கார்ல் சாண்ட்பர்க்

கார்ல் சாண்ட்பர்க் (Carl Sandburg, பி. ஜனவரி 6, 1878 – இ. ஜூலை 22, 1967) ஒரு அமெரிக்க இதழாசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர். அமெரிக்க கவிதை ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கார்ல் சாண்ட்பர்க்
Photograph of Sandburg
1955 ஆம் ஆண்டில் சாண்ட்பேர்க்
பிறப்புகார்ல் சாண்ட்பேர்க்[1]
(1878-01-06)சனவரி 6, 1878
கேல்ஸ்பேர்க் இல்லினாய்ஸ், அமெரிக்கா
இறப்புசூலை 22, 1967(1967-07-22) (அகவை 89)
Flat Rock, North Carolina, U.S.
தொழில்பத்திரிகையாளர், எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கா
கல்வி நிலையம்லும்பர்ட் கல்லூரி (பட்டம் பெறவில்லை)
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சிகாகோ கவிதைகள்
  • த பீபள் எஸ்
  • ஆபிரகாம் லிங்கன்: பீரியர் இயர்ஸ், வோர் இயர்ஸ்
  • ரூட்டாபெகா ஸ்டோரிஸ்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்லிலியன் ஸ்டீச்சன்
பிள்ளைகள்3
இராணுவப் பணி
சார்பு United States of America
சேவை/கிளை United States Army
சேவைக்காலம்1898
தரம்Private
படைப்பிரிவுCompany C, 6th Illinois Infantry Regiment
போர்கள்/யுத்தங்கள்எசுப்பானிய அமெரிக்க போர்

இலினாய் மாநிலத்தில் பிறந்த சாண்ட்பர்க், சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் பத்திரிக்கையாளராகத் தன் எழுத்து வாழ்வைத் தொடங்கினார். கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், குழந்தை இலக்கியம், புதினங்கள், திரைப்பட விமர்சனங்கள் என பல்வேறு வகை படைப்புகளை எழுதியுள்ளார். எனினும் அவர் வாழ்ந்த சிகாகோ நகர் பற்றிய கவிதைகளுக்காகவே அவர் பரவலாக அறியப்படுகிறார். கவிதைத் தொகுப்புகளுக்காக இரு முறையும், ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றுக்காக ஒரு முறையும் புலிட்சர் பரிசினை வென்றுள்ளார். அமெரிக்க கவிதையுலகில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள சாண்ட்பர்குக்கு அமெரிக்காவின் பல இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், தொடருந்துச் சேவைகள் மற்றும் கட்டிடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை

கார்ல் சாண்ட்பர்க் அமெரிக்காவின் இல்லினாய்சில் கேல்ஸ்பர்க்கில் கிளாரா மாடில்டா (நீ ஆண்டர்சன்), ஆகஸ்ட் சாண்ட்பெர்க் இணையருக்கு பிறந்தார்.[2] இவர்கள் சுவீடிசு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.[3] தொடக்கப் பள்ளியில் சார்லஸ் அல்லது சார்லி என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். பதிமூன்று வயதில் பள்ளிப் படிப்பை இடை நிறுத்தி பால் வண்டி ஓட்டத் தொடங்கினார். சுமார் பதினான்கு வயது முதல் பதினேழு அல்லது பதினெட்டு வயது வரை கேல்ஸ்பர்க்கில் உள்ள யூனியன் ஹோட்டல் முடிதிருத்தகத்தில் கூலிக்கு வேலைச் செய்தார்.[4] அதன் மீண்டும் பதினெட்டு மாதங்கள் பால் விநியோகம் செய்யத் தொடங்கினார். பின்னர் கன்சாவின் கோதுமை சமவெளிகளில் விவசாயியாக வேலை செய்தார்.[5] பல இடங்களில் வேலை பார்த்த பின் பத்திரிகையாளராக எழுத்து வாழ்க்கையை தொடங்கினார். கவிதை, வரலாறு, சுயசரிதை, புதினங்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்சனங்கள் என்பவற்றை எழுதினார். எசுப்பானிய அமெரிக்க போரின் போது இராணுவத்தில் இணைய முன்வந்தார்.[6] பின்னர் கேலெஸ்பர்க்கிற்குத் திரும்பி  லோம்பார்ட் கல்லூரியில் பயின்றார். பட்டம் பெற முன் கல்லூரியில் இருந்து விலகிவிட்டார். பின் விஸ்கான்சின் மில்வாக்கிக்குச் சென்று சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். இக் கட்சி பிற்காலத்தில் அமெரிக்க சோசலிச கட்சி என அறியப்பட்டது. 1910 ஆம் ஆண்டு முதல் 1912 ஆண்டு வரை மில்வாக்கியின் மாநகர தலைவரிடம் செயலாளராக பணியாற்றினார்.[7]

எழுத்துப்பணி

கார்ல் சாண்ட்பர்க்கின் கவிதைகளாக சிகாகோ இல்லியானாசின் சிகாகோவை மையமாக கொண்டு எழுதப்பட்டது. சிகாகோ டெய்லி நியூஸ் மற்றும் நாள் புத்தகத்தில் நிருபராக பணிபுரிந்தார். சாண்ட்பர்கின் முழுமையான கவிதை தொகுப்புக்காகவும், ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காகவும்  (ஆபிரகாம் லிங்கன் த வார் இயர்ஸ்) புலிட்சர் பரிசை வென்றார்.[8] ரூட்டபாகா பிஜன், அமெரிக்கன் பெயரி டெல்ஸ் போன்ற சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். 1926 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆபிரகாம் லிங்கன்: தி ப்ரைரி இயர்ஸ் மற்றும் 1939 இல் வெளியிடப்பட்ட ஆபிரகாம் லிங்கன்: தி வார் இயர்ஸ் ஆகிய புத்தகங்கள் லிங்கனைப் பற்றிய புத்தகங்களில் அதிகம் விற்பனையாகும், மிகவும் பரவலாக வாசிக்கப்படும் புத்தகங்களாக தெரிவு செய்யப்பட்டன.[9] இவரது லிங்கனைப் பற்றிய புத்தகங்கள் தொலைக்காட்சி நாடகங்களுக்காக தழுவப்பட்டது. சாண்ட்பர்க் 1916 ஆம் ஆண்டில் சிகாகோ கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பையும் பின்பு 1918 இல் கார்ன்ஹஸ்கர்ஸ், 1920 இல் ஸ்மோக் அண்ட் ஸ்டீல் ஆகியவற்றையும் எழுதினார்.[10] 1919 ஆம் ஆண்டில் சாண்ட்பர்க் புலிட்சர் பரிசை வென்றார். 1922 ஆம் ஆண்டில் ரூட்டபாகா ஸ்டோரிஸ், அதைத் தொடர்ந்து 1923 இல் ரூட்டபாகா பிஜன்ஸ் மற்றும் பொடேடொ பேஸ் ஆகிய சிறுவர் புத்தகங்களையும் எழுதினார். 1926 ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கன்: தி ப்ரைரி இயர்ஸ், 1927 இல் தி அமெரிக்கன் சாங்பெக், எல்ம்ஹர்ஸ்டில் குட் மார்னிங் மற்றும் 1928 இல் அமெரிக்கா என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். 1919, 1940, 1951 ஆகிய ஆண்டுகளில் அவர் தனது படைப்புக்களுக்காக புலிட்சர் பரிசை பெற்றார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

சாண்ட்பர்க் 1907 ஆம் ஆண்டில் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் லிலியன் ஸ்டீச்சனை (1883-1977) என்பவரை சந்தித்தார். 1908 ஆம் ஆண்டில் அவர்கள் திருமணம் புரிந்தனர். இத் தம்பதியினருக்கு மூன்று புதல்விகள் பிறந்தனர்.

இறப்பு

1967 ஆம் ஆண்டு சாண்ட்பர்க் இயற்கை மரணம் எய்தினார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி அவரது பிறந்த வீட்டின் பின்னால்  புதைக்கப்பட்டது.[12]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்ல்_சாண்ட்பர்க்&oldid=3661708" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை