குமிழ்முனைப் பேனா

குமிழ்முனைப் பேனா (ballpoint pen) என்பது உள்ளக மை தாங்கியையும் கோள வடிவிலான குமிழ்முனையையும் கொண்ட எழுதுகோல் ஆகும். உள்ளகத் தாங்கிக் குழாய் எழுதுத் தன்மையான மையைக் கொண்டிருக்கும். குமிழ்முனை சுழலும்போது மை வெளியேறி எழுதும். குமிழ்முனைக் கோளம் பொதுவாக 0.5மிமீ முதல் 1.2 மிமீ வரையான விட்டத்தை கொண்டதாகவும், பித்தளை, உருக்கு, தங்குதன் காபைட்டு ஆகியவற்றால் ஆனதாகவும் இருக்கும்[1].

குமிழ்முனைப் பேனா, பொருத்தப்பட்டதும் பாகங்களும்

வரலாறு

An authentic "birome", made in Argentina by Bíró & Meyne

பொருளாதார ரீதியிலும் பயன்பாட்டிலும் மேம்பட்ட குமிழ்முனைப் பேனாக்கள் 20ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பங்களால் தான் தோற்றம் பெற்றன. ஆரம்பகாலத்தில் குமிழ்முனைப் பேனாவில் வடிவமைப்பில் பலமுறை தோல்விகளைக் கண்டது. 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலியால் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பே குமிழ்முனைப் பேனா எனும் கருத்தும் காணப்படுகின்றது. குமிழ்முனைப் பேனாவுக்கான முதலாவது காப்புரிமம் 1888 அக்டோபர் 30 ஆம் நாள் ஜோன் லோட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது[2],[3]. இவர் ஒரு தோல் தயாரிப்பாளர். இத்தோற்பொருட்களில் எழுதுவதற்கு ஊற்றுமைப் பேனாக்கள் பொருத்தமற்றவையாயிருந்ததால் இதனைப் பயன்படுத்தினார். லோட்டின் பேனாவில் உருக்கினாலான சிறிய சுழலும் கோளவுருக் குமிழ் அடைப்பான் ஒன்றின் மூலம் நிறுத்தப்பட்டிருந்தது.

1904 க்கும்1946க்கும் இடையில் பல மாற்று ஊற்றுமைப் பேனாக்கள் கண்டறியப்பட்டன.சிலாவொல்யுப் எடுவாட் பென்காலா 1907 ஆம் ஆண்டு திண்ம மை ஊற்றுமைப் பேனாவினை கண்டறிந்தார்.1910 இல் சேர்மனி கண்டுபிடிப்பாளர் பாவும்(Baum) மற்றொரு குமிழ்முனைப் பேனாவுக்கு சொத்துரிமை பெற்றார். 1916 இல் மற்றொரு குமிழ்முனைப் பேனா Van Vechten Riesburg இனால் கண்டறியப்பட்டது. இக்கண்டுப்புகளில் எல்லாம் ஒடுங்கிய குழாயின் முனையில் சிறு கோளம் இடப்பட்டு இருந்தது. இது உள்ளேயோ வெளியேயோ வழுக்கி விழுதல், சீரற்று எழுதுதல்,மைகசிதல் என பல பிரச்சினைகளைக் கொடுத்தது.[4]

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குமிழ்முனைப்_பேனா&oldid=3550561" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை