சா ஆலாம்

சா ஆலாம், (மலாய்: Shah Alam; ஆங்கிலம்: Shah Alam; சீனம்: 莎亞南); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.

சா ஆலாம்
Shah Alam
சிலாங்கூர்
அலுவல் சின்னம் சா ஆலாம்
சின்னம்
அடைபெயர்(கள்):
மந்தாரை நகரம்
Bandar Anggerik; Orchid City
குறிக்கோளுரை:
இண்டா பெசுதாரி
Indah Bestari
Map
ஆள்கூறுகள்: 03°04′20″N 101°31′00″E / 3.07222°N 101.51667°E / 3.07222; 101.51667
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்1. பெட்டாலிங் மாவட்டம்
2. கிள்ளான் மாவட்டம்
அமைப்பு1963
மாநிலத் தலைநகர் தகுதி7 டிசம்பர் 1978
நகராண்மைக் கழகத் தகுதி1 சனவரி 1979
மாநகர்த் தகுதி10 அக்டோபர் 2000
அரசு
 • மாநகர் முதல்வர்
(மேயர்)
டத்தோ சமானி அகமட் மன்சுர்[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்290.3 km2 (112.1 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்740,750
 • தரவரிசை6-ஆவது இடம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு40xxx, 47xxx
தொலைபேசி எண்கள்+60-3
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்http://www.mbsa.gov.my

சா ஆலாம் மாநகரம் மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம். இந்த நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைப் பட்டணமும் ஆகும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1974-ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசமாக கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டது. அதுவரை கோலாலம்பூர் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும், மலேசியாவின் தலைநகரமாகவும் விளங்கி வந்தது.

பொது

அதன் பின்னர், 1978-இல் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் பிரகடனம் செய்யப்பட்டது. மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் சா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது.

இந்த நகரத்தின் சாலைகள், கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், மக்கள் குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், வணிகத் தளங்கள், மருத்துவ மையங்கள், பொழுது போக்கு மையங்கள் அனைத்துமே திட்டமிடப்பட்டு மிக நவீனமாக, உருவாக்கப்பட்டுள்ளன.

வரலாறு

1957-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. மலேசியாவின் ’’நவீனமயத் தந்தை” என்று அழைக்கப்படும் துன் அப்துல் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியா மிகத் துரிதமான வளர்ச்சியை அடைந்தது. துன் அப்துல் ரசாக் மலேசியாவின் இரண்டாவது பிரதமர் ஆவார்.[3]

சா ஆலாமின் பழைய பெயர் சுங்கை ரெங்கம். 19-ஆம் நுற்றாண்டில் அதன் சுற்றுப் பகுதிகளில் பல ரப்பர், செம்பனை தோட்டங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர். பின்னர் சுங்கை ரெங்கம் எனும் பெயரில் இருந்த அந்தப் பகுதி பத்து தீகா என்று மறுபெயர் பெற்றது.

சுங்கை ரெங்கம்

1963-ஆம் ஆண்டு பத்து தீகா பகுதியில் இருந்த சுங்கை ரெங்கம் ரப்பர் தோட்டத்தில் ஒரு புதிய நகரை உருவாக்குவது என சிலாங்கூர் மாநில அரசாங்கம் முடிவு செய்தது. ஐக்கிய நாடுகள் அவையைச் சேர்ந்த நகரத் திட்ட அமைப்பாளர் வி. அந்தோலிக் என்பவர் புதிய நகருக்கு அந்த இடத்தைத் தேர்வு செய்யும்படி சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். புதிய நகரப் பகுதி கோலாலம்பூருக்கும், கிள்ளான் துறைமுகத்திற்கும் நடுமையத்தில் இருந்தது.[4]

முன்பு சிலாங்கூர் மாநிலத்திற்ன் சுல்தானாக இருந்த சுல்தான் இசாமுடின் ஆலாம் சா என்பவரின் பெயரில் புதிய நகருக்கு சா ஆலாம் என்று பெயர் சூட்டப்பட்டது. சிலாங்கூரில் பல நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், சாலைகளுக்கு சுல்தான் இசாமுடின் ஆலாம் சாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாக மையம்

1974 பிப்ரவரி மாதம் முதல் தேதி கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், சிலாங்கூர் மாநிலத்தின் நிர்வாக மையமாக ஷா ஆலாம் மாற்றம் கண்டது. பின்னர் 1978 டிசம்பர் 7-ஆம் தேதி சா ஆலாம் அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சா_ஆலாம்&oldid=3778801" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை