சிறிய மின்சிட்டு

குருவி சிற்றினம்
சிறிய மின்சிட்டு
ஆண் சின்னச் சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
பெரிகுரோகாக்டசு
இனம்:
பெ. சின்னமோமியூசு
இருசொற் பெயரீடு
பெரிகுரோகாக்டசு சின்னமோமியசு
லின்னேயஸ், 1766
வேறு பெயர்கள்
  • மோடாசிலா சின்னமோமியா லின்னேயஸ், 1766

சிறிய மின்சிட்டு (Small Minivet)(பெரிகுரோகாக்டசு சின்னமோமியூசு) என்பது ஒரு சிறிய குருவி சிற்றினம் ஆகும். இந்த மின்சிட்டு வெப்பமண்டல தெற்கு ஆசியாவில் இந்திய துணைக்கண்டத்திலிருந்து கிழக்கே இந்தோனேசியா வரை காணப்படுகிறது.

விளக்கம்

சிறிய மின்சிட்டு 16 செ.மீ. நீளமுடையது. இது கருமையான வலிமையான அலகினை கொண்டுள்ளது. நீண்ட இறக்கைகளையும் கொண்டது. ஆண் மின்சிட்டானது பிற மின்சிட்டுக்களிலிருந்து பளபளப்பற்ற சாம்பல் மேல் பகுதி மற்றும் தலை, ஆரஞ்சு நிற கீழ் பகுதிகள், வயிற்றுப் பகுதி, ஆரஞ்சு நிற வால் விளிம்புகள், மூலம் வேறுபடுகிறது.[2]

பெண் மின்சிட்டின் மேல்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் கீழ்ப்பகுதியும் முகமும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

இந்த சிறிய மின்சிட்டுகளில் இன வேறுபாடுகள் மிகுதியாக உள்ளன.

துணையினங்கள்[3]

நடத்தை

சிறிய மின்சிட்டு என்பது முள் காடு மற்றும் புதர்க்காடுகளில் இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். கூடு என்பது ஒரு கோப்பை வடிவ அமைப்பாகும். இதில் இரண்டு முதல் நான்கு வரை, புள்ளிகளுடன் கூடிய முட்டைகள் இடும். பெண் மின்சிட்டுகள் முட்டைகளை அடைகாக்கும்.

இந்த மின்சிட்டு மரங்களில் உள்ள பூச்சிகளைப் பறந்து பிடிப்பதன் மூலமோ அல்லது அமர்ந்திருக்கும்போதோ பிடிக்கிறது. சிறிய மின்சிட்டு சிறிய மந்தைகளாகக் காணப்படும்.

படங்கள்

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிறிய_மின்சிட்டு&oldid=3807391" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்