கிமி ராய்க்கோனன்

கிமி ராய்க்கோனன்(Finnish pronunciation: [ˈkimi ˈmɑtiɑs ˈræikːønen]; பிறப்பு: அக்டோபர்-17, 1979; இடம்- எஸ்பூ), பின்லாந்தைச் சேர்ந்த பந்தயத் தானுந்து ஓட்டுனராவார். பார்முலா ஒன்னில் ஒன்பது பருவங்கள் பங்கேற்ற பிறகு, ஐஸ் ஒன் ரேசிங் அணிக்காக உலக ரால்லி பெருவெற்றித் தொடரில் பங்கேற்கிறார். 2007-ஆம் ஆண்டு பார்முலா 1 தொடரில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

கிமி-மாடியாஸ் ராய்க்கோனன்
2010 பல்கேரிய திரளணி பந்தயத்தின் போது ராய்க்கோனன்
சுய விவரம்
நாட்டினம் Finnish
பிறப்பு17 அக்டோபர் 1979 (1979-10-17) (அகவை 44)
உலக திரளணி பெருவெற்றித்தொடர் பதிவு
செயல்படும் ஆண்டுகள்2009–present
அணிகள்Citroën Junior Team, ICE 1 Racing
திரளணி பந்தயங்கள்16
பெருவெற்றிகள்0
திரளணி வெற்றிகள்0
உயர்மேடை முடிவுகள்0
வழிக்கட்ட வெற்றிகள்1
மொத்த புள்ளிகள்49
முதல் திரளணி பந்தயம்2009 Rally Finland
கடைசி திரளணி பந்தயம்2011 Acropolis Rally
கிமி ராய்க்கோனன்
பிறப்பு17 அக்டோபர் 1979 (1979-10-17) (அகவை 44)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
செயல்படும் ஆண்டுகள்2001–2009
அணிகள்Sauber, McLaren, Ferrari
பந்தயங்கள்157 (156 starts)
பெருவெற்றிகள்1 (2007)
வெற்றிகள்18
உயர்மேடை முடிவுகள்62
மொத்த புள்ளிகள்579
துருவநிலை தொடக்கங்கள்16
அதிவேக சுற்றுகள்35
முதல் பந்தயம்2001 Australian Grand Prix
முதல் வெற்றி2003 Malaysian Grand Prix
கடைசி வெற்றி2009 Belgian Grand Prix
கடைசி பந்தயம்2009 Abu Dhabi Grand Prix

2001-ஆம் ஆண்டு சாபர்-பெட்ரொனாஸ் அணியின் வழக்கமான ஓட்டுனராக கிமி ராய்க்கோனன் பார்முலா 1-ல் நுழைந்தார். இதற்கு முன்னதாக வெகு சில இளநிலை திறந்த-சக்கர தானுந்து போட்டிகளில் மட்டுமே ஓட்டியிருப்பினும் சாபர்-பெட்ரொனாஸ் அணியின் தலைவர் பீட்டர் சாபர் கிமியின் செயல்திறனுக்கு உறுதியளித்ததன் பேரில், அகில உலக தானுந்து கூட்டமைப்பு கிமிக்கு சூப்பர் ஓட்டுநர் உரிமம் வழங்கியது[1]. 2002-ஆம் வருடம் மெக்லாரன்-மெர்சிடஸ் அணியில் சேர்ந்தார். 2003, 2005 பருவங்களில் பெருவெற்றிப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வருடங்களில் முறையே மைக்கேல் சூமாக்கர், ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோர் பெருவெற்றியாளர்களாயினர். 2003 மற்றும் 2005 வருடங்களில் மெக்லாரன் தானுந்துகளின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குரியதாயிருந்தது. அத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படவில்லையாயின் ராய்க்கோனன் எளிதில் பெருவெற்றியாளர் ஆகியிருப்பார் என்பது பல பார்முலா 1 மேதாவிகளின் கருத்தாகும்.

2007-ஆம் ஆண்டு கிமி ஃபெராரி அணிக்கு மாறினார். ஆண்டுக்கு $51 மில்லியன் சம்பளம் பெற்றதன் மூலம் தானுந்து உலகிலேயே மிக அதிக சம்பளம் பெறும் ஓட்டுனரானார்[2]. ஃபெராரியில் முதல் வருடத்திலேயே பெருவெற்றியாளரானார். மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோரை ஒரு புள்ளியில் வென்று பெருவெற்றியைக் கைப்பற்றினார். மேலும், தமது முதல் வருடத்திலேயே ஃபெராரியுடன் பெருவெற்றி பெற்ற மிகச்சில ஓட்டுநர்களில் ஒருவரானார். 2008-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒரு பருவத்தில் மிக அதிக "அதிவேக சுற்று"களை ஓட்டியவரானார். மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு(2010-ல்) ஃபெராரியிலிருந்து விலகி உலக திரளணி போட்டித்தொடரில் சிட்ரொயன் இளவல் அணிக்கான ஓட்டுநரானார். அதில் அவர் சிட்ரொயன் சி4 டபிள்யூ.ஆர்.சி. தானுந்தை ஓட்டினார். உலக திரளணி பெருவெற்றித்தொடரைத் தவிர நாஸ்கார் தொடரிலும் ஆர்வம் கொண்டவராயிருந்தார். ஆகையால் கைல் புஷ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காக கேம்பிங் வேர்ல்டு டிரக் சீரீஸில் பங்கெடுத்தார்[3].

கிமி ராய்க்கோனன் மிகவும் அமைதியானவராகவும் ஆசுவாசத்தோடிருப்பவராகவும் வாழ்விலும் தானுந்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு படியையும் ஆராய்ந்து எடுப்பவராகவும் அறியப்படுகிறார். அதனாலேயே, அவர் "ஐஸ்மேன்" என்ற அடைமொழியால் அறியப்படுகிறார். தனது இடது முன்கையின் கீழ்புறத்தில் "ஐஸ்மேன்" என்று பச்சைகுத்தியுள்ளார். அவரது தலைக்கவசதிலும் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது மற்ற பட்டப்பெயர்கள் கிம்பா, ராய்க்கா, கிம்ஸ்டர்.

2008-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 100 புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இரண்டு பார்முலா 1 ஓட்டுநர்களில் இவரும் ஒருவர். மற்றையவர் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆவார். அந்த பட்டியலில் அவர் 2008-ஆம் ஆண்டு 36-வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 41-வது இடத்திலும் இருந்தார்[4]. மேலும் அதே பட்டியலில் அதிக சம்பளம் பெறும் புகழ்பெற்றவர்களில் 26-வது இடத்திலும் விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் 5-வது இடத்திலும் (முதல் நான்கு இடங்கள் முறையே டைகர் வுட்ஸ்,டேவிட் பெக்காம்,மைக்கேல் ஜோர்டான்,பில் மிக்கல்சன்) இடம்பெற்றிருந்தார். 2009-ஆம் ஆண்டு அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் டைகர் வுட்ஸுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெற்றிருந்தார்[5].

உசாத்துணைகள்

குறிப்புதவி நூல்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kimi Räikkönen
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிமி_ராய்க்கோனன்&oldid=3416867" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை