ஜான் டோரி

ஒரு மீன் இனம்
ஜான் டோரி
புதைப்படிவ காலம்:ஒலிகோசீன் முதல்[1]
PreЄ
Pg
N
சீயசு பேபர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சீயிடே
பேரினம்:
இனம்:
'சீ. நெபுலோசா'
இருசொற் பெயரீடு
சீயசு நெபுலோசா
லின்னேயஸ், 1758
John Dory, Zeus faber

ஜான் டோரி (John Dory) என்பது செயின்ட் பியர் அல்லது பீட்டர்ஸ் மீன் , ஜீயசு பேரினத்தின் மீன்கள், பொதுவாக ஜீயஸ் ஃபேபர் மீனைக் குறிக்கிறது. உண்ணத்தக்க மீனான, இந்த மீன்களின் உடலின் நடுவே ஒரு பெரிய கருப்புப் பொட்டும் அந்த பொட்டைச் சுற்றி ஆலிவ்மஞ்சள் நிற விளிம்பும் இருப்பதும், இந்த மீன்களின் பொதுவான அடையாளமாகும். மேலும் இதன் முதுகுத் துடுப்பில் எட்டு முதல் பத்து வரையிலான முள் தூவிகள் நீண்டிருக்கும். மேலும் இதன் முதுகிலும், அடி வயிற்றிலும் சிறு முட்கள் வரிசையாக இருக்கும். ஜான் டோரியின் உடலில் காணப்படும் பெரிய கருப்புப் பொட்டானது பெரிய இரைகொல்லி மீன்களிடம் இருந்து இம்மீன் தப்ப உதவுகிறது. இந்த பொட்டை மீனின் கண்ணாக நினைத்து குழம்பும் பெரிய இரைகொல்லி மீன் இதை தாக்க முனையும்போது, அதன் குழப்பத்தை பயன்படுத்தி சிறிய சேதத்துடன் இந்த மீன் தப்ப வாய்ப்பு ஏற்படுகிறது. [3] [4]

நியூசிலாந்தின், மாவோரி மக்கள் இதை குபாரு என்று அழைக்கின்றனர். வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில், அவர்கள் 1769 இல் நியூசிலாந்திற்கு முதல் பயணத்தில் வந்த கேப்டன் ஜேம்ஸ் குக்கிற்கு சிலவற்றைக் கொடுத்தனர். அவற்றில் பல ஊறுகாய் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டன. [3]

பெயர்

ஜான் டோரி என்ற பெயர் வந்தவிதம் குறித்து பல்வேறு சந்தேகத்திற்குரிய கற்பனை விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த மீனின் பக்கவாட்டில் உள்ள கருப்புப் பொட்டில் நுண் வரிகள் உள்ளன. இவை ஏசுவின் சீடர்களில் ஒருவரான இராயப்பரின் விரல் ரேகையாக சிலர் கருதுகின்றனர். ஏசுவின் கட்டளைக்கிணங்க இந்த மீனை இராயப்பர் கலிலியோ கடலில் பிடித்ததாகவும், அதன் வாயில் இருந்து காசை எடுத்த பின் அதை மீண்டும் கடலில் விட்டதாகவும் ஒரு தொன்மம் உண்டு. [5] அப்போது இராயப்பரின் கட்டை விரல் ரேகை இந்த மீனில் பதிந்தது என்று குறிப்பிடுகின்றனர்.. [6] எசுபானியாவினின் வடக்கு கடற்கரையில், இது பொதுவாக சான் மார்டினோ என்று அழைக்கப்படுகிறது.

உருவவியல்

ஜான் டோரி, வில்லியம் மெக்கிலிவ்ரே, சி. 1840

ஜான் டோரி அதிகபட்சமாக 65  செமீ (2 அடி) மற்றும் 5 கிலோ (12 எல்பி) எடைவரை வளரும். இதன் முதுகுத் துடுப்பில் பத்து வரையிலான முள் தூவிகள் நீண்டிருக்கும். மேலும் இதன் குதத் துடுப்பில் 4 முள் தூவிகள் காணப்படுகின்றன. இதன் உடல் முழுவதும் அழகிய நுண்ணிய, கூர்மையான செதில்களைக் கொண்டிருக்கும். இந்த மீனின் உடல் ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். இந்த மீக்களின் உடலின் நடுவே ஒரு பெரிய கருப்பு பொட்டும் அந்த பொட்டைச் சுற்றி ஆலிவ்மஞ்சள் நிற விளிம்பும் இருக்கும். இந்த மீன் தட்டையான, வட்டமான உடல் வடிவத்தைக் கொண்டிருக்கும்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_டோரி&oldid=3605532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை