நிலக்கரி

தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள்

நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும்.நிலக்கரி ஓர் அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கை வாயு, கனிய எண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1] 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.[2]

நிலக்கரி
 —  படிவுப் பாறை  —
நிலக்கரி Image
ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு
கலவை
முதன்மைகார்பன்
இரண்டாம் நிலைசல்ஃபர்,
ஹைட்ரஜன்,
ஆக்ஸிஜன்,
நைட்ரஜன்

நிலக்கரி வணிகம்

நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.[3] அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும்.[4] நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.[5]

தோற்றம்

நிலக்கரியின் வேதிக் கட்டமைப்பின் எடுத்துக்காட்டு

மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது.[6][7][8]

நிலக்கரியின் வகைகள்

நோவா ஸ்கோசியாவின் அக்கோனி முனையிலுள்ள நிலக்கரிப் படுகை கடலோரத்தில் வெளிப்பட்டுருத்தல்

நிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது

  1. முற்றா நிலக்கரி.
  2. பழுப்பு நிலக்கரி.
  3. அந்திரசைட் நிலக்கரி
  4. கிராபைட்
நிலக்கரியின் வேதியியல் கட்டமைப்பு உதாரணம்

உலகளாவிய நிலக்கரி இருப்பு

2008ஆம் ஆண்டு இறுதியில் மெய்பிக்கப்பட்ட [9] அகழ்ந்தெடுக்கத்தக்க நிலக்கரி இருப்பு (மில்லியன் டன்கள் (டெராகிராம்கள்))[10]
நாடுஅந்தராசைட்டு & அசுபால்ட்டுதரம்குறை புகைமலி நிலக்கரிலிக்னைட்டுமொத்தம்மொத்த உலக இருப்பில் விழுக்காடு
 United States108,50198,61830,176237,29522.6
 Russia49,08897,47210,450157,01014.4
 China62,20033,70018,600114,50012.6
 Australia37,1002,10037,20076,4008.9
 India56,10004,50060,6007.0
 Germany99040,60040,6994.7
 Ukraine15,35116,5771,94533,8733.9
 Kazakhstan21,500012,10033,6003.9
 South Africa30,1560030,1563.5
 Serbia936113,40013,7701.6
 Colombia6,36638006,7460.8
 Canada3,4748722,2366,5280.8
 Poland4,33801,3715,7090.7
 Indonesia1,5202,9041,1055,5290.6
 Brazil04,55904,5590.5
 Greece003,0203,0200.4
 Bosnia and Herzegovina48402,3692,8530.3
 Mongolia1,17001,3502,5200.3
 Bulgaria21902,1742,3660.3
 Pakistan01661,9042,0700.3
 Turkey52901,8142,3430.3
 Uzbekistan4701,8531,9000.2
 Hungary134391,2081,6600.2
 Thailand001,2391,2390.1
 Mexico860300511,2110.1
 Iran1,203001,2030.1
 Czech Republic19209081,1000.1
 Kyrgyzstan008128120.1
 Albania007947940.1
 North Korea30030006000.1
 New Zealand33205333-7,000571–15,000[11]0.1
 Spain200300305300.1
 Laos404995030.1
 Zimbabwe502005020.1
 Argentina005005000.1
மற்ற நாடுகள்3,4211,3468465,6130.7
மொத்த உலக இருப்பு404,762260,789195,387860,938100

பெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்

இங்கு இருப்புக் காலம் என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் நிலக்கரி உற்பத்தி (மில்லியன் டன்கள்)[3]
நாடு200320042005200620072008200920102011பங்குஇருப்புக் காலம் (ஆண்டுகள்)
 China1834.92122.62349.52528.62691.62802.02973.03235.03520.049.5%35
 United States972.31008.91026.51054.81040.21063.0975.2983.7992.814.1%239
 India375.4407.7428.4449.2478.4515.9556.0573.8588.55.6%103
 European Union637.2627.6607.4595.1592.3563.6538.4535.7576.14.2%97
 Australia350.4364.3375.4382.2392.7399.2413.2424.0415.55.8%184
 Russia276.7281.7298.3309.9313.5328.6301.3321.6333.54.0%471
 Indonesia114.3132.4152.7193.8216.9240.2256.2275.2324.95.1%17
 South Africa237.9243.4244.4244.8247.7252.6250.6254.3255.13.6%118
 Germany204.9207.8202.8197.1201.9192.4183.7182.3188.61.1%216
 Poland163.8162.4159.5156.1145.9144.0135.2133.2139.21.4%41
 Kazakhstan84.986.986.696.297.8111.1100.9110.9115.91.5%290
உலக மொத்தம்5,301.35,716.06,035.36,342.06,573.36,795.06,880.87,254.67,695.4100%112

பெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்

குறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி நுகர்வு (மில்லியன் அமெரிக்க டன்கள்)[12]
நாடு2008200920102011பங்கு
 China2,9663,1883,6954,05350.7%
 United States1,1219971,0481,00312.5%
 India6417057227889.9%
 Russia2502042562623.3%
 Germany2682482562563.3%
 South Africa2152042062102.6%
 Japan2041812062022.5%
 Poland1491511491622.0%
உலக மொத்தம்7,3277,3187,994பொருந்தாது100%

பெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்

ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி ஏற்றுமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[4][13][14]
நாடு20032004200520062007200820092010பங்கு
 Australia238.1247.6255.0255.0268.5278.0288.5328.127.1%
 Indonesia107.8131.4142.0192.2221.9228.2261.4316.226.1%
 Russia41.055.798.6103.4112.2115.4130.9122.110.1%
 United States43.048.051.751.260.683.560.483.26.9%
 South Africa78.774.978.875.872.668.273.876.76.3%
 Colombia50.456.459.268.374.574.775.776.46.3%
 Canada27.728.831.231.233.436.531.936.93.0%
 Kazakhstan30.327.428.330.532.847.633.036.33.0%
 Vietnam6.911.719.823.535.121.328.224.72.0%
 China103.495.593.185.675.468.825.222.71.9%
 Mongolia0.51.72.32.53.44.47.718.31.5%
 Poland28.027.526.525.420.116.114.618.11.5%
மொத்தம்713.9764.0936.01,000.61,073.41,087.31,090.81,212.8100%

பெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்

20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.[15]

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி இறக்குமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)[5]
நாடு20062007200820092010பங்கு
 Japan199.7209.0206.0182.1206.717.5%
 China42.056.244.5151.9195.116.6%
 South Korea84.194.1107.1109.9125.810.7%
 India52.729.670.976.7101.68.6%
 Taiwan69.172.570.964.671.16.0%
 Germany50.656.255.745.955.14.7%
 Turkey22.925.821.722.730.02.5%
 United Kingdom56.848.949.242.229.32.5%
 Italy27.928.027.920.923.71.9%
 Netherlands25.729.323.522.122.81.9%
 Russia28.826.334.626.821.81.9%
 France24.122.124.918.320.81.8%
 United States40.338.837.823.120.61.8%
மொத்தம்991.81,056.51,063.21,039.81,178.1100%

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிலக்கரி&oldid=3606136" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை