சி. விஜயதரணி

இந்திய அரசியல்வாதி

சி. விசயதரணி (S Vijayadharani) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 24 பிப்ரவரி 2024 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.[5]

சி. விஜயதரணி
2020 இல் சி. விஜயதரணி
முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
23 மே 2011 – 24 பிப்ரவரி 2024
தமிழக முதல்வர்
முன்னையவர்ஜி. ஜான் ஜோசப்
தொகுதிவிளவங்கோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 13, 1969 (1969-10-13) (அகவை 54)
கன்னியாகுமரி, தமிழ்நாடு
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2024 வரை)
துணைவர்
சிவகுமார் கென்னடி (இற. 2016)
[1]
பிள்ளைகள்2
வாழிடம்சென்னை
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

குடும்பம்

இவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியாவார்.[6] விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரசு தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசுக் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் சிவகுமார் கென்னடி என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.[7] விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

இந்திய தேசிய காங்கிரசு

இவர் தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் இருந்தார்.[8] 2016 ஆண்டில் இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக கர்நாடகாவில் நியமிக்கப்பட்டார்.[9] 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் இவர் 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதே விளவங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சிப் பதவிகள்

  • தலைவர், தமிழ்நாடு மகளிர் அணி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி, (6 ஆகஸ்டு – 22 சனவரி 2016)
  • பொதுச் செயலாளர், அகில இந்திய மகளிர் காங்கிரசு (4 மார்ச் 2016 முதல் )[10]
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கொறடா.[11]. (24 பிப்ரவரி 2023 வரை)

பாஜக (2024-தற்போது)

தனது பதவி விலகல் கடிதத்தை காங்கிரசு கட்சி அலுவலகத்தில் பகிர்ந்து கொண்டார், பின்னர் 24 பிப்ரவரி 2024 அன்று தில்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் லோ. முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[12][13] "காங்கிரசு கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவும், ஏற்கவும் காங்கிரசுக்கு மனநிலை இல்லை. பெண்களுக்கான வாய்ப்புகள் காங்கிரசு கட்சியில் மறுக்கப்படுகின்றன. ஆனால் பாஜகவில் முத்தலாக், இசுலாமிய பெண்களுக்கான சொத்துரிமை என பாஜக பெண்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது, பாஜக ஆட்சியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், காங்கிரசு காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்." என்று பாஜகவில் இணைந்த பிறகு தில்லியில் கூறினார்.[14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சி._விஜயதரணி&oldid=3943599" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை