விளைச்சலுக்கும், மனித மேம்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாகின்றன . [3].

பல காரணங்களால் களைகள் தேவையற்றனவாகக் கருதப்படலாம். பயிர்களுக்கு மண்ணிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களுக்குப் போட்டியிடுவதனால் பயிர்களின் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருத்தல், பயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய சூரிய ஒளியைத் தடுத்தல், பார்வைக்கு அழகற்றனவாக இருத்தல் என்பன இவற்றுட் சில. இவை நோய்க்காரணிகளுக்கு இடம் கொடுத்து, பிற பயிர்களுக்குத் தொற்றை ஏற்படுத்தி அவற்றின் தரம் குறைவதற்குக் காரணமாகவும் அமையக்கூடும். சில களைகள் முட்களைக் கொண்டுள்ளன, வேறு சில தொடும்போது அரிப்பை உண்டாக்குவனவாக இருக்கின்றன, வேறு சிலவற்றின் பகுதிகள் உடலிலோ ஆடைகளிலோ ஒட்டிக்கொண்டு விடுகின்றன. இதனாலும் இக் களைகள் விரும்பப்படாதன ஆகின்றன.களைக் கட்டுபாடு வேளாண்மையில் மிகவும் இன்றியமையாததாகும். களைக் கட்டுபாட்டு முறைகளில் ஏரால் உழுதல், தன்னியக்க எந்திரமுறை உழுதல், தொளறுகொண்டு களையெடுத்தல், மண் பதப்படுத்தல், சூடாக்கி அல்லது எரித்து களை நீக்குதல், களைக்கொல்லி வேதிப் பொருட்களைப் பயன்கொள்ளல் ஆகியன உள்ளடங்கும்.

களையின் இயல்புகள்

  • எல்லாக் காலங்களிலும் தோன்றி செழிப்பாக வளரும் தன்மையுடையது.
  • ஒவ்வொரு வருடமும் ஏராளமான விதைகளை உற்பத்தி செய்கின்றன.
  • களைகள் எல்லா மண்ணிலும் செழிப்பாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை கிரகித்துவிடும் தன்மை உடையது.
  • களைகளின் விதைகள் பயிர் விதைகளை விட சிறியதாக உள்ளன.
  • களைகளின் விதைகள் விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
  • களைகளின் விதைகள், பயிர்களின் விதைகளைப் போன்ற அமைப்பும் பருமனும் நிறமும் உடையதாக இருப்பதால் தாவரங்களின் விதைகளிலிருந்து எளிதில் பிரிக்க முடிவதில்லை.
  • களைகளின் விதைகளில் இறகுகள் போன்ற அமைப்பு இருப்பதால் காற்றில் வெகுதூரம் அடித்துச் செல்லப்படுகின்றன.
  • களைகளின் விதைகளைச் சற்றி உள்ள உறை, உரோமம் மற்றும் முட்களின் உதவியால் விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்ற்ன,
  • பயிர் அறுவடையாகும்போது களைகளின் விதைகள் தானியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சந்ததியை பெருக்குகின்றன.
  • பெரும்பாலான களைகள் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வேகமாக பெருகுகின்றன.

பயிர்கள், சூழல் தாவரங்களோடு போட்டி

ஆத்திஏலியா, 1907: நச்சுத் தாவரத்தாலலொரே இரவில் இறந்த 700 மாடுகளை இடையர் பார்வையிடல்[4]

பல காரணங்களால் குறிப்பீட்ட இருப்பிடத்தில் உள்ள தாயக, அயலகத் தாவரங்கள் தேவையற்றனவாக அமைகின்றன.[5]முதன்மையான காரணம் அவை வேளாண்மையில் உணவு, நாரிழை விளைச்சலோடு இடைவினை புரிந்து பயிர் விளைச்சலை இழக்கவோ குன்றவோ செய்கின்றன. மேலும், இவை வீட்டுத் தாழ்வார, தோட்ட நில இயற்கை, விளையாட்டரங்கங்கள் ஆகியவற்றின், நறுமணம், அழகு, பொழுதுபோக்கு இலக்குகளோடும் இடைவினை புரிகின்றன. இதேபோல, இவை சுற்றுச்சுழலிலும் தாயகத் தாவரங்களோடு போட்டியிட்டு அவற்றின் வளங்களையும் இடத்தையும் முற்றுகையிடுகின்றன.

இந்தக் காரணங்களால், தோட்ட, சுற்றுச்சூழல் களைகள் பின்வரும் தாக்கங்களைச் செலுத்துகின்றன:

  • பயிர்களோடு போட்டியிட்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி, வளர்வதற்கான இடம் போன்றவற்றை பெருமுனைப்புடன் பகிர்ந்து கொண்டு பயிர் விளைச்சலைக் குறைக்கிறது.
  • தாவர நோயினிகளுக்கு ஓம்புயிரிகளாகவும் பரப்பிகளாகவும் அமைந்து பயிரில் தொற்றுநோய் பரவ வாய்ப்பு ஏற்படுத்தி அதன் தரத்தையும் விளைச்சலையும் குறைக்கிறது;
  • விதை தின்னும் பறவைகள், பழ ஈக்கள் ஆகிய விலங்குத் தீங்குயிரிகளுக்கு உணவும் தங்க இடமும் தந்து விளைச்சலைக் குறைத்தல்;[6]
  • மக்கள், விலங்குகளின் தோலிலும் செரிமான வழித்தடத்திலுமரிப்பைத் தரல். இந்த அரிப்பு களைகளின் முட்களாலும் முகடுகளாலும் பறநிலையாகவோ அல்லது அவற்றின் அரிப்பூட்டிகளாலும் நச்சுப் பொருட்களாலும் வேதிம அரிப்பாலோ ஏற்படலாம்;[7]
  • கால்வாய்கள், சாலை மேற்பரப்புகள், அடிமானங்கள் போன்ற பொறியியல் கட்டுமானங்களைத்தம் வேர்களின் ஊடுருவலால் சிதைவை ஏற்படுத்தல்.[8] blocking streams and rivulets.[9]
  • பல்லாண்டுக் களைகள் நிலத்தின் வளத்தைக் குறைக்கின்றன.
  • களை விதைகள் கலப்பதால் விளை பொருட்களின் தரமும் மதிப்பும் குறைகிறது.
  • களைகள் பேரளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து உறிஞ்சிக் கொள்வதால் மண்ணின் ஊட்டத்திறன் குறைகிறது.
  • களைகளால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மனிதன், கால்நடைகளின் உடல்நலம் கேடுறுகிறது.

களைச் சூழலியல் வல்லுனர் சிலர் தாவரம், இடம், கண்ணோட்டம் எனும் மூன்று கூறுபாடுகளின் உறவு பற்றி விவாதிக்கின்றனர். இந்தக் கூறுபாடுகள் பலவகைகளில் வரையறுக்கப்படுகின்றன. இந்தப் பண்புகள் களைகள் சார்ந்தும் பரவலாக மேற்கோள்கள் காட்டப்படுகின்றன.[10][11]

சானெற்று 69, 1609[12]

மாந்தன் பயிரிடத் தொடங்கிய காலத்தில் இருந்து களைகளைப் பற்றிய கவலையுமக்கறையும் தொடர்ந்து வருகின்றண. பல வரலாற்றுப் பனுவல்கள் இத்தகவல்களைப் பதிவு செய்துள்ளன . இதற்குச் சேக்சுபியரின் சானெற்று 69 சிறந்த சான்றாகும்:

To thy fair flower add the rank smell of weeds: / But why thy odour matcheth not thy show, / The soil is this, that thou dost common grow.[12]

விவிலியச் சான்று கீழே உள்ளது:[1]

Cursed is the ground because of you; through painful toil you will eat of it all the days of your life. It will produce thorns and thistles for you, and you will eat the plants of the field. By the sweat of your brow you will eat your food until you return to the ground.[13]

களைகளின் நலங்கள்

களை எனும் சொல் பொதுவாக எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே கருதப்பட்டாலும் பல களைத் தாவரங்கள் நன்மைகளையும் தருகின்றன. சில தாவரங்கள் உணவாகப் பயன்படுகின்றன. குறிப்பாக அவற்றின் இலைகளும் கிழங்குகளும் உணவு அல்லது மூலிகையாகப் பயன்படுகின்றன. பர்தோக் எனும் களைத் தாவரம் கிழக்காசியாவில்நறுஞ்சுவை நீராகவும் மூலிகையாகவும் பயன்படுகிறது.[14]

  • களைகளை நிலத்தோடு சேர்த்து உழுவதால் நிலத்திற்கு தழைச்சத்து கிடைக்கிறது.
  • சில களைகள் களர் நிலங்களைச் சீர்திருத்தும் குணமுடையது.
  • களைகளை எரிப்பதால் சாம்பல் சத்து கிடைக்கிறது.
  • களைகள் கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்கிறது.
  • களைகளால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
  • சில களைகள் மனிதன் மற்றும் கால் நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. (எ.கா. கீரைகள்)
  • சில களைச் செடிகள் அலங்காரத்தாவரமாகப் பயன்படுகின்றன (எ.கா. உளிமுள்)
  • சில களைகளின் கிழங்குகள் (கோரை) அகர்பத்திகள் தயாரிக்கவும், சில களைகள் வாசனை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • பல புதிய பயிரிடுவகைகளை உருவாக்குவதில் களைகள் உதவி புரிகின்றன.

சுற்றுச்சூழல் சார்ந்த சிறப்புகள்

மேலும் பார்க்க

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Weeds (plants)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=களை&oldid=3580720" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை