செபீல்டு

செபீல்டு (Sheffield, /ˈʃɛfld/ () ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்தின் வடபகுதியில் தெற்கு யார்க்சையரில் உள்ள ஓர் நகரமாகும். இங்கு பாயும் ஷீஃப் ஆற்றினைக் கொண்டு இந்நகர் இப்பெயர் பெற்றது. தொழிற்சாலைகளினாலேயே இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. செபீல்டு நகரத்தின் 2011 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 551,800 ஆகும். இங்கிலாந்தின் எட்டு மிகப்பெரும் நகரங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.

செபீல்டு நகரம்
கடிகாரச்சுற்றில் மேல் இடதிலிருந்து: செபீல்டு பல்கலைக்கழகம் கட்டிடம்; அருண்டேல் வாயிலிலிருந்து செயின்ட் பால் கட்டிடம்; செபீல்டின் சக்கரமும் செபீல்டு நகர மன்றமும்; மீடோஹால் அங்காடிக்கூடம்; செபீல்டு நிலையமும் ஷீஃப் சதுரம்.
கடிகாரச்சுற்றில் மேல் இடதிலிருந்து: செபீல்டு பல்கலைக்கழகம் கட்டிடம்; அருண்டேல் வாயிலிலிருந்து செயின்ட் பால் கட்டிடம்; செபீல்டின் சக்கரமும் செபீல்டு நகர மன்றமும்; மீடோஹால் அங்காடிக்கூடம்; செபீல்டு நிலையமும் ஷீஃப் சதுரம்.
Official logo of செபீல்டு நகரம்
நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்
அடைபெயர்(கள்): "எஃகு நகரம்"
குறிக்கோளுரை: "Deo Adjuvante Labor Proficit"
"கடவுளருளால் நம் முயற்சி வெல்லும்"
இங்கிலாந்தினுள் செபீல்டு அமைவிடம்
இங்கிலாந்தினுள் செபீல்டு அமைவிடம்
நிறுவப்பட்டது~8வது நூற்றாண்டு
ஊர் அரசியலமைப்பு10 ஆகத்து 1297
நகரமாகத் தகுதி1893
பரப்பளவு
 • நகரம்367.94 km2 (142.06 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்வார்ப்புரு:English district population ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:English district rank]])
 • நகர்ப்புறம்640,720
(செபீல்டு ஊரகப் பகுதி)
 • நகர்ப்புற அடர்த்தி3,949.2/km2 (10,228/sq mi)
 • செரெமோனியல் கௌன்ட்டி1,292,900
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
தொலைபேசி குறியீடு0114
இணையதளம்www.sheffield.gov.uk

19வது நூற்றாண்டில் செபீல்டு எஃகு உற்பத்தியால் உலகெங்கும் பெயர் பெற்றிருந்தது. எஃகு தயாரிப்பில் பல மேம்பாடுகள் இங்கு ஏற்பட்டன. தொழிற் புரட்சியின்போது இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து மடங்காகப் பெருகியது. 1843 இல் நகராட்சி அங்கீகாரம் பெற்றது. 1970களிலும் 198களிலும் பன்னாட்டு போட்டித் தயாரிப்புக்களாலும் நிலக்கரி சுரங்கத் தொழில் முடக்கத்தாலும் உள்ளூர் இரும்புத் தயாரிப்பு முடங்கத் தொடங்கியது.

21வது நூற்றாண்டில் மற்ற பிரித்தானிய நகரங்களைப் போலவே இங்கும் விரிவான ஊரகப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. £9.2 பில்லியன் உற்பத்தியுடன் பொருளியலில் மொத்த மதிப்புக் கூட்டல் 1997இல் 60%ஆக உயர்ந்துள்ளது.[1]

பல மலைகளின் நடுவே அமைந்துள்ள செபீல்டு பீக் தேசியப் பூங்காவிற்கு கிழக்கில் உள்ளது. டான் ஆறு மற்றும் அதன் துணையாறுகளுடன் செபீல்டு 61% பசும்வெளியாக உள்ளது.[2] இந்நகரில் 200க்கும் கூடுதலான பூங்காக்களும் வனப்பகுதிகளும் நந்தவனங்களும் உள்ளன.[3] 2.5 மில்லியன் மரங்கள் உள்ளதாக மதிப்பிடப்படும் செபீல்டு, ஐரோப்பாவின் எந்த நகரத்திலும் உள்ள தனிநபர் ஒருவருக்கெதிர் மரங்களின் எண்ணிக்கையில் உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது.[2]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செபீல்டு&oldid=3930214" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை