ஜிம் யோங் கிம்

ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார்.[1] இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார்.[2] 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.[3]

ஜிம் யோங் கிம்
김용
金勇
உலக வங்கித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 16, 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 8, 1959 (1959-12-08) (அகவை 64)
சியோல், தென் கொரியா
துணைவர்யூன்சூக் லிம்
பிள்ளைகள்2
வாழிடம்(s)அனோவர், நியூ ஹாம்சயர்
முன்னாள் கல்லூரிபிரௌன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
தொழில்மருத்துவர்
ஜிம் யோங் கிம்
Hangul김용
Hanja金勇
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Yong
McCune–ReischauerKim Yong

முன்னதாக டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பார்ட்னர்ஸ் இன் எல்த் என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.[4]

இவர் சனவரி 7 2019 இல் தான் உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், 2019 பெப்ரவரி 1 அன்று இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jim Yong Kim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜிம்_யோங்_கிம்&oldid=3267132" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை