சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா (பிறப்பு: பிப்ரவரி 22, 1936) மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேரராசிரியாகப் பணிபுரிந்தவர்.[2] இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சாலமன் பாப்பையா
பிறப்புபெப்ரவரி 22, 1936 (1936-02-22) (அகவை 88)
சாத்தங்குடி[1], மதுரை, தமிழ்நாடு
இருப்பிடம்மதுரை
தேசியம்இந்தியர்
கல்வி(இளங்கலைப் பட்டம்) மதுரை அமெரிக்கன் கல்லூரி, (முதுகலைப் பட்டம்) மதுரை தியாகராசர் கல்லூரி
பணிஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவதுபட்டிமன்ற நடுவர், இலக்கிய விளக்கவுரையாளர்
சமயம்கிறித்துவம்
வாழ்க்கைத்
துணை
திருமதி செயபாய்
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள்

திரைப்படங்களில்

இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நூல்கள்

சாலமன் பாப்பையா இலக்கியத் திறனாய்வும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். மேலும் மதுரை கம்பன கழகம் ஒருங்கிணைக்கும் திங்கள் சொற்பொழிவுகளை ஆண்டுதோறும் தொகுத்து நூலாக வெளியிடுகிறார்.

இலக்கியத் திறனாய்வு

  1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை
  2. உரைமலர்கள் [3]


உரைகள்

  1. திருக்குறள் உரை
  2. புறநானூறு புதிய வரிசை வகை; 2019; கவிதா பப்ளிகேசன், சென்னை.[4]
  3. அகநானூறு - 3 தொகுதிகள்2019; கவிதா பப்ளிகேசன், சென்னை. [5]

தன்வரலாறு

  1. பட்டிமன்றமும் பாப்பையாவும்; விகடன் பிரசுரம், சென்னை.

தொகுத்தவை

  1. அவர்கள் கண்ட ராமன்
  2. இவர்கள் நோக்கில் கம்பன்
  3. கம்பவனத்தில் ஓர் உலா; 2015
  4. கமபனில் உலகியல்
  5. கம்பனின் தமிழமுது; 2018
  6. கம்பனைத்தேடி
  7. கம்பன் அமுதில் சில துளிகள்

விருதுகள்

வாழ்க்கை

மதுரை, திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடியில் பிறந்தவர் பாப்பையா. இவரும் இவரது மனைவி ஜெயபாயும் மதுரையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[2]

உசாத்துணை

நிலாச்சரல்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாலமன்_பாப்பையா&oldid=3493555" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை