தமதேதவோ வானூர்தி நிலையம்

மாஸ்கோ தமதேதவோ வானூர்தி நிலையம் (உருசியம்: Московский аэропорт Домодедово மஸ்கொவ்ஸ்க்கி அயெரபோர்த் தமதேதவா) உருசியாவின் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியான தமதேதவ்ஸ்க்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். மாஸ்கோ நகரின் மையத்திலிருந்து 42 கிமீ (26 மைல்) தொலைவில் உள்ளது. உருசியாவின் வானூர்தி நிலையங்களிலேயே பயணிகளின் எண்ணிக்கை கொண்டும் பொருட்களின் போக்குவரத்தைக் கொண்டும் மிகப்பெரும் வானூர்தி நிலையமாகும்(2009ஆம் ஆண்டை விட 19.2% கூடுதலாக 22.5 மில்லியன் பயணிகள் 2010ஆம் ஆண்டில் பாவித்துள்ளனர்). மாஸ்கோவில் உள்ள மூன்று வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை செரமெத்தியேவோ, வுனுக்கோவா ஆகும்.

தமதேதவோ வானூர்தி நிலையம், மாஸ்கோ
Domodedovo International Airport

Аэропорт Домоде́дово

IATA: DMEICAO: UUDD
DME is located in உருசியா
DME
DME
உருசியாவில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகைபொது
இயக்குனர்ஈஸ்ட்லைன் குழுமம்
சேவை புரிவதுமாஸ்கோ
அமைவிடம்தமதேதவ்ஸ்கி மாவட்டம்
உயரம் AMSL588 அடி / 179 மீ
ஆள்கூறுகள்55°24′31″N 37°54′22″E / 55.40861°N 37.90611°E / 55.40861; 37.90611
இணையத்தளம்www.domodedovo.ru
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீஅடி
14C/32C
(முன்பு)
2,6008,531திண்காறை
14L/32R3,80012,467வலுவூட்டப்பட்ட திண்காறை
14R/32L3,50011,483வலுவூட்டப்பட்ட திண்காறை
புள்ளிவிவரங்கள் (2010)
பயணிகளின் எண்ணிக்கை22,254,529
வானூர்திகள் செலுத்தல்கள்211 907
மூலங்கள்: DAFIF,domodedovo.ru. "Moscow Domodedovo International airport (Russia, Moscow) (DME)". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம்</ref>
தமதேதவோ பயணிகள் நிலையம்

2003ஆம் ஆண்டில் இந்த வானூர்தி நிலையம் அகன்ற உடல் வானூர்திகளை செலுத்த ஏதுவாக விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. ஓடுபாதைகள்,நகர்பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள் இதற்கேற்றவாறு விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டன. இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இந்நிலையம் ஏர்பஸ் ஏ380 இரக புதிய பெரும் வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. உருசியாவில் இவ்வித வானூர்திகளை இயக்க அனுமதிக்கப்பட்ட முதல் நிலையமாக தமதேதவோ விளங்கியது. தவிர இது பன்னாட்டு குடிமை வான்பயண அமைப்பின்(ICAO) F வகை சீர்தரத்தை அடைந்ததற்கான குறிப்பாகவும் அமைந்தது.[1]

விபத்துக்கள்

  • 2010, திசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஓர் முழுமையான மின்சாரத் தடங்கலின்போது இந்த வானூர்தி நிலையத்தில் தகுந்த மாற்று மின்னுற்பத்தி சாதனமோ நெருக்கடிநிலை விளக்குகளோ அமைக்கப்படாத பிழை வெளிப்பட்டது[2].
  • 2011, சனவரி 24 அன்று, இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர். நூற்றிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3].

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தமதேதவோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை