பாட்டாளி மக்கள் கட்சி

இந்திய அரசியல் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சியின் சின்னமாக 90-களில் 'யானை' சின்னமும், தற்போழுது 'மாம்பழம்' ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி
சுருக்கக்குறிபாமக
தலைவர்அன்புமணி ராமதாஸ்
நிறுவனர்ச. இராமதாசு
பொதுச் செயலாளர்வடிவேல் இராவணன்
தொடக்கம்16 சூலை 1989 (34 ஆண்டுகள் முன்னர்) (1989-07-16)
தலைமையகம்தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், சென்னை - 604001, தமிழ்நாடு
மாணவர் அமைப்புபாமக மாணவர் அணி
இளைஞர் அமைப்புபாமக இளைஞர் அணி
தொழிலாளர் அமைப்புபாட்டாளி தொழிற்சங்கம்
கொள்கைசமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம்
நிறங்கள் நீலம்
மஞ்சள்
சிவப்பு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[1]
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2004, 2014 – தற்போது வரை)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2009, 2011-13)
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (2009-2010)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
5 / 234
தேர்தல் சின்னம்
இணையதளம்
pmkofficial.com
இந்தியா அரசியல்

இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.[2] 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.[3][4]

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[5][6] ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது.[7]

சின்னம்

இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[8] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.[9] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது.

தலைவர்

  1. பேராசிரியர் தீரன் (1989 முதல் - வரை)
  2. எடப்பாடி கணேசன்
  3. கோ. க. மணி (1998 முதல் 2022 வரை) [10]
  4. அன்புமணி இராமதாசு (2022 மே 28 முதல்)

பொதுச்செயலாளர்

  1. தலித் எழில்மலை
  2. வடிவேல் இராவணன்

முக்கியத் தலைவர்கள்

  • ச. இராமதாசு - பாமக நிறுவனர்
  • அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில தலைவர்
  • கோ. க. மணி - முன்னாள் மாநில தலைவர்
  • என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்
  • ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
  • அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்
  • வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர்
  • திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர்
  • கோ.க.ம.தமிழ்க்குமரன் - பா.ம.க. இளைஞரணித்தலைவர்[11]
  • வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர்

தேர்தல் வரலாறு

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
ஆண்டுதேர்தல்மொத்த வாக்குகள்வென்ற தொகுதிகள்மாற்றம்கூட்டணிமுடிவு
199110ஆவது சட்டமன்றம்1,45,982
1 / 194
1எதிரணி
199611ஆவது சட்டமன்றம்10,42,333
4 / 116
3பாமக+திவாரிஎதிரணி
200112ஆவது சட்டமன்றம்15,57,500
20 / 27
16அதிமுக+அரசு
200613ஆவது சட்டமன்றம்18,63,749
18 / 31
2திமுக +அரசு
201114ஆவது சட்டமன்றம்19,27,783
3 / 30
15திமுக +எதிரணி
201615ஆவது சட்டமன்றம்23,00,775
0 / 234
3தோல்வி
202116ஆவது சட்டமன்றம்17,56,796
5 / 234
5அதிமுக+எதிரணி
மக்களவைத் தேர்தல்
வருடம்தேர்தல்மொத்த வாக்குகள்வென்ற தொகுதிகள்மாற்றம்கூட்டணிமுடிவு
199611ஆவது மக்களவை5,52,118
0 / 15
15பாமக + திவாரி காங்கிரசுதோல்வி
199812ஆவது மக்களவை15,48,976
4 / 5
4தேசகூஅரசு
199913ஆவது மக்களவை22,36,821
5 / 7
1தேசகூஅரசு
200414ஆவது மக்களவை19,27,367
5 / 5
மாற்றங்கள் இல்லைமமுகூஅரசு
200915ஆவது மக்களவை19,44,619
0 / 6
5ஐதேமுகூதோல்வி
201416ஆவது மக்களவை18,04,812
1 / 8
1தேசகூஅரசு
201917ஆவது மக்களவை22,97,431[12]
0 / 7
1தேசகூஅரசு

மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணிஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி

புதுச்சேரி

வருடம்பொதுத் தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றி பெற்ற தொகுதிகள்
19899வது மக்களவை25,0210
19918வது சட்டசபை11,4020
199110வது மக்களவை13,3750
19969வது சட்டசபை11,5441
199611வது மக்களவை19,7920
199913வது மக்களவை1,40,9200
200110வது சட்டசபை36,7880
200414வது மக்களவை2,41,6531
200611வது சட்டசபை23,4262
200915வது மக்களவை2,08,6190

மக்களவை உறுப்பினர்கள்

எண்வருடம்தேர்தல்உறுப்பினர்தொகுதிவகித்த பதவி
1199812ஆவது மக்களவைதலித் எழில்மலைசிதம்பரம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 1999
2199812ஆவது மக்களவைதுரைவந்தவாசி
3199812ஆவது மக்களவைகே. பாரிமோகன்தருமபுரி
4199812ஆவது மக்களவைஎன். டி. சண்முகம்வேலூர்
5199913ஆவது மக்களவைதுரைவந்தவாசி2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
6199913ஆவது மக்களவைபு. தா. இளங்கோவன்தருமபுரி
7199913ஆவது மக்களவைஏ. கே. மூர்த்திசெங்கல்பட்டுஇரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004)
8199913ஆவது மக்களவைஇ. பொன்னுசாமிசிதம்பரம்பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001)
9199913ஆவது மக்களவைஎன். டி. சண்முகம்வேலூர்2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004)

10200414ஆவது மக்களவைகோ. தன்ராஜ்திண்டிவனம்
11200414ஆவது மக்களவைஏ. கே. மூர்த்திசெங்கல்பட்டு2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
12200414ஆவது மக்களவைஇ. பொன்னுசாமிசிதம்பரம்2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
13200414ஆவது மக்களவைசெந்தில் இராமன்தருமபுரி
14200414ஆவது மக்களவைஅர. வேலுஅரக்கோணம்இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
15201416ஆவது மக்களவைஅன்புமணி ராமதாஸ்தருமபுரி

மாநிலங்களவை உறுப்பினர்கள்

வ.எண்பெயர்பதவிஆண்டு
1அன்புமணி ராமதாஸ்மாநிலங்களவை உறுப்பினர்2004 - 2010
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்2004 - 2009
2மாநிலங்களவை உறுப்பினர்2019 - தற்போது வரை

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது.[13]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை