கொண்டைக்குருவி

கொன்டைக்குருவி (bulbul) பைக்னோனோடிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான, பாடும் பறவைகளின் வரிசையில் உளள ஓர் குருவி இனத்தைச் சேர்ந்த பறவையாகும். இந்த வன உயிரினங்கள் பச்சைக் கொண்டைக்குருவி, பழுப்புக் கொண்டைக்குருவி, இலைவிரும்பி, அல்லது முள்மயிர்க்குருவி.ஆகியவை இவ்வினத்தால் அறியப்படுகின்றன. இந்தப் பறவைக் குடும்பம் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்கு, வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தோனேசியா மற்றும் வடக்கே ஜப்பான் வரை பரவியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல தீவுகளில் ஒரு சில தீவு இனங்கள் காணப்படுகின்றன. 27 பேரினங்களில் 150 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு வகையான பல்வேறு இனங்கள் பரவலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன, ஆப்பிரிக்க இனங்கள் பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. ஆசியாவில் மழைக்காடு இனங்கள் அரிதானவை, இருப்பினும், ஆசியக் கொண்டைக் குருவிகள் அதிகமாக திறந்த பகுதிகளையே விரும்புகின்றன.

வகைபிரித்தல் மற்றும் முறை

சொற்பிறப்பு

புல்புல் என்ற சொல், இராப்பாடி எனப்பொருள்படும் பாரசீக அல்லது அரபு (بلبل),[1][2] மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.[3] ஆனால் ஆங்கிலத்தில், புல்புல் என்பது வேறுபட்ட குடும்பத்தைச் சேர்ந்த பாடும் பறவைகளைக் குறிக்கிறது.

வகைப்பாடு

இந்த இனங்களின் குணவியல் வகைகளின் படி ( (Delacour, 1943). பாரம்பரியமாக இவைகள் பைக்னோனோடஸ், பைலாஸ்ட்ரெபஸ், கிரினிகர், குளோரோசிக்லா என்ற நான்கு குழுக்களாக,ப் பிரிப்பதே மரபாக இருந்து வந்தது. இருப்பினும், மிகச் சமீபத்திய பகுப்பாய்வுகள் இந்த ஏற்பாடு தவறான பண்புகளின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது நிரூபித்தன..

நிறப்புரி பி டி.என்.ஏ. வரன்முறையிடலில் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியினை ஒப்பீடு செய்கையில் ஐந்து இனங்களில் பைலாஸ்ட்ரெபஸ் என்ற இனம் கொண்டைக்குருவி வகையைச் சேர்ந்தவை இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மடகாஸ்கரில் இதற்குப்பதிலாகப் பாடும் பறவைகள் புதிரான குழு ஒன்று கண்டறியப்பட்டு இப்போதைக்கு இவை பொதுவாக மலகாசி வார்ப்ளர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இதேபோல், டி.என்.ஏ nDNA RAG1 மற்ரும் RAG2 மரபணுக்கள் வரிசைமுறை பகுப்பாய்வு (பெர்ஸ்ஃபோர்டு மற்றும் பலர்., 2005) நிக்கேட்டர் என்ற இனம் கொன்டைக்குருவிகள் இனத்தைச் சேர்ந்தவை இல்லை என்று கூறுகிறது. பழைய ஏற்பாடுகள் உயிர் புவியியலை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது என்று, கிரினிகர் இனத்தை ஆப்பிரிக்கப் பரம்பரை என்றும் ஆசியப் பரம்பரை என்றும் பிரிக்கவேண்டும் என்றும் விளக்கிய பாஸ்கெட் மற்றும் பலர் மேற்கொண்ட ஆய்வால்(2001) சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு என்.டி.என்.ஏ மற்றும் 2 எம்.டி.டி.என்.ஏ காட்சிகளின் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, மொய்ல் & மார்க்ஸ் (2006) என்பவர்கள், செய்த ஆய்வுகளின்படி ஆசிய இனங்களும், பச்சைக் கொண்டைக்குருவிகள் மற்றும் முள்மயிர்க் குருவிகளின் ஒரு ஆப்பிரிக்க இனங்களுள் தங்க பச்சைக் கொண்டைக்குருவி மிகவும் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. மேலும் இவை தானாகவே ஒரு சொந்தக் குழுவை உருவாக்குவது கண்டறியப்பட்டது. இவற்றின் சில வகைப்பாடுகள் ஒற்றைத் தொகுதியில் இல்லை. மேலும் இந்த பேரின வகைகளுக்குள் உறவுகளைத் தீர்மானிப்பதில் மேலும் விரிவான கூடுதல் ஆய்வுகள் தேவையாக உள்ளன.

முறையான பட்டியல்

தற்போது, 27 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[4]

பிஞ்ச்பில்
செம்மீசைச் சின்னான்

கொண்டைக்குருவிகள் குறுகிய கழுத்து கொண்ட மெல்லிய பாடும் பறவைகள் ஆகும். இவற்றின் வால்கள் நீளமாகவும், இறக்கைகள் குறுகியதாகவும் வட்டமாகவும் இருக்கும். ஏறக்குறைய அனைத்து உயிரினங்களிலும் அலகு சற்று நீளமானதாகவும் இறுதியில் சற்று வளைந்தும் காணப்படும். இந்த அலகுகளின் நீலங்கள் பல இனங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மிகச்சிறிய பச்சைக் கொண்டைக்குருவியில் அலகு 13 செ.மீ நீளமாகவும் வைக்கோற்தலை கொண்டைக்குருவியின் அலகு 29 செ.மீ வரையானதாகவும் வேறுபடுகின்றன   ஒட்டுமொத்தமாக பாலினங்களில் வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியாக இருக்கின்றன, இருப்பினும் பெண் குருவிகள் சற்று சிறியவனவாகக் காணப்படுகின்றன. ஒரு சில உயிரினங்களில் வேறுபாடுகள் மிகப் பெரியவையாக உள்ளன. அவைகள் செயல்பாட்டு ரீதியாக வேறுபட்ட இனங்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளன. சில இனங்களின் மென்மையான தழும்புகள் மஞ்சள், சிவப்பு அல்லது ஆரஞ்சு துவாரங்கள், கன்னங்கள், தொண்டை அல்லது சூப்பர்சிலியா ஆகியவற்றுடன் வண்ணமயமானவையாக உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மந்தமானவை. இவை ஒரே சீராக ஆலிவ்-பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறத்தில் இருக்கும். மந்தமான நிற கண்கள் கொண்ட இனங்கள் பெரும்பாலும் கண்களின் ்கீழே வளையங்களைக் கொண்டவையாக உள்ளன. சிலவற்றில் மிகவும் தனித்துவமான முகடுகள் உள்ளன.கொண்டைக் குருவிகள் பெரும்பாகும் மிகவும் அதிகசத்தத்துடன் குரல் எழுப்பக்கூடியவை. பெரும்பாலான இனங்களின் அழைப்புகள் உடைந்த அல்லது கரகரப்பானவை என விவரிக்கப்படுகின்றன. ஒரு எழுத்தாளர் பழுப்புக் காது கொன்டைக்குருவி பாடும் பாடலானது 'எந்தவொரு பறவையை விடவும் மிகவும் நாராசமான சத்தம்" என்று விவரித்த்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொண்டைக்குருவி&oldid=3933422" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை