சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம்
(சென்னை பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இஃது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
மெரினா கடற்கரையில் இருந்து பல்கலைக்கழகத்தின் பார்வை
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Learning Promotes Natural Talent
வகைபொது
உருவாக்கம்1857; 167 ஆண்டுகளுக்கு முன்னர் (1857)
நிதிக் கொடை$50 மில்லியன்
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்எசு. கெளரி
கல்வி பணியாளர்
300
பட்ட மாணவர்கள்3000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5000
அமைவிடம், ,
13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
நற்பேறு சின்னம்சிங்கம்
சேர்ப்புபல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
இணையதளம்www.unom.ac.in

தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.

வரலாறு

இந்தியாவில் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் கண்டறியப்பட்டன. இம்மூன்று நகரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகியவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

11-11-1839 தேதியிட்ட 70000 பேர் சேர்ந்து எழுதி லார்ட் ஜான் எல்பின்ஸ்டன் (Lord John Elphinston) அவர்களிடம் அளித்த பொதுமனுக்குழு சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கக் காரணமாக அமைந்தது. கல்வி பற்றிய விவாதங்களும் எழுந்தன. ஜனவரி 1840-இல் ஜார்ஜ் நார்டன் தலைமையில் பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பிரெசிடென்சி கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்து அது முதலில் உருவானது. 1857-இல் மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி அளிக்க அங்கிகாரம் பெற்றது.

அதன் பிறகு 14 வருடம் கழித்து 1854-இல் சார்லஸ் உட் எழுதிய கல்விக்குறிப்பின் பயனாக ஒரு சீரான கல்விக் கொள்கை ஒன்றை அமைத்து 1857-இல் சட்டம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1923-இல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் எனப் பரந்து விரிந்திருந்தது.[2]

சென்னைப் பல்கலைக்கழகம் மும்பை மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 1857-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2000-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு NAAC மூலம் முதல் முறையாக அங்கீகாரம் மற்றும் "5 நட்சத்திர அந்தஸ்து" வழங்கப்பட்டது. தனது 150-ஆவது வருடத்தைக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 2008-ஆம் ஆண்டு கொண்டாடியது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவான மற்ற பல்கலைக்கழகங்கள்

  1. மைசூர் பல்கலைக்கழகம் (1916)
  2. உசுமானியா பல்கலைக்கழகம் (1918)
  3. ஆந்திரப் பல்கலைக்கழகம் (1926)
  4. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929)
  5. திருவாங்கூர் பல்கலை (1937)
  6. உத்கல் பல்கலைக்கழகம் (1943)
  7. திருவேங்கடவன் பல்கலைக்கழகம் (1954)
  8. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1966)
  9. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (1971)
  10. அண்ணா பல்கலைக்கழகம் (1978)
  11. பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1982)
  12. பாரதியார் பல்கலைக்கழகம் (1982)
  13. பெரியார் பல்கலைக்கழகம் (1997)
  14. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (1997)
  15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (2002)

மானியங்கள்

2011-இல் பல்கலைக்கழக மானிய குழு சிறந்த திறன் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தது. அதன் விளைவாக 25 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றது.[3]

பல்கலைக்கழக அமைப்பின் கட்டமைப்பு

பலகலைக்கழகத்தின் வேந்தராக தமிழக ஆளுநர் இருப்பார்.

  • செனட் (Senate)
  • தி சிண்டிகேட் (The Syndicate)
  • தி அகாடெமிக் கவுன்சில் (The Academic Council)
  • தி பாகல்ட்டீஸ் (The Faculties)
  • தி பினான்ஸ் கமிட்டி (The Finance Comittee)
  • தி போர்டு ஆப் சடடிஸ் (The board of Studies)

துறைகள்

வரலாற்றுத்துறை

சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர், கே. கே. பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ரா. தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி. ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்கள்.[4]

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை விளக்கம்

1857-இல் உருவாக்கப்பட்ட இந்த இலச்சினை இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • இரண்டு யானைகள்
  • இரு இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மலர்
  • புலி
  • குறிக்கோளுரை : கற்றைனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
  • ஆங்கில மொழியாக்கம்: Learning promotes (one's) natural (innate) talent [2]

நூலகம்

முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் கன்னிமாரா நூலகத்தில் 1907-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போதுள்ள நூலகம் 1936-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இஃது இந்திய-பிரிட்ஷ் வகையில் அமைக்கப்பட்டது.

சுவாரசியமான மற்றும் முக்கிய குறிப்புகள்

  • தேசிக விநாயகம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.[5]
  • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னைப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது.[6]
  • 1915இல் இருந்து 1921 வரை, பிரித்தானிய பொருளாதார நிபுணர் கில்பர்ட் ஸ்லாட்டர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார். இவர் திராவிட கொள்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டவராயிருந்திருக்கிறார்.[7][8]
  • இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் காதம்பி மீனாட்சி இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் க. அ. நீலகண்ட சாத்திரியிடம் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[9]
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பயின்றவரே.[10]
  • இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் ஆய்வுத் துறையில் டாக்டர் பட்டங்களுக்காக அனுப்பப்படும் ஆய்வுரைகளை ஏற்றுக் கொண்ட பிறகு அவற்றை வெளியிட முன்வராது சென்னைப் பல்கலைக் கழகம். பல்கலைக்கழகம் காவல் கழகமாக மாறி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரைகளை வெளிஉலகத்திற்கு வெளியிடாமல் பூட்டி வைத்துவிடும்.[11]

வளாகங்கள்

  • தொல்காப்பியர் (சேப்பாக்கம்) வளாகம்
  • பரிதிமாற் கலைஞர் (மெரினா) வளாகம்
  • மறைமலை (கிண்டி) வளாகம்
  • சேக்கிழார் (தரமணி) வளாகம்
  • மதுரவாயல் வளாகம்

பல்கலைக்கழகத்தின் கட்டடம்

சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம்

சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தாகும்.

இங்குப் படித்துப் புகழ் பெற்றவர்கள்

நோபல் பரிசு பெற்றவர்கள்

இந்திய ஜனாதிபதிகள்

இந்திய தலைமை நீதிபதி

பேரறிஞர்கள்

புத்தாக்குனர்கள்

துணை வேந்தர்கள்

துணைவேந்தர்களாக முதலில் ஆங்கிலேயர்களும் பின்னர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். துணைவேந்தர் புகைப்படங்களின் தொகுப்பு.[15]

  • சர் கிர்ச்டோபர் ராவில்சன் 1857
  • சர் வால்டர் எலியாட் 1859
  • வில்லியம் ஆம்புரோஸ் மோர்ஹெட், ESQ., 1860
  • சர் கொள்ளி ஹார்மன் ஸ்காட்லாந்து 1862
  • சர் அலக்ஸாண்டர் ஜே ஆர்புத்னாட் 1871
  • வ ஹூலோவே 1872
  • லெவிஸ் சார்லஸ் இன்ஸ் 1874
  • ஜே கே கெர்னன் 1885
  • சார் ஆர்தர் ஹம்மன் காலின்ஸ் 1889
  • டேவிட் டுன்கன் 1889
  • ஸ்ரீ எச் எச் ஷேபெர்ட் (Sri H. H. Shepard) 1899
  • தி ரேவ் வில்லியம் மில்லேர் (The Rev. William Miller) 1901
  • சர் சார்லஸ் அர்னோல்ட் வைட் (Sir Charles Arnold White) 1904
  • சர் எஸ் சுப்ரமணிய ஐய்யர் (Sir S. Subramania Iyer) 1904
  • சர் சார்லஸ் அர்னோல்ட் வைட்(Sir Charles Arnold White) 1904-1908
  • சர் ஜே இ பி வாலிஸ் (Sir J. E. P. Wallis) 1908-1916
  • சர் பி எஸ் சிவசாமி ஐய்யர் (Sir P. S. Sivaswami Iyer) 1916-1918
  • தி ஹோனோரபில் ஜஸ்டிஸ் ஸ்ரீ பா டி ஒல்டுபில்டு (The Hon. Justice Sri F. D. Oldfield) 1918-1920
  • தி ஹோனோரபில் சர் கே ஆர் ஸ்ரீனிவாச ஐயங்கார் (The Hon. Sir K. R. Srinivasa Iyengar) 1920-1923
  • தி ரேவ் இ மொண்டியத் மக்ப்ஹில் (The Rev. E. Monteith Macphail) 1923-1925
  • திவான் பகதூர் சர் ரக்ஹுபதி வேங்கடரத்தினம் நாயுடு(Diwan Bahadur Sir Raghupathi Venkataratnam Naidu) 1925-1928
  • திவான் பகதூர் சர் கே ராமமுனி மேனன் (Diwan Bahadur Sir K. Ramunni Menon) 1928-1934
  • ரிச்சர்ட் லிட்டில்ஹேயிலேஸ்(Richard Littlehailes) 1934-1937
  • திவான் பகதூர் எஸ் இ ரெங்கநாதன் (Diwan Bahadur S. E. Ranganadhan) 1937-1940
  • கான் பகதூர் முஹம்மது உஸ்மான்,(Mohammad Usman of Madras) 1940-1942
  • கர்னல் சர் எ லக்ஷ்மனச்வாமி முதலியார் (Lt. Col. Sir A. Lakshmanaswami Mudaliar) 1942-1969
  • திரு என் டி சுந்தரவடிவேலு (Thiru. N. D. Sundaravadivelu) 1969-1975
  • டாக்டர் மல்கொல்ம் எஸ் ஆதிசேஷையா (Dr. Malcolm S. Adiseshiah) 1975-1978
  • டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் (Dr. G. R. Damodaran) 1978-1981
  • டாக்டர் சந்தப்பா (Dr. Santappa) 1981-1984
  • டாக்டர் பி பி சுந்தரேசன் (Dr. B. B. Sundaresen) 1984-1987
  • டாக்டர் ஆறுமுகம் ஞானம் (Dr. [[Arumugam Gnanam) 1988-1990
  • டாக்டர் எஸ். சாதிக் (Dr. S. Sathikh) 1990-1994
  • டாக்டர் பி கே பொன்னுசாமி (Dr. P. K. Ponnusamy) 1994-1997
  • டாக்டர் பி டி மனோகரன் (Dr. P. T. Manoharan) 1997-1999
  • டாக்டர் பொன் கோதண்டராமன் (Dr. PON. Kothandaraman 1999-2002)
  • ரேவ் பாதர் டாக்டர் எஸ் இக்ஞ்சிமுத்து (Rev. Fr. Dr. S. Ignacimuthu 2002-2003)
  • பேராசரியர் எஸ் பி தியாகராஜன் (Prof. S. P. Thyagarajan 2003-2006)
  • பேராசரியர் எஸ் இராமச்சந்திரன் (Prof. S. Ramachandran) 2006-2009
  • கர்னல். டாக்டர். ஜி திருவாசகம்(Col. Dr. G. Thiruvasagam) 2009-2012
  • பேராசரியர் ஆர் தாண்டவன்(Prof. R.Thandavan) [16]

உள்ளிணைந்த கல்லூரிகள்

தன்னாட்சி - கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

  • பச்சையப்பன் கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • பாரதி கலைக் கல்லூரி
  • எத்திராஜ் கல்லூரி
  • லோகநாத நாராயணசாமி கலைக் கல்லூரி
  • டி ஜி வைஷ்ணவ் கல்லூரி
  • லயோலா கல்லூரி
  • எம் ஒ பி வைஷ்ணவ் கல்லூரி

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

படங்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை