சிவிங்கிப்புலி

Cheetah[1]
புதைப்படிவ காலம்:Late Pliocene to Recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Felinae
பேரினம்:
Acinonyx

Brookes, 1828
இனம்:
A. jubatus
இருசொற் பெயரீடு
Acinonyx jubatus
(Schreber, 1775)
மாதிரி இனம்
Acinonyx venator
Brookes, 1828 (= Felis jubata, Schreber, 1775) by monotypy
சிவிங்கிப்புலியின் வாழிட வரைப்படம்

வேங்கை அல்லது சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும்.[3]

உடல் அமைப்பு

வேங்கை
சிவிங்கிப் புலி, சிறுத்தை, ஜாகுவார் - வித்தியாசங்கள்

சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேங்கையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.

வசிப்பிடம்

வேங்கை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.

உணவுப்பழக்கம்

வேங்கை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.

வாழ்க்கைமுறை

பெண் வேங்கை தன் குட்டியுடன்

பெண் வேங்கைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் வேங்கைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.

சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பழக்கப்படுத்திய சிவிங்கிப்புலியைக் கொண்டு தென் குசராத்தில் மானை வேட்டாயாடும் 1812 ஆண்டைய ஓவியம்

வேட்டைப் பயன்பாடு

இந்த விலங்கை பழங்காலத்தில் இருந்து மனிதர்கள் பழக்கப்படுத்தி வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தில் குறுநில மன்னர்கள் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினர்.[4]

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிவிங்கிப்புலி&oldid=3618648" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை