ஜனபாதங்கள்

வேதகால இந்தியாவின் முதன்மையான நாடுகள், குடியரசுகள் மற்றும் இராச்சியங்கள் (அண். கி. மு. 1500-600)
(ஜனபதங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜனபாதங்கள் (Janapadas) (சமசுகிருதம்: जनपद) என்பவை வேத காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த நாடுகள், குடியரசுகள் (கனபதங்கள்) மற்றும் முடியரசுகள் (சாம இராச்சியங்கள்) ஆகும். வேத காலமானது பிந்தைய வெண்கலக் காலம் முதல் இரும்புக் காலத்துக்குள் வரையிலான காலங்களைத் தொடுகிறது. இது கி. மு. 1500ஆம் ஆண்டு முதல் கி. மு. 6ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 16 மகாஜனபாதங்களின் வளர்ச்சியின் போது, பெரும்பாலான ஜனபாதங்கள் அதிக சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் இணைத்துக் கொள்ளப்பட்டன. எனினும், சில ஜனபாதங்கள் சுதந்திர நாடுகளாகத் தொடர்ந்தன.[1]

குடியரசுகள்
ஜனபாதங்கள்
கி. மு. 1200–கி. மு. 600
ஜனபாதங்களை உள்ளடக்கிய வட இந்தியாவின் வரைபடம்
ஜனபாதங்களை உள்ளடக்கிய வட இந்தியாவின் வரைபடம்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம், பிராகிருதம், பாளி
சமயம்
வேத கால சமயம்
பௌத்தம்
சமணம்
அரசாங்கம்குடியரசுகள்
முடியாட்சிகள்
பேரரசுகள்
வரலாற்று சகாப்தம்இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியாவின் இரும்பு யுகம்
• நிறுவப்பட்டது
கி. மு. 1200
• மகாஜனபாதங்களாக இணைக்கப்பட்டது
கி. மு. 600
முந்தையது
பின்னையது
பரத கண்டம்
வேதகாலம்
மகாஜனபாதம்
ஜனபாதங்கள்

பெயர்க் காரணம்

ஜனம் (மக்கள்) மற்றும் பாதம் (காலடி) ஆகிய சொற்கள் இணைந்து ஜனபாதம் என்ற சொல் உருவானது.[2][3]

வளர்ச்சி

கி. மு. 1000 வாக்கில் குரு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு ஷ்ரத்தா சடங்கான அக்னிகயனத்துக்காகப் பயன்படுத்தப்படும் கலங்கள் மற்றும் வல்லூறு வடிவிலான பீடத்தின் நவீன மாதிரி.[4]

இலக்கிய ஆதாரங்கள் ஜனபாதங்கள் கி. மு. 1500 மற்றும் கி. மு. 500க்கு இடையில் செழித்திருந்தன என்று பரிந்துரைக்கின்றன. "ஜனபாதம்" என்ற சொல்லானது முதன் முதலில் ஐத்தரேய (8.14.4) மற்றும் சதபத (13.4.2.17) பிராமண நூல்களில் காணப்படுகிறது.[5]

வேத சம்கிதங்களில் ஜனா என்ற சொல்லானது ஒரு பழங்குடியினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் ஒரே மூதாதையர் மரபைக் கொண்டிருந்ததாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.[6] ஒரு மன்னனால் தலைமை தாங்கப்பட்டு இருந்த ஜனாவின் உறுப்பினர்களின் ஒரு பொதுவான அவையாக சமிதி இருந்தது. அதற்கு ஒரு மன்னனைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது அரியணையிலிருந்து இறக்கவோ சக்தி இருந்தது. மன்னனுக்கு ஆலோசனை கூறிய அறிவு மிகுந்த மூத்தோரின் ஒரு சிறிய அவையாக சபா இருந்தது.[7]

ஜனங்கள் என்பவை உண்மையில் பகுதியளவு நாடோடிகளாக இருந்த மேய்ச்சல் சமூகங்கள் ஆகும். ஆனால், நாடோடி வாழ்க்கையைக் குறைத்துக் கொண்ட போது குறிப்பிட்ட நிலப்பரப்புகளுடன் படிப்படியாக இவர்கள் தொடர்புபடுத்தப்பட்டவர்களாக உருவாயினர். ஜனங்களுக்குள் பல்வேறு குலங்கள் (இனங்கள்) வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு சொந்தத் தலைவர் இருந்தார். படிப்படியாகத் தற்காப்பு மற்றும் போர் முறைத் தேவைகளானவை ஜனங்களை ஜனபதிகளால் (சத்திரியப் போர் வீரர்கள்) தலைமை தாங்கப்பட்ட இராணுவக் குழுக்களை உருவாக்கத் தூண்டின. இந்த முன் வடிவமானது இறுதியாக வளர்ச்சியடைந்து ஜனபாதங்கள் என அறியப்படும் அரசியல் குழுக்கள் நிறுவப்படக் காரணமாகியது.[8]

சில ஜனங்கள் தமது சொந்த ஜனபாதங்களாக வளர்ச்சியடைந்த அதே நேரத்தில், மற்றவை ஒரு பொதுவான ஜனபாதத்தை உருவாக்குவதற்காக ஒன்றாகக் கலந்தன எனத் தோன்றுகிறது. சுதா மிசுரா என்ற அரசியல் அறிவியலாளர் பாஞ்சால ஜனபாதத்தின் பெயரானது அது ஐந்து (பஞ்ச) ஜனங்களின் இணைவு என்பதைப் பரிந்துரைக்கிறது என்கிறார்.[9] ஆரம்ப நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஜனங்கள் (அஜா மற்றும் முதிபா போன்றவை) பிந்தைய நூல்களில் எந்த ஒரு குறிப்பிடுதலையும் பெறவில்லை. இந்த சிறிய ஜனங்கள் வெல்லப்பட்டு பெரிய ஜனங்களுடன் அங்கமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்ற கோட்பாட்டை மிசுரா முன் வைக்கிறார்.[9]

ஜனபாதங்கள் படிப்படியாக கி. மு. 500 வாக்கில் கலைக்கப்பட்டன. வட இந்தியாவில் மகதம் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சி இவற்றின் கலைப்புக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறலாம். தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியில் பாரசீகர்கள் மற்றும் கிரேக்கர்கள் போன்றோரால் நடத்தப்பட்ட அயல்நாட்டுப் படையெடுப்புகளும் இதற்குக் காரணமாக அமைந்தன.[10]

இயற்பண்பு

இக்காலத்தில் வட இந்தியாவில் உச்சபட்ச அரசியல் ஒருமமாக ஜனபாதங்கள் இருந்தன. இந்த அரசியல் அமைப்புகள் பொதுவாகக் முடியரசுகளாக இருந்தன. எனினும், ஒரு சில ஒரு வகைக் குடியரசு அமைப்பைப் பின்பற்றின. இதில் ஆட்சியாளர்கள் மரபு வழியாகப் பதவிக்கு வந்தனர். இராச்சியத்தின் தலைவர் இராஜா அல்லது மன்னர் என்று அழைக்கப்பட்டார். ஒரு புரோகிதர் மற்றும் சேனானி (இராணுவத்தின் தளபதி) ஆகியோர் மன்னனுக்குத் துணையாக இருந்தனர். மேலும், இரண்டு பிற அரசியல் அமைப்புகளும் இருந்தன. அவை மூத்தோர்களின் ஒரு மன்றம் எனக் கருதப்படும் சபா மற்றும் ஒட்டு மொத்த மக்களின் ஒரு பொது அவையான சமிதி ஆகியவை ஆகும்.[11]

இராச்சியங்களின் எல்லைகள்

பெரும்பாலும் ஆறுகள் இரண்டு அண்டை இராச்சியங்களின் எல்லைகளாக இருந்தன. வடக்கு மற்றும் தெற்குப் பாஞ்சாலம், மேற்கு (பாண்டவரின் இராச்சியம்) மற்றும் கிழக்குக் (கௌரவரின் இராச்சியம்) குரு தேசம் ஆகியவற்றை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சில நேரங்களில் இராச்சியங்களை விடப் பெரிய காடுகள் ஜனபாதங்களின் எல்லைகளாக இருந்தன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பாஞ்சாலம் மற்றும் கோசலைக்கு இடையில் இருந்த நைமிசாரண்யக் காட்டை எடுத்துக் கொள்ளலாம். இமயமலை, விந்தியச்சலம் மற்றும் சகியத்திரி போன்ற மலைத் தொடர்களும் இவற்றின் எல்லைகளாக இருந்தன.

நகரங்களும், கிராமங்களும்

அகிச்சத்திரம் (அல்லது அகிச்சேத்திரம்) என்பது வடக்குப் பாஞ்சாலத்தின் பண்டைக் காலத் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகள் பரேலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சில இராச்சியங்கள் ஒரு முதன்மை நகரத்தைக் கொண்டிருந்தன. அந்நகரங்கள் ஜனபாதங்களின் தலைநகரங்களாகச் சேவையாற்றின. எடுத்துக்காட்டாக, பாண்டவர்களின் இராச்சியத்தின் தலை நகரம் இந்திரப்பிரஸ்தம் ஆகும். கௌரவர்களின் இராச்சியத்தின் தலைநகரம் அத்தினாபுரம் ஆகும். வடக்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமானது அகிச்சத்ரா ஆகும். அதே நேரத்தில் தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமானது கம்பில்யா ஆகும். கோசலை தன் தலைநகரத்தை அயோத்தியில் கொண்டிருந்தது. முதன்மை நகரம் அல்லது ஆட்சி செய்யும் மன்னனின் அரண்மனை அமைந்துள்ள நகரமான தலைநகரம் தவிர்த்து, சிறு பட்டணங்களும், கிராமங்களும் இராச்சியம் முழுவதும் பரவியிருந்தன. மன்னரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் வரியானது அவ்விடங்களில் இருந்து வசூலிக்கப்பட்டது. மற்ற மன்னர்கள் மற்றும் கொள்ளைக்காரப் பழங்குடியினங்களில் இருந்து வரும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிப்பதை இதற்குப் பதிலாக மன்னர் செய்தார். மேலும், படையெடுத்து வரும் அயல் நாட்டு நாடோடிப் பழங்குடியினங்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளித்தார். குற்றம் செய்தவர்களைக்குத் தண்டனை கொடுத்ததன் மூலம் தனது இராச்சியத்தில் சட்டம் ஒழுங்கையும் மன்னர் நடைமுறைப்படுத்தினார்.[12][13]

நிர்வாகம்

ஜனபாதங்கள் சத்திரிய ஆட்சியாளர்களைக் கொண்டிருந்தன.[14] இலக்கியக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனபாதங்கள் மன்னருடன் சேர்த்து பின்வரும் அவைகளால் நிர்வாகம் செய்யப்பட்டன என வரலாற்றாளர்கள் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர்:

சபா (மன்றம்)
தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் அல்லது மூத்தோரின் (பெரும்பாலும் ஆண்கள்) ஒரு மன்றத்தை ஒத்த அவையானது மன்னனுக்கு ஆலோசனைகளைக் கூறியது. அவர்கள் நீதி தொடர்பான செயல்களைச் செய்தனர். கானாக்கள் அல்லது குடியரசு ஜனபாதங்கள் கான-இராச்சியம் என்று அழைக்கப்பட்டன. இவற்றிற்கு மன்னர்கள் கிடையாது. மூத்தோரின் அவையானது இதன் நிர்வாகத்தை நடத்தியது.[1]
பௌர சபா (செயல் மன்றம்)
பௌர சபா என்பது தலை நகரத்தின் (புரம்) அவை ஆகும். இது நகர நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டது.[15]
சமிதி (பொது அவை)
ஒரு சமிதி என்பது பொதுவாகக் குடியரசு அல்லது நகர அரசின் அனைத்து முதிர் வயதுடையவர்களையும் கொண்டிருந்தது. ஒட்டு மொத்த நகர அரசுக்கும் ஒரு முக்கியமான கருத்து கூறப்பட வேண்டும் எனும் போது ஒரு சமிதியானது கூட்டப்பட்டது. விழாக்களின் போது திட்டமிடவும், நிதி பெறவும், விழாக்களை நடத்தும் நேரத்திலும் ஒரு சமிதி கூட்டப்பட்டது.
ஜனபாதா
ஜனபாத அவயானது ஜனபாதத்தில் எஞ்சியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒரு வேளை கிராமங்களை இது பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிராமங்கள் ஒரு கிராமினியால் நிர்வாகம் செய்யப்பட்டன.[15]

"பௌர-ஜனபாதா" என்று அழைக்கப்பட்ட ஒரு பொதுவான அவை இருந்தது என சில வரலாற்றாளர்கள் கோட்பாடுகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், ராம் சரண் சர்மா போன்ற பிறர் இக்கோட்பாட்டுடன் ஒத்துப் போவதில்லை. பௌர சபா மற்றும் ஜனபாதா ஆகிய அவைகள் இருந்தன என்பதே ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக உள்ளது.[16]

இராச்சியங்களுக்கு இடையிலான தொடர்பு

ஜனபத ஆயுதங்கள்
பண்டைக்கால இந்திய உணர் கொம்பு வாள்; உலோக வேலைப்பாடு, கி. மு. 1800 – கி. மு. 1500 [17]
பண்டைக்கால இந்தியக் கோடரிக் கூர் விளிம்பு, கி. மு. 1800 – கி. மு. 1500[18]

ஒரு இராச்சியத்திற்கு எல்லைக் காவல் என்று யாரும் கிடையாது. எல்லைப் பிரச்சனைகள் மிக அரிதாகவே ஏற்பட்டன. ஒரு மன்னர் ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்தலாம். இது திக்விஜயா என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் அனைத்து திசைகளையும் வெற்றி கொள்வது என்பதாகும். ஒரு மன்னர் மற்றொரு மன்னரை ஒரு யுத்தத்தில் தோற்கடிக்கலாம். இந்த யுத்தங்கள் ஒரு நாளுக்கு நீடித்தன.[19] வென்ற மன்னரின் முதன்மை நிலையைத் தோற்கடிக்கப்பட்ட மன்னர் ஒப்புக் கொள்வார். சில நேரங்களில், தோற்கடிக்கப்பட்ட மன்னர் வெற்றி பெற்ற மன்னருக்கு திறை செலுத்துமாறு கூறப்படும். இத்தகைய திறையானது ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக அவை செலுத்தப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் தோற்கடிக்கப்பட்ட மன்னர் தன்னுடைய சொந்த இராச்சியத்தை ஆளுவதற்குச் சுதந்திரம் கொடுக்கப்படுவார். தோற்ற மன்னருடன் எந்த வித தொடர்பையும் பேணாமல் அவர் தன் இராச்சியத்தை ஆள்வார். ஒரு இராச்சியம் மற்றொரு இராச்சியத்தை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. மன்னருக்காக இந்த நடவடிக்கைகளை ஒரு இராணுவத் தளபதி பெரும்பாலும் நடத்தினார். ஒரு இராணுவ படையெடுப்பும், திறை செலுத்துவதும் பெரும்பாலும் ஒரு பெரிய சடங்குடன் (இராசசூய வேள்வி அல்லது அசுவமேத யாகம் போன்ற) படையெடுக்கும் மன்னரின் இராச்சியத்தில் நடத்தப்படும். இந்தச் சடங்குகளுக்குத் தோற்கடிக்கப்பட்ட மன்னரும் ஒரு நண்பனாகவும், கூட்டாளியாகவும் அழைக்கப்படுவார்.[20]

புதிய இராச்சியங்கள்

ஒரு பெரிய இனமானது ஒரு தலைமுறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மன்னர்களைப் பெற்றெடுத்த போது புதிய இராச்சியங்கள் உருவாக்கப்பட்டன. தங்களது ஏராளமான இராச்சியங்கள் மூலம் வட இந்தியா முழுவதும் ஆட்சி செய்ததில் குரு இன மன்னர்கள் மிகுந்த வெற்றிகரமானவர்களாகத் திகழ்ந்தனர். ஒவ்வொரு வெற்றிகரமான தலைமுறைக்குப் பிறகும் இந்த இராச்சியங்கள் உருவாக்கப்பட்டன. இதே போல் நடு இந்தியாவில் யாதவர் இன மன்னர்கள் ஏராளமான இராச்சியங்களை உருவாக்கினர்.[21]

கலாச்சார வேற்றுமைகள்

இராசசூய வேள்வியை நடத்தும் வேத கால மன்னர்.

மேற்கு இந்தியாவின் பகுதிகள் சற்றே வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்ட பழங்குடியினங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. குரு மற்றும் பாஞ்சால இராச்சியங்களில் இருந்த பெரும்பான்மை நடைமுறை வழக்குடையோரான வேத கலாச்சாரத்தவரால் வேதம் சாராதவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். இதே போல் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் சில பழங்குடியினங்கள் கருதப்பட்டன.[22] வேதம் சாராத கலாச்சாரம் இடையே பழங்குடியினங்கள், குறிப்பாக காட்டுமிராண்டி இயல்பைக் கொண்டவை, மிலேச்சர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டனர். இமயமலை தாண்டி வடக்கே இருந்த இராச்சியங்கள் குறித்து பண்டைக்கால இந்திய இலக்கியத்தில் மிகச் சிறிதளவே குறிப்பிடப்பட்டுள்ளது. சினா என்று அறியப்பட்ட ஒரு இராச்சியமாகச் சீனா குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் மிலேச்ச இராச்சியங்களுடன் குழுப்படுத்தப்பட்டது.

ஜனபாதங்களின் பட்டியல்

வேத இலக்கியப் படி

பண்டைக்கால இந்தியாவின் ஐந்து பிரிவுகளை வேதங்கள் குறிப்பிடுகின்றன:[23]

  • உதிச்ய (வடக்குப் பகுதி)
  • பிரச்ய (கிழக்குப் பகுதி)
  • தக்சிண (தெற்குப் பகுதி)
  • பிரதிச்ய (மேற்குப் பகுதி)
  • மத்திய-தேச (நடுப் பகுதி)

வேத இலக்கியமானது பின்வரும் ஜனங்கள் அல்லது ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது:[24]

ஜனா அல்லது ஜனபாதாசர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடிப் பெயர்பகுதிஇருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைஅதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை
அஜாஅஜாநடு
அளினாஅளினாமேற்கு
அம்பஷ்தாஅம்பஸ்தாநடு
ஆந்திராஆந்த்ராதெற்கு
அங்காஅங்காகிழக்கு
அனுஅனுமேற்கு
பாலீகாபல்ஹிகாவடக்கு
பளனாபளனாமேற்கு
பரத்வாஜாபரத்வாஜாநடு
பாரதம்பாரதாநடு
பேடாபேடாநடு
போதாபோதாநடு
சேதிசேதிநடு
துருகுயுதுருகுயுமேற்கு
காந்தாரிகாந்தாரிமேற்கு
கம்போஜாகம்போஜாவடக்கு
கெஷின்கெசின்நடு
கீகடாகீகடாகிழக்கு
கிராதாகிராதாகிழக்கு
கோசலாகோசலாகிழக்கு
கிரிவிக்ரிவிநடு
குந்திகுந்திநடு
கலிங்காகலிங்காகிழக்கு
குருகுருநடு
மகதாமகதாகிழக்கு
மகாவ்ரிஷாமகாவ்ரிசாவடக்கு
மத்ஸ்யாமத்ஸ்யாநடு
முஜவனாமுஜவனாவடக்கு
முதிபாமுதிபாதெற்கு
நிசாதாநிசாதாநடு
பக்தாPakthaமேற்கு
பாஞ்சாலாபன்கலாநடு
பர்ஷுபர்ஸுமேற்கு
பர்வதாபர்வதாநடு
ப்ரிதுப்ரிதுமேற்கு
புலிந்தாபுலிந்தாதெற்கு
புந்த்ராபுந்த்ராகிழக்கு
புருபுருமேற்கு
ருசமாருசமாநடு
சால்வாசால்வாநடு
சதவந்தாசதவந்தாதெற்கு
சபராசபராதெற்கு
சிக்ருசிக்ருநடு
சிவாசிவாமேற்கு
சிவிக்னாசிவிக்னாநடு
சிறிஞ்சயாசிறிஞ்சயாநடு
திரித்சுதிரித்சுநடு
துர்வாசாதுர்வாசாமேற்கு
உஷினராஉசினராநடு
உத்தர குருஉத்தர குருவடக்கு
உத்தர மத்ராஉத்தர மத்ராவடக்கு
வைகர்ணாவைகர்ணாவடக்கு
வங்காவங்காகிழக்கு
காசிகாசிகிழக்கு
வரசிகாவரசிகாநடு
வாசாவாசாநடு
விதர்பாவிதர்பாதெற்கு
விதேகாவிதேகாகிழக்கு
விசனின்விசனின்மேற்கு
வ்ரிசிவந்தாவ்ரிசிவந்தாமேற்கு
யதுயதுமேற்கு
யக்சாயக்சுநடு

புராண இலக்கியம்

புராணங்கள் பண்டைக் கால இந்தியாவின் ஏழு துணைப் பிரிவுகளைக் குறிப்பிடுகின்றன:[25]

  • உதிச்யா (வடக்குப் பகுதி)
  • ப்ரச்யா (கிழக்குப் பகுதி)
  • தக்சிணபாத (தெற்குப் பகுதி)
  • அபரந்தா (மேற்குப் பகுதி)
  • மத்திய-தேசா (நடுப் பகுதி)
  • பர்வத-சிரயின் (இமயமலைப் பகுதி)
  • விந்திய-ப்ரஷ்தா (விந்திய மலைப் பகுதி)

சுதாமா மிசுரா என்ற அரசியல் அறிவியலாளரின் ஆய்வுப் படி, புராண நூல்கள் பின்வரும் ஜனபாதங்களைக் குறிப்பிடுகின்றன:[26]

ஜனபாதம்பகுதிபுராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?மாற்றுப் பெயர்களும், அமைவிடங்களும்
மச்ச
(உட்பிரிவு 114)
வாயு
(உட்பிரிவு 45)
மார்க்கண்டேய
(உட்பிரிவு 57)
வாமன
(உட்பிரிவு 13)
பிரம்மாண்ட
(உட்பிரிவு 16)
அபிரா (வடக்கு)வடக்கு
அபிரா (தெற்கு)தெற்கு
அபிசகா (அபிசகா)வடக்குஅபங்கா (வாயு), ஔபதா (மார்க்கண்டேய), அலாசா (வாமன)
அகுகாவடக்குகுககா (மார்க்கண்டேய), குகுகா (வாமன)
அலிமத்ராவடக்குஅனிபத்ரா (மார்க்கண்டேய), அளிபத்ரா (வாமன)
ஆனர்த்தாமேற்குஅவந்த்யா மார்க்கண்டேய, வாமன
அந்தகாநடு
ஆந்திராதெற்குஆந்தா (மார்க்கண்டேய)
ஆந்திரவகாகிழக்குஆந்தரகா (மார்க்கண்டேய)
அங்காகிழக்குநடு மற்றும் கிழக்கு (வாமன)
அங்காரமாரிசா (அங்கார-மாரிசா)தெற்கு
அந்தரநர்மதாமேற்குஉத்தரநர்மதா (மார்க்கண்டேய), சுநர்மதா (வாமன)
அந்தர்கிரிகிழக்கு
அனூபாவிந்திய மலைஅரூபா (மச்ச), அன்னஜா (வாயு)
அபரிதாவடக்குபுரந்த்ரா (மச்ச), அபரந்தா (மார்க்கண்டேய)
அர்தபாநடுஅதர்வா (மார்க்கண்டேய)
அஸ்மகா (அஷ்மகா)தெற்கு
அஸ்வகுதாநடு
அதவிதெற்குஆரண்ய (மார்க்கண்டேய), அதவ்யா (பிரம்மாண்ட)
அத்ரேயாவடக்குஅத்ரி (மச்ச, பிரம்மாண்ட)
ஔந்தராவிந்திய மலை
அவந்திவிந்திய மலைநடு மற்றும் விந்திய மலை (மச்ச)
பகிர்கிரிகிழக்கு
வகலிகாவடக்கு
பகுலாவடக்குபகலவா (வாயு), பகுதா (வாமன)
பர்பராவடக்குநடு மற்றும் வடக்கு (வாமன)
பத்ராகிழக்கு மற்றும் நடு
பத்ரகராநடு
பரத்வாஜாவடக்கு
பார்கவாகிழக்கு
பருகச்சாமேற்குபனுகச்சா (வாயு), பிருகச்சா (மார்க்கண்டேய), தருகச்சா (வாமன), சகக்கச்சா (பிரம்மாண்ட)
போகவர்தனாதெற்கு
போஜாவிந்திய மலைகோப்தா (வாமன)
பௌசிகா (பௌஷிகா)வடக்கு
போதாநடுபகியா (மச்ச)
பிரமோத்தராகிழக்குசுகமோத்தரா (மச்ச), சமந்தரா (பிரம்மாண்ட)
கர்மகன்டிகா (சர்மகன்டிகா)வடக்குஅத்தகந்திகா (மச்ச), சகேதகா (வாமன)
கேரளாதெற்குகேவளா (மார்க்கண்டேய)
சினா (சீனா)வடக்குபினா (வாயு), வேனா (வாமன)
சோழாதெற்குசௌல்யா (வாயு), சௌடா (வாமன); தெற்கு மற்றும் கிழக்கு (பிரம்மாண்ட)
சுலிகாவடக்குசுடிகா (வாமன), விந்தியசுலிகா (பிரம்மாண்ட)
தன்டகாதெற்கு
தராதாவடக்கு
தர்வாஇமய மலைஇமய மலை மற்றும் வடக்கு (வாயு மற்றும் மார்க்கண்டேய)
தசேரகா (தஷேரகா)வடக்குகர்சேருகா (வாயு), குசேருகா (மார்க்கண்டேய)
தசமலிகா (தஷமலிகா)வடக்குதசனமகா (மச்ச), தசமனிகா (வாயு), தன்சனா (வாமன)
தசார்னா (தஷார்னா)விந்திய மலை
துருகுயுவடக்குகிரதா (வாயு), பத்ரா (பிரம்மாண்ட)
துர்காமேற்குதுர்கலா (பிரம்மாண்ட)
கணகாவடக்கு
கந்தாராவடக்கு
கோதாநடு
கோலங்குலாதெற்கு
கோனர்தாகிழக்குகோவிந்தா (வாயு), கோமந்தா (மார்க்கண்டேய), மனந்தா (வாமன)
அம்சமர்காஇமய மலைசர்வகா (இமய மலை) (மச்ச); அம்சமர்கா (வடக்கு மற்றும் இமய மலை) (வாயு மற்றும் மார்க்கண்டேய); கர்ணமர்கா (வடக்கு) மற்றும் அம்சமர்கா (இமய மலை) (வாமன); அம்சமர்கா (இமய மலை) அம்சபங்கா (வடக்கு) (பிரம்மாண்ட)
ஹர-ஊணகாவடக்குபுர்னா (வாயு), உர்னா (மார்க்கண்டேய), குர்னா (வாமன), ஊணா (பிரம்மாண்ட)
ஹரமுசிகா (ஹரமுஷிகா)வடக்குஹரமூர்த்திகா (மச்ச), ஹரபுரிகா (வாயு), சமுசகா (வாமன)
குகுகாஇமய மலைசமுத்ககா (மச்ச), சகுதகா (வாயு), சக்ரத்ரகா (மார்க்கண்டேய), சகுகுகா (வாமன), சகுகுகா (பிரம்மாண்ட)
இஜிகாவடக்கு
இசிகா (இஷிகா)தெற்குவைசக்யா (மார்க்கண்டேய)
ஜகுடாவடக்குஜங்கலா (மச்ச), ஜுஹுடா (வாயு), ஜகுடா (மார்க்கண்டேய)
ஜங்கலாநடு
ஜனேயமர்தகாகிழக்குஜனேயமல்லகா (மார்க்கண்டேய), அங்கியமர்சகா (வாமன), கோபபர்திவா (பிரம்மாண்ட)
கச்சிகாமேற்குகச்சிகா (மச்ச), கச்சியா (வாயு), காஸ்மிரா (மார்க்கண்டேய), கச்சிபா (பிரம்மாண்ட)
கலதோயகாவடக்கு
கலிங்கா (நடு)நடுஅர்கலிங்கா (மார்க்கண்டேய)
கலிங்கா (தெற்கு)தெற்கு
கலிதகாமேற்குகலிதகா (வாயு), அனிகதா (மார்க்கண்டேய), தலிகதா (வாமன), குந்தலா (பிரம்மாண்ட)
கலிவனாமேற்குகோலவனா (வாயு), கலிவலா (மார்க்கண்டேய), வரிதனா (வாமன), கலிவனா (பிரம்மாண்ட)
கம்போஜாவடக்கு
கன்டகராவடக்குகந்தகரா (மச்ச), இரத்தகதகா (வாயு), பாகுபத்ரா (மார்க்கண்டேய), கதரா (வாமன)
கரஸ்கராமேற்குபரஸ்கரா (வாயு), கதக்சரா (மார்க்கண்டேய), கரந்தரா (பிரம்மாண்ட)
கரூசா (கரூஷா)விந்திய மலைதெற்கு மற்றும் விந்திய மலை (மச்ச)
காஸ்மீரா (கஷ்மீரா)வடக்கு
கௌசிகாநடு
கேகேயாவடக்குகைகேய்யா (மச்ச), கைகேயா (மார்க்கண்டேய), கைகேயா (வாமன)
கசாஇமய மலைகசா (வாமன), சகா (பிரம்மாண்ட)
கிராதாஇமய மலைகிராதா (மச்ச, நடு மற்றும் இமய மலை)
கிசன்னாநடு
கிட்கிந்தகா (கிஷ்கிந்தகா)விந்திய மலைகிகரவா (வாமன)
கொங்கானாதெற்கு
கோசலா (நடு)நடு
கோசலா (விந்திய மலை)விந்திய மலை
குக்குதாவடக்கு
குலுதாவடக்குஉலுதா (பிரம்மாண்ட)
குல்யாதெற்கு மற்றும் நடுநடு (மார்க்கண்டேய); தெற்கு (வாமன மற்றும் பிரம்மாண்ட)
குமாராதெற்குகுபாதா (மச்ச), குமனா (வாயு), குசுமா (மார்க்கண்டேய), குமரதா (வாமன), குசபனா (பிரம்மாண்ட)
குனின்டாவடக்குபுலிந்தா (மச்ச), கலிங்கா (மார்க்கண்டேய), கலிந்தா (பிரம்மாண்ட)
குந்தளாதெற்கு மற்றும் நடுகுந்தலா ( (மச்ச, நடு), குந்தலா (வாமன)
குபதாஇமய மலைகசுபனா (வாயு), குரவா (மார்க்கண்டேய)
குருநடுகௌரவா (வாமன)
குசல்யா (குஷல்யா)நடு
குசத்ரா (குஷத்ரா)நடு
குதப்ரவரனாஇமய மலைகசப்ரவரனா (வாயு), குந்தப்ரவரனா (மார்க்கண்டேய), அபப்ரவரனா (பிரம்மாண்ட)
இலல்கிட்டாவடக்கு
இலம்பகாவடக்குஇலமகா (பிரம்மாண்ட)
மத்ரகாவடக்குபத்ரகா (வாயு மற்றும் வாமன), மன்டலா (பிரம்மாண்ட)
மத்குரகாகிழக்குமுத்ரகா (மார்க்கண்டேய), முதகரகா (பிரம்மாண்ட)
மத்ரேயாநடு
மகதாகிழக்குநடு மற்றும் கிழக்கு (வாயு மற்றும் பிரம்மாண்ட)
மஹாராஸ்ட்ரா (மகாராஷ்ட்ரா)தெற்குநவராஸ்ட்ரா (மச்ச)
மகேயாமேற்கு
மகிசிகா (மகிஷிகா)தெற்குமகிசகா (வாயு மற்றும் மார்க்கண்டேய)
மலாடாகிழக்குமலாவா (மச்ச), மனாடா (மார்க்கண்டேய), மன்சதா (வாமன)
மலாகாநடு
மலாவர்திகாகிழக்குமல்லவர்னகா (மச்ச), மலாவர்தின் (வாயு), மனாவர்திகா (மார்க்கண்டேய), பலதந்திகா (வாமன)
மலாவாவிந்திய மலைஏகலவ்யா (வாமன), மலாடா (பிரம்மாண்ட)
மல்லாகிழக்குசல்வா (மச்ச), மலா (வாயு), மையா (வாமன)
மன்டலாஇமய மலைமலாவா (வாயு), மலாவா (மார்க்கண்டேய)
மன்டவியாவடக்கு
மசா (மஷா)விந்திய மலை
மதங்காகிழக்கு
மத்ஸ்யாநடுஎத்சுதா (வாமன)
மௌலிகாதெற்குமௌனிகா (வாயு)
மேகலாவிந்திய மலைரோகலா (வாயு), கேவளா (மார்க்கண்டேய)
அர்புதாமேற்கு
முகாநடு
முசிகா (முஷிகா)தெற்குசுதிகா (மச்ச), முசிகதா (வாமன), முசிகா (பிரம்மாண்ட)
நைர்னிகாதெற்குநைசிகா (மார்க்கண்டேய)
நலகலிகாதெற்குவனதரகா (மார்க்கண்டேய), நலகரகா (வாமன)
நசிக்யாமேற்குவசிக்யா (மச்ச), நசிகந்தா (வாமன), நசிகா (பிரம்மாண்ட)
நிரகராஇமய மலைநிகர்கரா (வாயு), நிகரா (மார்க்கண்டேய)
நைசதா (நைஷதா)விந்திய மலைநிசதா (வாயு)
பகலவாவடக்குபல்லவா (வாயு தவிர அனைத்திலும்)
பனவியாவடக்கு
பாஞ்சாலாநடு
பாண்டியாதெற்குபுந்தரா (மார்க்கண்டேய), புந்தரா (வாமன)
பரதாவடக்குபரிதா (வாயு), பர்வதா (வாமன)
பதச்சாராநடுசதபதேஸ்வரா (வாயு)
பௌரிகாதெற்குபௌனிகா (வாயு), பௌரிகா (மார்க்கண்டேய), பௌரிகா (வாமன), பௌரிகா (பிரம்மாண்ட)
ப்லுஸ்தாஇமய மலை
பிரக்ஜோதிசாகிழக்கு
பிரஸ்தலாவடக்குபுஸ்கலா (மார்க்கண்டேய)
பிரவங்காகிழக்குபுலவங்கா (மச்ச மற்றும் பிரம்மாண்ட)
பிரவிஜயாகிழக்குபிரவிசேயா (பிரம்மாண்ட)
பிரியலௌகிகாவடக்குஹர்சவர்தனா (மார்க்கண்டேய), அங்கலௌகிகா (வாமன), அங்கலௌகிகா (பிரம்மாண்ட)
புலேயாமேற்குகுலியா (மச்ச), புலிந்தா (மார்க்கண்டேய), புலியா (வாமன), பௌலேயா (பிரம்மாண்ட)
புலிந்தாதெற்கு
புந்தராகிழக்குமுன்டா (வாயு), மத்ரா (மார்க்கண்டேய), பிரசத்ரா (வாமன)
இராட்சசாதெற்கு
இராமதாவடக்குமதரா (மார்க்கண்டேய), மதரோதா (வாமன)
உரூபாசாமேற்குகுபசா (வாயு), ருபபா (மார்க்கண்டேய), ருபகா (பிரம்மாண்ட)
சைனிகாவடக்குபிதிகா (வாயு), சுலிகா (மார்க்கண்டேய), ஜிலிகா (பிரம்மாண்ட)
சால்வா (ஷால்வா)நடு
சரஜாவிந்திய மலை
சரஸ்வதாமேற்கு
சரீகாதெற்கு
சௌராட்டிராமேற்குசௌராட்டிரா (மச்ச)
சௌசல்யாநடு
சௌவீராவடக்கு
சேதுகாதெற்குசைலுசா (மார்க்கண்டேய), ஜனுகா (வாமன)
சபராதெற்குபரா (வாயு), சரவா (பிரம்மாண்ட)
சகாவடக்குநடு (வாமன)
சசிகத்ரிகாஇமய மலை
சதத்ருஜாவடக்குசதத்ரவா (வாமன)
சாத்புராவிந்திய மலைபதகமா (மச்ச), சத்சுரா (வாயு), பதவா (மார்க்கண்டேய), பகேலா (வாமன)
சுலகாராவடக்கு
சூர்பரகாமேற்குசுர்பரகா (வாயு), சூர்யரகா (மார்க்கண்டேய), சூர்யரகா (பிரம்மாண்ட)
சிந்துவடக்கு
சிரலாமேற்குசுரலா (வாயு), சுமினா (மார்க்கண்டேய), சினிலா (வாமன), கிரதா (பிரம்மாண்ட)
சூத்ராவடக்குசுகியா (பிரம்மாண்ட)
சுஜரகாகிழக்கு
சுபர்சவாவடக்கு
சூரசேனாநடு
தைத்ரிகாமேற்குதைத்ரிகா (மச்ச), துரசிதா (வாயு), குருமினி (மார்க்கண்டேய), துபமினா (வாமன), கரிதி (பிரம்மாண்ட)
தலகனாவடக்குதலகனா (மச்ச), சதனபா (வாயு), தவகரமா (வாமன), தலசலா (பிரம்மாண்ட)
தமசாஇமய மலைசமரா (மச்ச), தோமரா (வாமன), தமரா (பிரம்மாண்ட)
தமஸ்மேற்கு
தம்ரலிபதகாகிழக்கு
தங்கனாஇமய மலைஅபதா (மச்ச), குர்குனா (மார்க்கண்டேய)
தங்கனாவடக்குதுங்கனா (மார்க்கண்டேய)
தபசாமேற்குசவபதா (மார்க்கண்டேய), தபகா (பிரம்மாண்ட)
திலங்காநடு
தோமராவடக்குதமசா (மார்க்கண்டேய மற்றும் வாமன)
தோசலாவிந்திய மலை
திரைபுராவிந்திய மலை
திரிகர்த்தாஇமய மலை
தும்பராவிந்திய மலைதும்புரா (வாயு), தும்புலா (மார்க்கண்டேய), பர்பரா (பிரம்மாண்ட)
துமுராவிந்திய மலைதும்புரா (மார்க்கண்டேய), துரகா (வாமன), துகுந்தா (பிரம்மாண்ட)
துந்திகேராவிந்திய மலைசௌந்திகேரா (மச்ச), துசுதிகரா (மார்க்கண்டேய)
துர்னபதாவடக்கு
துசாராவடக்குதுகரா (மார்க்கண்டேய)
உத்பிதாதெற்குஉலிதா (வாமன), குலிந்தா (பிரம்மாண்ட)
உர்னாஇமய மலைஉனா (வாயு)
உத்கலாவிந்திய மலைகிழக்கு மற்றும் நடு (பிரம்மாண்ட)
உத்தமர்னாவிந்திய மலைஉத்தமா (பிரம்மாண்ட)
வகியதோதராவடக்குகிரிககவரா (பிரம்மாண்ட)
வனவசிகாதெற்குவஜிவசிகா (மச்ச), பனவசிகா (வாயு), நமவசிகா (மார்க்கண்டேய), மகாசகா (வாமன)
வங்காகிழக்குநடு மற்றும் கிழக்கு (வாமன)
வங்கேயாகிழக்குமர்கவகேயா (மச்ச), இரங்கேயா (மார்க்கண்டேய), வோஜ்னேயா (பிரம்மாண்ட)
காசிநடு
வததனாவடக்கு
வத்சாநடு
வத்சியாமேற்கு
வைதர்ப்பாதெற்கு
விதேகாகிழக்கு
வைதிசாவிந்திய மலைவைதிகா (வாயு), கொல்லிசா (வாமன)
விந்தியமுலிகாதெற்குவிந்தியபுசிகா (மச்ச), விந்தியசைலேயா (மார்க்கண்டேய), விந்தியமௌலியா (பிரம்மாண்ட)
விதிகோத்ராவிந்திய மலைவிரகோத்ரா (மார்க்கண்டேய), விதகோத்ரா (வாமன)
விர்காநடு
யமாகாகிழக்கு
யவனாவடக்குகவலா (மார்க்கண்டேய)

சமசுகிருத இதிகாசங்கள்

மகாபாரதத்தின் பீஷ்ம பருவமானது சுமார் 230 ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், இராமாயணம் இதில் ஒரு சிலவனவற்றையே குறிப்பிடுகிறது. புராணங்களைப் போல் இல்லாமல் பண்டைக்கால இந்தியாவின் எந்த ஒரு புவியியல் பிரிவுகளையும் மகாபாரதம் குறிப்பிடவில்லை. ஆனால், சில ஜனபாதங்களைத் தெற்கு அல்லது வடக்கு எனப் பகுப்பதற்கு ஆதரவளிக்கிறது.[27]

பௌத்த நூல்கள்

பௌத்த விதி நூல்களான அங்குத்தர நிகயா, திகா நிகயா, சுல்லா-நித்தேசா ஆகியவை தங்களுக்குள் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் முதன்மையாகப் பின் வரும் 16 மகாஜனபாதங்களைக் குறிப்பிடுகின்றன:[28]

சமண நூல்

சமண நூலான வியக்யபிரஜ்னப்தி அல்லது பகவதி சூத்திரம் 16 முக்கிய ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், பல பெயர்கள் பௌத்த நூல்களில் உள்ளவற்றிலிருந்து வேறுபடுகின்றன.[28]

  1. அச்சா
  2. அங்கா
  3. அவகா
  4. பச்சி (வஜ்ஜி அலல்து வ்ரிஜ்ஜி)
  5. பங்கா (வங்கா)
  6. காசி
  7. கோச்சா
  8. கோசலா
  9. இலதா
  10. மகதா
  11. மலவகா
  12. மலயா
  13. மோலி (மல்லா)
  14. பதா
  15. சம்புத்தரா
  16. வத்சா (வத்ச நாடு)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜனபாதங்கள்&oldid=3641076" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்