தமிழகம்

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த புவியியல் பகுதி. தமிழகமானது நவீன தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, லட்சத

தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, இலட்சத்தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் தெற்குப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது.[1] பாரம்பரியத் தரவுகளில் தொல்காப்பியம் உள்ளிட்டவை இந்தப் பகுதிகளை ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகக் குறிப்பிடுகின்றன. இங்கு தமிழ் மொழியே இயல்பு மொழியாக இருந்தது[note 1] மேலும் அதன் அனைத்து குடிமக்களின் கலாச்சாரத்தையும் ஊடுருவியதாக இருந்தது.[note 2] ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[4][5] பண்டைய தமிழ் நாடு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருதது. அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் சேரர், சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர். சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு தமிழகத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது.[6] இலங்கை (இலங்கைத் தமிழர்) மற்றும் மாலைத்தீவுகள் (கிரவரு மக்கள்) ஆகியவற்றிலும் பண்டைய தமிழர் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம்
பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டு–பொ.ஊ. 3ஆம் நூற்றாண்டு
சங்க காலத்தில் தமிழகம்
சங்க காலத்தில் தமிழகம்
வரலாறு 
• தொடக்கம்
பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டு
• முடிவு
பொ.ஊ. 3ஆம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள் இந்தியா

சமகால இந்தியாவில், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பேச்சாளர்கள் பெரும்பாலும் தமிழகம் என்ற பெயரைத் தமிழ்நாட்டை மட்டுமே குறிக்க பயன்படுத்துகின்றனர்.

சொற்பிறப்பியல்

"தமிழகம்" என்பது தமிழ் மற்றும் அகம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவான சொல் ஆகும். இதற்கு "தமிழின் தாயகம்" என்று தோராயமாக பொருள் கூறலாம். கமில் ஸ்வெலேபிலின் கூற்றுப்படி, இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான சொல் இதுவாகும்.[7]

அளவு

"தமிழகம்" என்ற சொல் தமிழர் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான சொல்லாகத் தோன்றுகிறது. புறநானூறு 168.18 மற்றும் பதிற்றுப்பத்து பதிகம் 2.5 [7][8] ஆகியவற்றில் குறிப்பிடுவது பழைய சான்றுகளில் அடங்கும். தொல்காப்பியத்தின் மிகவும் பழமையான சிறப்புப்பாயிரத்தில் தமிழ்கூறு நல்லுலகம் ("தமிழ் பேசப்படும் [இங்கு] அழகான உலகம்") மற்றும் செந்தமிழ் ... நிலம் ஆகிய சொற்கள் குறிப்பிடுகிறது. "). இருப்பினும், இந்த பாயிரத்தின், காலம் சரியாக தெரியவில்லை. இது நிச்சயமாக தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.[9] தொல்காப்பிய பாயிரத்தின்படி, "தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நல் நிலம் வட வேங்கட மலைக்கும் தென் குமரிக்கும் நடுவே உள்ளது.[10]

சிலப்பதிகாரம் (பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டு) தமிழகத்தை பின்வருமாறு வரையறுக்கிறது:[11]

இந்த பண்டைய நூல்கள் தமிழகத்தின் கிழக்கு, மேற்கு எல்லைகளை தெளிவாக வரையறுக்கவில்லை என்றாலும், இந்த எல்லைகள் கடல்களே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[12] பண்டைய தமிழகம் இன்றைய கேரளத்தை உள்ளடக்கியது.[10] இருப்பினும், அது இலங்கையின் வட-கிழக்கில் உள்ள இன்றைய தமிழர்கள் வாழும் பகுதியை விலக்கியது.[13]

உட்பிரிவுகள்

அரசாட்சி

தோராயமாக பொ.ஊ.மு. 600 முதல் பொ.ஊ. 300 வரையிலான காலகட்டத்தில், சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூன்று தமிழ் மரபுகளால் தமிழாக்கம் ஆளப்பட்டது. வேளிர் (சத்யபுத்திரர்) என்ற சில சுதந்திரத் தலைவர்களும் இருந்தனர். மௌரியப் பேரரசின் காலத்திய பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் தமிழ் இராச்சியங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சங்க காலத்திற்கு முன்பிருந்து பாண்டியர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஆண்டனர். பாண்டியர்களின் இதயப்பகுதி வைகை ஆற்றின் வளமான வடிநிலம். அவர்கள் தொடக்கத்தில் தீபகற்ப இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கொற்கை துறைமுகத்தில் இருந்து தங்கள் நாட்டை ஆண்டனர். பின்னர் அவர்கள் மதுரைக்கு குடிபெயர்ந்தனர். சோழப் பேரரசு சங்க காலத்திற்கு (பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு) முன்னிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை நடு தமிழ்நாட்டில் ஆட்சி செய்தனர். சோழர்களின் இதயப்பகுதி காவிரியின் வளமான வடிநிலப்பகுதி. சேரர் சங்க காலத்திற்கு (பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை நவீன கால மேற்கு தமிழ்நாடு மற்றும் கேரளத்துடன் தொடர்புடைய பகுதியில் ஆட்சி செய்தனர்.

வேளிர் தென்னிந்தியாவின் ஆரம்ப வரலாற்று காலத்தில் தமிழகத்தில் இருந்த சிறரசர்கள் மற்றும் பிரபுத்துவ தலைவர்களாவர்.[14][15]

தமிழக நாடுகள்

தமிழகம் என்பது பெருநாடு என்று அரசியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[1] தமிழகதில் சேர நாடு,[16][17][18] சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய மூன்று முக்கியமான அரசியல் பகுதிகள் இருந்தன.[1] இந்த மூன்றுடன் மேலும் இரண்டு அரசியல் பகுதிகளான அதியமான் நாடு (சத்தியபுத்திரர்) மற்றும் தாமிரபரணி நாடு (தென் பாண்டி) ஆகியவை இருந்தன. அவை பின்னர் சேர ஆட்சியால் உள்வாங்கப்பட்டன. சோழநாட்டின் கீழ் இருந்த தொண்டை நாடு, பின்னர் பொ.ஊ. 6 ஆம் நூற்றாண்டில் சுதந்திர பல்லவ நாடாக உருவானது.

மேலும் தமிழகம் "நாடு" என்னும் 12 சமூக-புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த நாடு ஒவ்வொன்றும் அதன் சொந்த தமிழ் பேச்சுவழக்கைக் கொண்டிருந்தன.[19]

தமிழகத்திற்கு வெளியே உள்ள நாடுகள்

தமிழ் இலக்கியங்களில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இல்லாத வேறு சில நாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பண்டைய காலத்தில் அந்நாடுகளுடன் இவர்களுடன் வணிகம் செய்தனர்.

புவிசார் பண்பாட்டு ஒற்றுமை

பண்டைய தமிழகத்தின் பெரும்பகுதி நவீன இந்திய மாநிலங்களான கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ளது

"தமிழகம்" என்ற தேசம் பல இராச்சியங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும், பண்டைய இலக்கியங்களில், இப்பகுதியின் மக்கள் ஒற்றைக் கலாச்சார அல்லது இன அடையாளத்தைப் பகிர்ந்து கொண்டனர் அல்லது குறைந்தபட்சம் தங்களை அண்டை நாடுகளிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதினர். பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான பண்டைய தமிழ் கல்வெட்டுகள், தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தமிழகத்தை வேறுபடுத்துவதற்கான மொழியியல் சான்றாகவும் கருதப்படுகிறன்றன. வடநாட்டு அரசர்களான அசோகர் மற்றும் காரவேலன் போன்ற பண்டைய தமிழ் அல்லாத கல்வெட்டுகளும் இப்பகுதியின் தனித்துவமான அடையாளத்தைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, அசோகரின் கல்வெட்டுகள் அவரது நாட்டுக்கு தெற்கு எல்லைக்கு அப்பால் உள்ள சுதந்திர நாடுகளாக தமிழக அரசுகளைக் குறிக்கின்றன, மேலும் கரவேலனின் ஹாத்திகும்பா கல்வெட்டு "தமிழரசர்கள் கூட்டணியை" முறியடித்ததை குறிக்கிறது.[28]

பண்பாட்டுத் தாக்கம்

தென்னிந்தியாவில் ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில்[6] பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் மூன்று தமிழ் இராச்சியங்களின் ஏற்றத்தினால்,[6] தமிழ் பண்பாடு தமிழாக்கத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், இலங்கைக்கு அதிகமான தமிழ் குடியேறிகள் வந்தனர்.[29] பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைக்கோட்டை முத்திரையில் தமிழ்ப் பிராமி இருமொழிக் கல்வெட்டு உள்ளது. பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்தாலும்,[30][31] குறைந்தபட்சம் 10 ஆம் நூற்றாண்டு என உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்துடன் இலங்கையில் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்களைக் காட்டுகிறது.[32][33][note 3] தென்னிலங்கையில் உள்ள திஸ்ஸமஹாராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளியிடப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஆரம்பகால தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட உள்ளூர் தனிப்பட்ட தமிழ் பெயர்களைக் கொண்டுள்ளன.[34] இது பாரம்பரிய காலத்தின் பிற்பகுதியில் இலங்கையின் தெற்கு கடற்கரையோரத்தில் உள்ளூர் தமிழ் வணிகர்கள் இருந்ததும், வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்கு சான்று கூறுகிறது.[35] பொ.ஊ.மு. 237 இல், "தென்னிந்தியாவிலிருந்து வந்த இரு வீரர்கள்"[36] இலங்கையில் முதல் தமிழ் ஆட்சியை நிறுவினர். பொ.ஊ.மு. 145 இல் ஏலாரா, என்னும் சோழ தளபதி[36] அல்லது எல்லாளன் என அழைக்கப்படும் இளவரசன் [37] அனுராதபுரத்தில் அரியணையைக் கைப்பற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[36] சிங்களவரான துட்டகைமுனு, அவருக்கு எதிராகப் போரைத் தொடங்கி, அவரைத் தோற்கடித்து, அரியணையைக் கைப்பற்றினார்.[36][38] தமிழ் மன்னர்கள் இலங்கையில் குறைந்தது பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.[39][40]

சமயம்

சைவம், வைணவம், திராவிட நாட்டுப்புற சமயம், சைனம், பௌத்தம் போன்ற சமயத்தினர் குறைந்தபட்சம் பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இணைந்து வாழ்ந்துள்ளனர்.[41]

பொருளாதாரம்

வேளாண்மை

தொழில்கள்

மேலும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமிழகம்&oldid=3909967" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை