திமோர் கடல்

கடல்

திமோர் கடல் (Timor Sea) வடக்கே திமோர் தீவினாலும், கிழக்கே அரபூரா கடலையும், தெற்கே ஆஸ்திரேலியாவையும் மேற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட கடல் ஆகும்.

திமோர் கடல் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது

புவியியல்

திமோர் கடலின் வரைபடம்

இக்கடலின் கிழக்கே உள்ள நீர்ப்பகுதி அரபூரா கடல் ஆகும். ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரக் குடாக்களான ஜோசப் பொனபார்ட் குடா, வான் டீமன் குடா திமோர் கடலுக்குக் கிட்டவாக உள்ள பகுதிகளாகும். ஆஸ்திரேலிய நகரான டார்வின் நகரமே இக்கடலை அண்டிய மிகப்பெரிய நகரமாகும்.

திமோர் கடல் கிட்டத்தட்ட 480 கிமீ அகலமானதும், 610,000 கிமீ² பரப்பளவையும் கொண்டது. இதன் ஆழமான பகுதி (3,300 மீ ஆழம்) கடலின் வடக்கே ஜாவா அகழியில் அமைந்துள்ளது. இதனை விட கடலின் ஏனைய பகுதிகள் 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது.

பல வெப்பவலயப் புயல்கள் மற்றும் சூறாவளிகள் திமோர் கடலில் ஆரம்பமாகின்றன அல்லது இதனூடே செல்லுகின்றன. பெப்ரவரி 2005 இல் ஏற்பட்ட விவியன் சூறாவளி இக்கடலின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளைப் பாதித்தது. இதற்கு அடுத்த மாதம் ஏற்பட்ட வில்லி புயல் பெரிதும் பாதிப்புகளை உண்டு பண்ணியது.

தீவுகள்

Rowley Shoals

பல குறிப்பிடத்தக்க தீவுகள் திமோர் கடலில் அமைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது டிவி தீவுகாளில் ஒன்றான மெல்வில் தீவு ஆகும். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் திமோர் கடலின் தீவுகளைத் தாண்டியே பெரு நிலப்பரப்புக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர்

1940களில் திமோர் கடலில் நிலைகொண்டிருந்த ஜப்பானிய கடற்படையினர் ஆஸ்திரேலியா மீது 1942-43 ஆம் ஆண்டுகளில் கப்பல்களில் இருந்து வான்தாக்குதல்களை நிகழ்த்தினர். 1942, பெப்ரவரி 19 இல் டார்வின் நகர் மீது தாக்குதல் நடத்தி ஒன்பது கப்பல்களை மூழ்கடித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இடம்பெற்ற பசிபிக் போர்களில் திமோர் தாக்குதல் ஆரம்பமானது இந்நாளிலேயே ஆகும்.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
திமோர் கடல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திமோர்_கடல்&oldid=3897083" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை