தமிழ்நாடு சட்டப் பேரவை

(தமிழ்நாடு சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவை
16-வது தமிழ்நாடு சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
எம். அப்பாவு, திமுக
12 மே 2021 முதல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்234
அரசியல் குழுக்கள்
அரசு (158)

எதிர்க்கட்சி (62)

மற்றவை (13)

வெற்றிடம் (1)

  •      வெற்றிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
6 ஏப்ரல் 2021
அடுத்த தேர்தல்
2026
கூடும் இடம்
13°04′54″N 80°17′09″E / 13.081539°N 80.285718°E / 13.081539; 80.285718
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம்
www.assembly.tn.gov.in

இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.[1] தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16வது சட்டப் பேரவை ஆகும்.

வரலாறு

சென்னை மாகாணம்

தற்போதைய தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919-இன் படி, சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்[1] ஜனவரி 9 1921 ல் கூடியது. இதன் துவக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரசரின் தந்தைவழி உறவான) அவர்களால், அப்பொழுதைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் துவக்கிவைக்கப்பட்டது[1].

இந்திய அரசாணை 1935-இன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, ஈரவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டமன்றம் முறையே சூலைத் திங்கள், 1957-ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் ஒய்வு பெறுமாறு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஒய்வு பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்குமாறு முறைபடுத்தப்பட்டது.

ஈரவை உதயம்

சட்டப் பேரவை அல்லது சட்டமன்றம் கீழவை

இந்திய அரசு ஆணை 1935 ன்படி இம்மன்றம் இரு அவைகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டு மன்றமாக அழைக்கப்பட்டது. கூட்டுப் பேரவையில் 375 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்திருந்தது. அதில் 125 உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளர்களால் (மறைமுகத் தேர்வு) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். இம்மன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.[1]

சட்டமன்ற மேலவை அல்லது சட்ட மேலவை

சட்ட மேலவை (மாநிலங்களவை) இது நிரந்தர மன்றம் (கலைக்கப்படுவதை இது குறுக்கிடாது அல்லது கீழ்படுத்தாது). இந்த அவையின் மொத்த உறுப்பினர்களாக 260 பேரும் அதில் 104 பேர் நேரடியாக இந்திய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர், 6 பேர் பிரதம ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) ஆல் தேர்ந்தெடுக்கப்படுவர். 128 பேர் பிரதேச சமுதாயத் தொகுதிகளிலும் இருந்தும் மற்றும் 22 பேர் சிறுபான்மை, பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.[1]

அதிகாரங்கள்

இரு அவைகளும் சம அதிகாரம், சம ஆற்றல் கொண்டவை. ஆனால் நிதி, வழங்கல் போன்ற மசோதாக்கள் சட்டமன்றத்திலேயே (கீழ் அவை) நடைபெறும். இரு அவைகளுள் ஒன்று சட்டமன்றம் கீழவை என்றும் மற்றொன்று சட்ட மன்ற மேலவை என்றும் அழைக்கப்பட்டன.[1]

இந்திய அரசியலமைப்பில் வகுத்துள்ளவை

மாநில சட்டப் பேரவை [2]

(இந்தியில் விதான் சபை) சட்ட மன்றத்தின் கீழ் அவையான மாநில சட்டப் பேரவை இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் அரசுகளுக்கு சட்டமியற்றும் இடமாக செயல்படுகின்றது.

இப்பேரவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இம்மன்றத்தில் பங்கு பெறுவர்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

இம்மன்றத்தின் தலைவராக சட்டப் பேரவைத் தலைவர் செயல்படுவார். இந்திய அரசியலமைப்பின் படி இதன் அதிகப்பட்ச உறுப்பினர்களாக 500 பேர்களுக்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்காளாக 60 பேர்களுக்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.

அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை

இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)[3]குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சி

பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெற இரண்டு முக்கிய விதிகள் உள்ளன. முதலாவதாக ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். அடுத்ததாக குறைந்தது 24 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். இவை இரண்டையும் பெற்றிருக்கும் கட்சி பிரதான எதிர்கட்சியாக கொள்ளப்பபடும். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சருக்குரிய தகுதியைப் பெறுவார்[4].

நியமன உறுப்பினர்

இவ்வுறுப்பினர்களில் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினரும் நியமிக்கப்படுவார். இது மரபுப்படி நியமிக்கப்பெற்று பின்பற்றப்படுகின்றது. இவ்வுறுப்பினர் விவாதங்களிலோ, மன்ற வாக்களிப்புகளிலோ பங்குபெறுவதில்லை.

காலவரை

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் இவ்வுறுப்பினர்களின் இருக்கைகள் வெறுமையாக்கப் (காலியாக) பெற்று மீண்டும் மாநில பொதுத் தேர்தல் நடத்தப்பெறும். இப்பேரவை உறுப்பினர்களில் அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடையவர்.

பேரவை கலைப்பு

அவசர காலப் பிரகடன காலங்களில் இப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப் படுவர் அல்லது மன்றமும் கலைக்கப்படலாம். இப்பேரவையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கயில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில் அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இப்பேரவை கலைக்கப்படும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அம்மாநில அரசு கலைக்கப்பட்டதாக பொருள் கொள்ளப்படும்.

அமைவிடம்

புனித ஜார்ஜ் கோட்டை
செனட் ஹவுஸ், சென்னைப் பல்கலைக்கழக வளாகம்

தமிழ்நாடு சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் தற்போது உள்ளது. 1921-37 போது, சட்டமன்றத்தின் முன்னோடி சபை, கோட்டைக்குள் இருக்கும் சபை அறையில் (council chambers) கூடியது. அண்ணா சாலை, அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள சட்டசபை செனட் ஹவுசில் (senate house) 14 ஜூலை, 1937 - 21 டிசம்பர் 1938 வரையும், ஜனவரி 27, 1938 -26 அக்டோபர் 1939 காலகட்டத்தில் விருந்து மண்டபத்திலும் (பின்னர் ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது) கூடியது. 1946-52 போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் கூடியது. 1952ல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், அரசாங்கத்தின் எஸ்டேட் வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்திற்கு நகர்த்தப்பட்டது. அப்போதைய சட்டமன்ற கட்டிடம் 260 பேர் மட்டுமே அமரும் படி இருந்ததால் மார்ச் 1952 ல் இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. பின்னர் 3 மே 1952 அன்று அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்திற்கு நகர்ந்தது. இப்புதியகட்டிடத்தில் (பின்னர் "கலைவாணர் அரங்கம்," எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்) 1952-56 இல் செயல்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. அதனால் சட்டமன்றம் 1956ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.[5]</ref>[6] 2004 இல் 12வது சட்டமன்றத் தொடரின் போது, ஜே. ஜெயலலிதாவின் அதிமுக அரசு முதலில் ராணி மேரி கல்லூரிக்கும், பின்னர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கும் சட்டமன்றத்தை மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இவ்விரண்டு முயற்சிகளையும் பொதுமக்களிடையே எதிர்ப்பேற்பட்டதால் அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.[7] 13 வது சட்டமன்றத் தொடரின் போது, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஓமந்தூரார் அரசு தோட்டட்த்தில் சட்டமன்றம் மற்றும் அரசு தலைமைச் செயலகத்தை மாற்ற ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தது. 2007 இல், ஜெர்மன் கட்டடக்கலை நிறுவனம் ஜிஎம்பி இண்டெர்நேசனல் புதிய சட்டமன்ற வளாகத்தை வடிவமைத்துக் கட்டும் போட்டியை வென்றது; கட்டுமானம் 2008 ல் தொடங்கி 2010 ல் முடிக்கப்பட்டது. மார்ச் 2010இல் புதிய கட்டிடம் துவக்கப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது. 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பிறகு, சட்டசபை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.[8][9][10][11]

காலம்இடம்
1921-1937கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
14 ஜூலை 1937 - 21 டிசம்பர் 1938செனட் ஹவுஸ், சென்னை பல்கலைக்கழக வளாகம், சேப்பாக்கம்
27 ஜனவரி 1938 - 26 அக்டோபர் 1939விருந்து மண்டபம் (ராஜாஜி மண்டபம்), அரசுத் தோட்டம் (ஓமந்தூரார் வளாகம்), மவுண்ட் ரோடு
24 மே 1946 - 27 மார்ச் 1952கவுன்சில் அறைகள், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
3 மே 1952 - 27 டிசம்பர் 1956கலைவானர் அரங்கம், அரசு தோட்டம் (ஓமந்தூரார் வீடு)
29 ஏப்ரல் 1957 - 30 மார்ச் 1959சட்டமன்ற கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
20-30 ஏப்ரல் 1959அரன்மொர் அரண்மனை, உதகமண்டலம் (ஊட்டி)
31 ஆகஸ்ட் 1959 - 11 ஜனவரி 2010சட்டமன்ற கூடம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
16 மார்ச் 2010 - 15 மே 2011புதிய சட்டசபை வளாகம், ஓமந்தூரார் அரசு வளாகம், அண்ணா சாலை
16 மே 2011 - 13 செப்டம்பர் 2020செயின்ட் ஜார்ஜ் கோட்டை
14 செப்டம்பர் 2020 – தற்போது வரைகலைவாணர் அரங்கம்

சட்டசபையில் கட்சிகளின் வலிமை

கட்சிஉறுப்பினர்கள்
திராவிட முன்னேற்றக் கழகம்133
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்66
இந்திய தேசிய காங்கிரசு18
பாட்டாளி மக்கள் கட்சி5
பாரதிய ஜனதா கட்சி4
விடுதலை சிறுத்தைகள் கட்சி4
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)2
மொத்தம்234

அமைச்சர்கள் சபை (7 மே 2021 - தற்போது வரை)

வ. எண்.பெயர்தொகுதிபொறுப்புதுறைகள்கட்சி
முதலமைச்சர்
1.மு. க. ஸ்டாலின்கொளத்தூர்முதலமைச்சர்
  • பொது
  • பொது நிர்வாகம்
  • இந்திய ஆட்சிப்பணி
  • இந்திய காவல் பணி
  • அகில இந்திய பணி
  • மாவட்ட வருவாய் அலுவலர்கள்
  • காவல்
  • உள்துறை
  • சிறப்பு முயற்சி
  • சிறப்புத் திட்ட செயலாக்கம்
  • மாற்றுத் திறனாளிகள் நலன்
திமுக
அமைச்சர்கள்
2.துரைமுருகன்காட்பாடிநீர்வளத் துறை அமைச்சர்
  • சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம்
  • மாநில சட்டமன்றம்
  • ஆளுநர் மற்றும் அமைச்சரவை
  • தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
  • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
திமுக
3.பழனிவேல் தியாகராஜன்மதுரை மத்திநிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
  • நிதித்துறை
  • திட்டம்
  • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்
  • அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்
திமுக
4.கே. என். நேருதிருச்சி மேற்குநகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
  • நகராட்சி நிர்வாகம்
  • நகர்ப்பகுதி
  • குடிநீர் வழங்கல்
திமுக
5.இ. பெரியசாமிஆத்தூர் (திண்டுக்கல்)கூட்டுறவுத் துறை அமைச்சர்
  • கூட்டுறவு
  • புள்ளியியல்
  • முன்னாள் ராணுவத்தினர் நலன்
திமுக
6.க. பொன்முடிதிருக்கோயிலூர்உயர்கல்வித் துறை அமைச்சர்
  • உயர் கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி
  • மின்னணுவியல்
  • அறிவியல்
  • தொழில்நுட்பவியல்
திமுக
7.எ. வ. வேலுதிருவண்ணாமலைபொதுப்பணித் துறை அமைச்சர்
  • பொதுப்பணிகள்
  • கட்டிடங்கள்
  • நெடுஞ்சாலைகள்
  • சிறு துறைமுகங்கள்
திமுக
8.எம். ஆர். கே. பன்னீர்செல்வம்குறிஞ்சிப்பாடிவேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
  • வேளாண்மை
  • வேளாண்மை பொறியியல்
  • வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
  • தோட்டக்கலை
  • கரும்புத்தீர்வை
  • கரும்புப் பயிர் மேம்பாடு
  • தரிசு நில மேம்பாடு
திமுக
9.கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்அருப்புக்கோட்டைவருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
  • வருவாய்
  • மாவட்ட வருவாய் நிர்வாகம்
  • துணை ஆட்சியர்கள்
  • பேரிடர் மேலாண்மை
திமுக
10.தங்கம் தென்னரசுதிருச்சுழிதொழில்துறை அமைச்சர்
  • தொழில்துறை
  • தமிழ் ஆட்சி மொழி
  • தமிழ் பண்பாட்டுத்துறை
  • தொல்பொருள்
திமுக
11.எஸ். ரகுபதிதிருமயம்சட்டத் துறை அமைச்சர்
  • சட்டம்
  • நீதிமன்றங்கள்
  • சிறைச்சாலை
  • ஊழல் தடுப்புச் சட்டம்
திமுக
12.சு. முத்துசாமிஈரோடு மேற்குவீட்டு வசதித்துறை அமைச்சர்
  • வீட்டு வசதி
  • ஊரக வீட்டு வசதி
  • நகரமைப்புத் திட்டமிடல்
  • வீட்டு வசதி மேம்பாடு
  • இடவசதி கட்டுப்பாடு
  • நகரத் திட்டமிடல்
  • நகர் பகுதி வளர்ச்சி
  • சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
திமுக
13.கே. ஆர். பெரியகருப்பன்திருப்பத்தூர் (சிவகங்கை)ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
  • ஊரக வளர்ச்சி
  • ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
  • வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
  • ஊரக கடன்கள்
திமுக
14.தா. மோ. அன்பரசன்ஆலந்தூர்ஊரகத் தொழில்துறை அமைச்சர்
  • ஊரகத் தொழில்கள்
  • குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள்
  • குடிசை மாற்று வாரியம்
திமுக
15.எம். பி. சாமிநாதன்காங்கேயம்செய்தித் துறை அமைச்சர்
  • செய்தி மற்றும் விளம்பரம்
  • திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
  • பத்திரிகை
  • அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
  • எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
  • அரசு அச்சகம்
திமுக
16.பெ. கீதா ஜீவன்தூத்துக்குடிசமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
  • ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
  • இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
திமுக
17.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்திருச்செந்தூர்மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
  • மீன்வளம்
  • மீன் வளர்ச்சிக் கழகம்
  • கால்நடை பராமரிப்பு
திமுக
18.ஆர். எஸ். இராஜ கண்ணப்பன்முதுகுளத்தூர்போக்குவரத்துத் துறை அமைச்சர்
  • போக்குவரத்து
  • நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து
  • இயக்கூர்தி சட்டம்
திமுக
19.கே. இராமச்சந்திரன்குன்னூர்வனத்துறை அமைச்சர்
  • வனம்
திமுக
20.அர. சக்கரபாணிஒட்டன்சத்திரம்உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
  • உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்
  • நுகர்வோர் பாதுகாப்பு
  • விலைக்கட்டுப்பாடு
திமுக
21.வே. செந்தில்பாலாஜிகரூர்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
  • மின்சாரம்
  • மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
  • மதுவிலக்கு ஆயத்தீர்வை
  • கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
திமுக
22.ஆர். காந்திராணிப்பேட்டைகைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
  • கைத்தறி மற்றும் துணிநூல்
  • கதர் மற்றும் கிராம தொழில் வாரியம்
  • பூதானம் மற்றும் கிராம தானம்
திமுக
23.மா. சுப்பிரமணியம்சைதாப்பேட்டைமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
  • மக்கள் நல்வாழ்வு
  • மருத்துவக் கல்வி
  • குடும்ப நலன்
திமுக
24.பி. மூர்த்திமதுரை கிழக்குவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
  • வணிகவரி
  • பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம்
  • எடைகள் மற்றும் அளவைப்கள்
  • கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
  • சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
திமுக
25.எஸ். எஸ். சிவசங்கர்குன்னம்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  • பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
  • சீர் மரபினர் நலன்
திமுக
26.பி. கே. சேகர் பாபுதுறைமுகம்இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
  • இந்து சமயம்
  • அறநிலையங்கள்
திமுக
27.சா. மு. நாசர்ஆவடிபால்வளத் துறை அமைச்சர்
  • பால்வளம்
  • பால் பண்ணை வளர்ச்சி
திமுக
28.செஞ்சி கே. எஸ். மஸ்தான்செஞ்சிசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
  • சிறுபான்மையினர் நலன்
  • வெளிநாடு வாழ் தமிழர் நலன்
  • அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள்
  • வக்பு வாரியம்
திமுக
29.அன்பில் மகேஷ் பொய்யாமொழிதிருவெறும்பூர்பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
  • பள்ளிக்கல்வி
திமுக
30.சிவ. வீ. மெய்யநாதன்ஆலங்குடிசுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு
  • இளைஞர் நலன்
  • விளையாட்டு மேம்பாட்டுத் துறை
திமுக
31.சி. வி. கணேசன்திட்டக்குடிதொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • தொழிலாளர் நலன்
  • மக்கள் தொகை
  • வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
திமுக
32.மனோ தங்கராஜ்பத்மநாபபுரம்தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
  • தகவல் தொழில்நுட்பத் துறை
திமுக
33.மா. மதிவேந்தன்இராசிபுரம்சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சுற்றுலா
  • சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
திமுக
34.என். கயல்விழி செல்வராஜ்தாராபுரம்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
  • ஆதிதிராவிடர் நலன்
  • மலைவாழ் பழங்குடியினர்கள்
  • கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
திமுக

சட்டசபை அறையில் உள்ள உருவப்படங்கள்

வ. எண்உருவப்படம்வெளியிட்ட ஆண்டுவெளியிட்டவர்
1சி. இராசகோபாலாச்சாரி24 சூன் 1948ஜவகர்லால் நேரு
2மகாத்மா காந்தி23 ஆகத்து 1948சி. இராசகோபாலாச்சாரி
3திருவள்ளுவர்22 மார்ச் 1964சாகீர் உசேன்
4கா. ந. அண்ணாதுரை6 அக்டோபர் 1969இந்திரா காந்தி
5காமராசர்18 ஆகத்து 1977நீலம் சஞ்சீவ ரெட்டி
6ஈ. வெ. இராமசாமி9 ஆகத்து 1980ஜோதி வெங்கடாசலம்
7அம்பேத்கர்9 ஆகத்து 1980ஜோதி வெங்கடாசலம்
8முத்துராமலிங்கத் தேவர்9 ஆகத்து 1980ஜோதி வெங்கடாசலம்
9முகம்மது இசுமாயில்9 ஆகத்து 1980ஜோதி வெங்கடாசலம்
10ம. கோ. இராமச்சந்திரன்31 சனவரி 1992ஜெ. ஜெயலலிதா
11ஜெ. ஜெயலலிதா12 பிப்ரவரி 2018ப. தனபால்
12எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்19 சூலை 2019எடப்பாடி கே. பழனிசாமி
13வ. உ. சிதம்பரம்பிள்ளை23 பிப்ரவரி 2021எடப்பாடி கே. பழனிசாமி
14ப. சுப்பராயன்23 பிப்ரவரி 2021எடப்பாடி கே. பழனிசாமி
15ஓமந்தூர் ராமசாமி23 பிப்ரவரி 2021எடப்பாடி கே. பழனிசாமி
16மு. கருணாநிதி2 ஆகத்து 2021ராம் நாத் கோவிந்த்

பெ. ராஜகோபாலாச்சாரி மற்றும் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை ஆகியோரின் மார்பளவு சிலைகள் சட்டமன்ற முகப்பு அறையில் உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை