திரைப்பட நட்சத்திரம்

திரைப்பட நட்சத்திரம் (Movie star) என்பது ஒரு நடிகர் அல்லது நடிகை என்பவர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அல்லது முன்னணி பாத்திரங்களுக்கு பிரபலமானது மூலம் 'திரைப்பட நட்சத்திரம்' என்று அழைக்கப்படுகின்றனர்.[1][2] இவர்களின் பெயர்கள் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்த அல்லது விளம்பரப்படுத்த பெரும்பாலும் உபயோகிக்கப் படுகின்றது. உதாரணமாக திரைப்பட சுவரொட்டிகள் மற்றும் திரைப்பட முன்னோட்டக்காட்சிககளில்.[3]

ஆரம்ப ஆண்டுகள்

முதல் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான மெரி பிக்ஃபோர்ட்.

ஊமைத் திரைப்படங்கள் காலத்தில் அவற்றில் தோன்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்கள் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஏனெனில் இது அதிக சம்பளத்திற்கான கோரிக்கைகளை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் அஞ்சினர்.[4] இருப்பினும், பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இந்த நோக்கம் கைவிடப்பட்டது.

1909 ஆம் ஆண்டில் நடிகைகளான 'புளோரன்ஸ் லாரன்ஸ்' மற்றும் மெரி பிக்ஃபோர்ட் ஆகியோர் பரவலாக அறியப்பட்டவர்கள் ஆனால் பொதுமக்களின் மத்தியில் அவர்களின் பெயர் அறியப்படவில்லை. ஏனெனில் நடிகை 'புளோரன்ஸ் லாரன்ஸ்' என்பவர் 'பையோகிராஃப் ஸ்டுடியோஸ்' தயாரித்த திரைப்படங்களில் பணிபுரிந்த காரணத்தால் 'சுயசரிதை பெண்' (பையோகிராஃப் கேர்ள்) என்று அறியப்பட்டார். 1910 ஆம் ஆண்டில் 'இன்டிபென்டன்ட் மூவிங் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு மாறிய பிறகு தனது சொந்த பெயரான 'புளோரன்ஸ் லாரன்ஸ்' என்றே தோன்றத் தொடங்கினார்.

இந்தியா

இந்தியத் திரைப்படத்துறையை பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி போன்ற பல திரைப்படத்துறையில் பணி புரியும் நட்சத்திரங்கள் அவர்களின் மாநிலங்கள் வாரியாக பிரபலமாக இருப்பார்கள். அதையும் தாண்டி இரசினிகாந்து, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற சிலர் இந்தியா நாட்டை தாண்டியும் ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் பிரபலமாக உள்ளார்கள். நடிகர் இரசினிகாந்து நடித்த முத்து போன்ற திரைப்படங்கள் ஜப்பான் நாட்டில் வெளியாகி 1.6 மில்லியன் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்களை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை