டெட்ரோசு அதானோம்

டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் ( கீஸ் : ቴዎድሮስ አድሓኖም born; பிறப்பு 3 மார்ச் 1965) [1] ஒரு எத்தியோப்பிய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக இருந்து வருகிறார். அவர் முன்னர் எத்தியோப்பியா அரசாங்கத்தில் 2005 முதல் 2012 வரை சுகாதார அமைச்சராகவும் [2] மற்றும் 2012 முதல் 2016 வரை வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் . [3]

டெட்ரோசு அதானோம்
ቴዎድሮስ አድሓኖም ገብረኢየሱስ
2018 ஆம் ஆண்டில் டெட்ரோசு
8வது இயக்குநர் - ஜெனரல் உலக சுகாதார அமைப்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூலை 2017
முன்னையவர்மார்க்ரெட் சான்
எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
29 நவம்பர் 2012 – 1 நவம்பர் 2016
பிரதமர்ஐலேமரியம் டெசாலேன்
முன்னையவர்பெர்ஹானே கெப்ரே-கிரிஸ்டோஸ் (பொறுப்பு)
பின்னவர்ஒர்க்னே கெபேயேகு
சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
12 அக்டோபர் 2005 – 29 நவம்பர் 2012
பிரதமர்மெலிஸ் ஜெனாவி
ஐலேமரியம் டெசாலேன்
முன்னையவர்கெபேடே டாடீசி
பின்னவர்கெசேடிபிரான் அட்மாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மார்ச்சு 1965 (1965-03-03) (அகவை 59)
அஸ்மாரா, எரிடேரா மாகாணம், எத்தியோப்பியப் பேரரசு (தற்போது எரித்திரியா)
அரசியல் கட்சிடைக்ரேயன் மக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர சனநாயக முன்னணி
முன்னாள் கல்லூரிஅஸ்மாரா பல்கலைக்கழகம் (இளங்கலைப் பட்டம்)
இலண்டன் ஸ்கூல் ஆப் ஐஜீன் மற்றும் ட்ராபிகல் மெடிசின் (முதுகைலப் பட்டம்)
நாட்டிங்காம் பல்கலைக்கழகம் (முனைவர்)
கையெழுத்து

டெட்ரோசு, அஸ்மாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1986 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். [4] சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலேரியா ஆராய்ச்சியாளர் ஆவார். சுகாதார அமைச்சராக, டெட்ரோசு பல புதுமையான மற்றும் அமைப்புரீதியான சுகாதார சீர்திருத்தங்களுக்கு பாராட்டுக்களைப் பெற்றவர் ஆவார். இவரது பணிகள் சுகாதார சேவைகள் மற்றும் முக்கியமான முடிவுகளை எளிதில் அணுகும் தன்மையை கணிசமாக மேம்படுத்தியது. [5] எத்தியோப்பியாவில் சுமார் 40,000 பெண் சுகாதார விரிவாக்க தொழிலாளர்களை பணியமர்த்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலமாக, 2006ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 123 இறப்பு என்ற அளவிலிருந்த சிசு இறப்பு விகிதத்தை 2011ஆம் ஆண்டில் 88 ஆக குறைத்தது, மருத்துவர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களை பணியமர்த்தலை அதிகரித்தது ஆகியவை ரெட்ரோசின் முக்கியப் பணிகளாகும். [6] ஜூலை 2009 இல், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்தின் வாரியத் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]

டெட்ரோசு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக 23 மே 2017 அன்று உலக சுகாதார சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] [8] [9] மருத்துவர் அல்லாத முதல் இயக்குநர் ஜெனரலாக ஆனார். [10] அவர் 1 ஜூலை 2017 அன்று ஐந்தாண்டு காலத்திற்கு பதவியேற்றார்.

கிவு எபோலா தொற்றுநோய் மற்றும் 2019–20 கொரோனா வைரசுத் பெருந்தொற்றுநோயின் காலத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகத்தை டெட்ரோசு மேற்பார்வையிட்டார். வெடிப்பின் போது அவர் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆரம்ப பயணங்களை மேற்கொண்டார். [11] மேலதிக நடவடிக்கை எடுக்க நாடுகளுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில், [12] கொரோனா வைரஸ் வெடிப்பைக் கையாயள்வதில் உலக சுகாதார அமைப்பு உரிய விதத்தில் செயல்படவில்லை என்ற விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். இந்த நோயை ஒரு தொற்றுநோயாக அறிவிப்பதில் மிகவும் தாமதமாக செயல்பட்டுள்ளார் என்பது அந்த விமர்சனத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். [13] [14]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

டெட்ரோசு அஸ்மாரா, எரித்திரியாவில், அதானோம் கெப்ரேயஸ் மற்றும் மெலாசு வெல்டேகாபீர் ஆகியோருக்குப் பிறந்தார். இவரது குடும்பமானது டைக்ரே மாகாணத்தின் எண்டெட்ரா அவ்ரஜ்ஜா பகுதியில் தனது ஆதியைக் கொண்டிருந்த காரணத்தால் மலேரியாவால் ஏற்படும் "தேவையற்ற துன்பம் மற்றும் இறப்பு" பற்றி முழுமையாக அறிந்திருந்தார். [7]

1986 ஆம் ஆண்டில், டெட்ரோஸ் அஸ்மாரா பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் [15] இளைய பொது சுகாதார நிபுணராக டெர்க்கின் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். [16] மெங்கிஸ்டு ஹைலே மரியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, டெட்ரோஸ் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். 1992 இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினிலிருந்து தொற்று நோய்களின் நோயெதிர்ப்புத் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். [4] 2000 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் மலேரியா பரவுதலில் அணைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமுதலாய நலத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆரம்ப கால தொழில் வாழ்க்கை

டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்தின் தலைவர்

2001 ஆம் ஆண்டில், டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்தின் தலைவராக டெட்ரோசு நியமிக்கப்பட்டார். [4] பணியகத்தின் தலைவராக, டெட்ரோஸ் பணியாற்றிய போது பிராந்தியத்தில் எய்ட்ஸ் பாதிப்பு 22.3% குறைப்பு மற்றும் மூளைக்காய்ச்சல் நிகழ்வுகளில் 68.5% குறைப்பு ஆகிய இலக்குகளை எட்டியது. பிராந்தியத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு கணினிகள் மற்றும் இணைய இணைப்பை நிறுவி தகவல் தொழில்நுட்ப தொடர்பினை மேம்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரத்தை அவர் மேற்பார்வையிட்டார். முன்னதாக இத்தகைய வசதிகள் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளபப்படாமல் இருந்தது. சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்தார். அம்மை நோய்த்தடுப்பு அனைத்து குழந்தைகளிலும் 98% ஆக உயர்த்தப்பட்டது. மேலும், 12 மாதங்களுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மொத்த நோய்த்தடுப்பு மருந்து வழங்கல் 74% ஆக உயர்த்தப்பட்டது.

டைக்ரே பிராந்திய சுகாதார பணியகத்திற்கான அரசாங்க நிதியுதவியின் சதவீதம் 65% ஆக உயர்த்தப்பட்டது, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் சதவீதம் 35% ஆக குறைந்தது. ஒட்டுமொத்தமாக, 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வாழும் மக்களில் 68.5% அளவிற்கு சுகாதார சேவைகளை வழங்கினர்.

மாநில சுகாதார அமைச்சர்

2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் சுகாதாரத்துக்கான மாநில அமைச்சராக (துணை அமைச்சராக) நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றினார். [17] இந்த நேரத்தில்தான் அவர் சுகாதார மறுசீரமைப்பில் தனது இலட்சியத்தை வடிவமைக்கத் தொடங்கினார்.

சுகாதார அமைச்சர் (2005–2012)

மெலிஸ் ஜெனவரி என்ற பிரதமரால் அக்டோபர் 2005ஆம் ஆண்டில் டெட்ரோசு சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். வறுமை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார அமைச்சகம் எதிர்கொள்ளும் பல சவால்கள் இருந்தபோதிலும், சுகாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் எத்தியோப்பியாவில் "ஈர்க்கக்கூடியதாக" கருதப்பட்டது. [5] [6] [18] 2005-2008 காலகட்டத்தில், எத்தியோப்பிய சுகாதார அமைச்சகம் 4,000 சுகாதார மையங்களை கட்டியது. 30,000 க்கும் மேற்பட்ட சுகாதார விரிவாக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து மற்றும் பணியமர்த்தியது. மேலும், மருத்துவமனை நிர்வாக நிபுணர்களில் புதிய பணியாளர்களை உருவாக்கியது. மேலும், 2010 ஆம் ஆண்டில், எத்தியோப்பியாவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்க உலகளாவிய சுகாதார முன்முயற்சி நாடுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது. எத்தியோப்பியாவில் அமெரிக்கா புதுமையான உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

2005 ஆம் ஆண்டில் பதவியேற்றதும், டெட்ரோசு ஒரு வலுவான தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு அமைச்சகத்தை பெற்றார். ஆனால், அந்த தொலைநோக்கினை பூர்த்தி செய்வதற்கான குறைவான அளவு திறனைக் கொண்டிருந்தார். [18] எச்.ஐ.வி / எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு நன்கொடையாளர் சமூகத்தை அமைச்சகம் எதிர்பார்த்திருந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

டெட்ரோசு அதானோம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெட்ரோசு_அதானோம்&oldid=3671073" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை