சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic, SADR) (அரபு மொழி: الجمهورية العربية الصحراوية الديمقراطية‎, எசுப்பானியம்: República Árabe Saharaui Democrática) மேற்கு சகாரா முழுமைக்கும் இறையாண்மை கோருகின்ற பகுதியும் அங்கீகரிக்கப்பட்ட அரசாகும். இந்த அரசை பெப்ரவரி 27, 1976இல் போலிசரியோ முன்னணி பிர் லெலூவில் நிறுவியது. தற்போது தான் கோரும் நிலப்பகுதியில் 20% முதல் 25% வரை கட்டுப்படுத்துகின்றது. இதன் தலைநகரம் தீபாரீத்தீ ஆகும். இந்த அரசின் கீழுள்ள ஆட்புலத்தை விடுவிக்கப்பட்ட பகுதிகள் அல்லது கட்டற்ற ஆள்புலம் என அழைக்கின்றது. ஏனைய பகுதிகளை மொரோக்கோ கட்டுப்படுத்துவதுடன் அரசாண்டு வருகின்றது. இப்பகுதிகளை மொரோக்கோ தென் மாநிலங்கள் என அழைக்கின்றது. சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு மொரோக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எனவும் மொரோக்கோ சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் கீழுள்ள பகுதிகளை இடைநிலை வலயம் என்றும் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மேற்கு சகாரா முழுமையையும் எசுப்பானியாவின் சார்பு பகுதியாக கருதுகின்றது.[1]

கரைச்சுவரைக் காட்டும் படிமம். இச்சுவர் மேற்கு சகாராவில் போலிசரியோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளையும் பிரிக்கின்றது. பெரிய மஞ்சள் பகுதி சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை