சூதாட்டம்

சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன. பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.

சூதாடுகருவிகளில் ஒன்று: கனசதுர தாயம்

இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.

சூதாட்டத்தில் பல மத முன்னோக்குகள் கலந்திருக்கின்றன.

மகாபாரதத்தில் சூதாட்டம்

பழங்கால இந்தியரிடையே சூதாட்டத்தின் புகழ் பற்றியும், சூதாடிகளின் புலம்பல்கள் பற்றியும் மகாபாரதம் போன்ற பண்டைய இந்துக் காவியங்கள் சாட்சி கூறுகின்றன. எனினும், கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் அர்த்தசாஸ்திரம் (Arthashastra) எனும் நூல், சூதாட்ட வரி மற்றும் சூதாட்டக் கட்டுப்பாடுகள் பற்றி விரித்துரைக்கிறது.[1]

யூதத்தில் சூதாட்டம்

பண்டைய யூத அதிகாரிகள் சூதாட்டம் எனும் பெயரைக் கேட்டாலே முகம் சுழித்தனர். சூதாட்டத்தை அவமரியாதையாகக் கருதினர். மேலும், தொழில்முறை சூதாட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.[2]

கத்தோலிக்கத்தில் சூதாட்டம்

கத்தோலிக்க திருச்சபைக் கூற்றுகளின்படி, அனைத்து நிலை சூதாட்டப் போட்டியாளர்களுக்கும் வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு இருக்கிறது. இதில் இயற்கையில் மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. போட்டியில் பங்கேற்கும் கட்சிகள் அல்லது போட்டியாளர்களுக்கு (பந்தயத்தின் சூட்சும அறிவை பந்தயக்காரர்களோ அல்லது போட்டியாளர்களோ பகிரங்கமாக வெளிப்படுத்தாவிட்டால்) பந்தயத்தின் முடிவு பற்றிய உண்மையான அறிவோ அல்லது விழிப்புணர்வோ இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வகை சூதாட்டங்கள் நியாயமான சூதாட்டங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, சூதாட்டங்கள் எதுவரை நியாயமானதாக இருக்கிறதோ அதுவரை, சூதாட்டத்திற்கு தார்மீகத் தடை ஏதும் இல்லை என்ற நிலை கத்தோலிக்கத்தில் உள்ளது.[3]

பால்சாக்கின். கருத்துப்படி, சூதாட்டம் அடிக்கடி சமூக எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்று நையாண்டித் தாக்குதல் செய்கிறார். இந்த சமூக மற்றும் மதக் காரணங்களுக்காக, பெரும்பாலான சட்ட வரம்புகள் சூதாட்டத்தை கட்டுப்படுத்துகின்றன என்று, பாஸ்கல் வாதிட்டு அதையே பரிந்துரைக்கின்றார்.[4]

சுமுக சூதாட்ட நிபந்தனைகளும், எல்லைகளும்:

  • பந்தயக்காரர் அல்லது சூதாட்டக்காரர், தான் தோல்வி அடையும்போது இயலும் நிலையோடிருந்தாலோ அல்லது திறந்த மனதுடன் செலவுசெய்யக்கூடிய நிலையிலிருந்தாலோ அது இயல் நிலை சூதாட்டம் எனப்படும். இது ஏற்புடைய நிலை ஆகும்.
  • சூதாட்டக்காரர், தன் வரம்பை அடைந்ததும் சூதாட்டத்தை நிறுத்திவிட்டால் அது ஏற்புடைய நிலை ஆகும்.
  • சூதாட்டம் ஒருவருக்கு தன்முனைப்பாற்றல் பயன்பாடு கொடுக்கக்கூடியதாகவும், உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும் வரை அது ஏற்புடைய நிலை ஆகும்.
  • ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் லாபமோ அல்லது பெரும் பொருள் வரவோ அளிக்காத வரையிலும், பணத்தின் மீது மோகமோ அல்லது வெறியோ ஏற்படுத்தாத வரையிலும், சூதாட்டத்தில் அது ஏற்புடைய நிலை ஆகும்.[5]
  • ஒருவருக்கு வாழ்க்கை அளிக்கும் வாழ்வாதாரமாக இருக்கும்போது சூதாட்டம் ஒரு ஏற்புடைய நிகழ்வு ஆகும்.[6]

அடிப்படையில், கத்தோலிக்க ஆயர்கள், கேளிக்கை விடுதிகளிலிலும், பொது ஆடரங்கங்களிலும் நடத்தப்படும் சூதாட்டங்களை எதிர்த்து வருகின்றனர். அதற்கு அவர்கள் வழங்கும் காரணங்கள்:

  • சூதாட்டம் ஒரு போதைப் பொருள் போல் மக்களை மயக்கித் தன்பால் இழுக்கிறது.
  • சூதாட்டமானது, பெரும்பாலும் மக்களை தனக்கு அடிமையாக்குகிறது.
  • குறிப்பாக ஏழை மக்களிடையே அதிக அளவில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சூதாட்டத்தினால் மக்களிடையே தோன்றும் இரண்டாம் நிலை விளைவுகளாக மேற்கோள் காட்டப்படுபவை:

  • வாழ்வாதாரத்தை ஒடுக்கும் கடன் சுமை அதிகரிப்பு
  • விபச்சாரத் தொழில் தொடக்கம் மற்றும் விஸ்தரிப்பு
  • பாரபட்ச்மின்றி தலைவிரித்தாடும் ஊழல்
  • மக்களிடையே பொது ஒழுக்கமின்மை போன்றவை ஆகும்.[7][8][9]

குறைந்தது ஒரு நிகழ்விலேனும், சூதாட்டத்தை எதிர்த்த ஒரு ஆயர், கேளிக்கை விடுதியோ, பொது ஆடரங்கமோ, நடத்த சூதாட்ட மையக் கட்டுமானத்திற்காகத் தன் நிலத்தை விற்ற நிகழ்வுகளும் உண்டு.[10]

தேவாலய பிங்கோ மற்றும் வருடாந்திர திருவிழாக்களில், பல தரப்பு வாடிகையாலர்களும் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு, கருப்பு ஜாக், ரவுலட் (Roulette) எனும் சிறுசில்லி விளையாட்டு, கிராப்ஸ் (craps) விளையாட்டு, போக்கர் எனும் சீட்டுவிளையாட்டு போன்றவற்றை ஏற்பாடு செய்து அவற்றின் மூலம் தம்முடைய தேவாலயங்களுக்கு நிதி திரட்டி வந்தனர். இந்நிலையில், தேவாலய வாடிக்கையாளர்களை சூதாட்ட மையங்கள் பெரிய அளவில் கவர்ந்திழுத்ததால், சில பாரிஷ் போதகர்கள், சூதாட்டங்களை எதிர்த்தனர்.[11]

இசுலாமியத்தில் சூதாட்டம்

இசுலாமிய உலகில் பல்வேறு ஷரியாஹ் எனும் இசுலாமியச் சட்ட முறைமைகள் இருப்பினும், 'உலேமா' எனும் இசுலாமிய அறிஞர்களிடையே இஸ்லாம் என்ற ஒருமித்த பண்பாட்டு நிலைமை நிலவி வருகிறது. அதன்படி, சூதாட்டம் இஸ்லாமியர்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது. அதாவது சூதாட்டமானது இசுலாமியர்களுக்கு தடைசெய்யப்பட்ட பாவச் செயல் ஆகும்.

இசுலாமியச் சட்ட முறைமைகளின் கூற்றுப்படி,முஸ்லீம் சட்ட வல்லுநர்கள், திருக்குர்ஆனின் கட்டளைப்படி, மதுவும், சூதாட்டமும்,  உம்மாஹ் எனும் முஸ்லீம் மக்களுக்கு தடை செய்யப்பட்டவை ஆகும். சூதாட்டத்தைக் குறிக்கும் இஸ்லாமிய சொல் மைசிர் (Maisir) என்பதாகும். மேலும் இதன் இரண்டாம் வரையறைப் பொருள் 'எளிதான பணம்' என்பதாகும்.[12]

இசுலாமியச் சட்ட முறைமைகளை முழு அளவில் செயல்படுத்தும், உலகின் பல பகுதிகளில், முஸ்லீம் சூதாடிகளுக்கு ஆச் (Aceh) எனும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தண்டனை வகைகள்:

  • 12 கசையடிகள் அல்லது
  • ஒரு வருட சிறைவாசம்
  • அத்தகைய நடைமுறைகளுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு குறிப்பிட்ட அளவு அபராதம்[13]

சில இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.[14]

சூதாட்டத்தின் எதிர்மறை விளைவுகள்

மக்களில் பலர் சூதாட்டத்தில் ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பங்கேற்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சூதாடிகள் தாங்கள் சூதாட்டத்தில் பங்கேற்பதற்கு குறிப்பிடும் சில காரணங்கள்:

  • இனிமையான பொழுதுபோக்குச் செயலாக எடுத்துக்கொள்ளுதல்.
  • ஒரு வருவாய் ஈட்டும் தொழிலாக சூதாட்டத்தை நினைப்பது.
  • சூதாட்டம் என்பது தவறு என்று தெரிந்தே விளையாடுவது
  • நடத்தை மாற்ற எதிர்நோக்குச் செயலாகக் கொள்வது.
  • மூளை வேதியியல் மாறுபாட்டுத் தேவைக்காக விளையாடுவதாக போலிக்கருத்து கொள்வது போன்றவை ஆகும்.

சூதாட்டம் ஒரு தீங்கு விளைவிக்கும் நடத்தை அடிமைப் பண்பு ஆகும். சூதாட்ட போதை எனும் நடத்தைப் பழக்கம் ஒரு நபரது வாழ்க்கையில் அனைத்து வகையான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதனால், சூதாட்டத்திற்கு அடிமையானவர்களுக்கு, போதை மருந்துகள் உட்கொள்ளுதல், மதுபானம் அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே, இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.[15] சூதாட்டக்காரர்கள், பல்வேறு இழப்புகளைச் சந்தித்த பின்னும், அவர்களிடமுள்ள, சூதாட்டம் சார்ந்த வலுவூட்டல் முற்குறிப்பு மற்றும் கருத்து அவர்களை அப்பழக்கத்திலேயே மீண்டும் தொடரச் செய்கிறது.

ரஷ்ய எழுத்தாளரும் பிரச்சனைக்குரிய சூதாட்டக்காரருமான ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்கி (Fyodor Dostoevsky) தனது 'சூதாட்டக்காரன்' எனும் புதினத்தில், சூதாட்டக்காரர்களுக்கு ஏற்படும் சூதாட்டம் சார்ந்த உளவியல் தாக்கங்களையும் மற்றும் அது சூதாட்டக்காரர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இவர், சூதாட்டத்தைப் பற்றியும், அதன் மூலம் விரைவாகப் பணக்காரராவதற்கான யோசனைகளையும் இணைத்து எழுதியுள்ளார். இவர் மேலும், ரஷ்யர்கள் சூதாட்டத்துடன், ஒரு குறிப்பிட்ட உறவைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறார். 19-ஆம் நூற்றாண்டில் பந்தயம் வைத்தால், ஐரோப்பாவின் பெரும்பகுதியை வெற்றி கொள்ள முடியும் என்று தெரிவிக்கிறார். ரஷ்ய ரவுலட் எனும் சூதாட்டத்தின் தோற்றம் பற்றிய வரலாற்று நிகழ்வோடு வேறு தகவல்களையும் இணைத்துப் புனைந்து வழங்கும் உரைக்கூற்றானது, ரஷ்யர்களுக்கும் சூதாட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மக்களிடம் சூதாட்டம் பரவுவதற்கு பல அறிகுறிகளும், காரணங்களும் உள்ளன. சூதாடிகள், அதிக பணம் சம்பாதிக்கவும், தாம் இழந்த பணத்தைத் திரும்பப் பெறவும் மீண்டும், மீண்டும் சூதாடுகிறார்கள். சிலர், தமக்குள்ள அனாதரவுச் சூழல், கவலை, கலக்க மனநிலை போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற சூதாட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.[16] [17] 

.

 படத்தொகுப்பு 

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூதாட்டம்&oldid=3930126" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை