துளசிதாசர்

இராம்போலா துபே (Rambola Dubey) 11 ஆகஸ்ட் 1511-30 ஜூலை 1623 துளசிதாசர் என்றும் அழைக்கப்படும் இவர் இந்து சமயத்தைச் சேர்ந்த வைணவத் (இராமநந்தி சம்பிரதாயம்) துறவியும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் இந்துக் கடவுள் இராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர்.[3]  துளசிதாசர் சமசுகிருதம், அவதி மற்றும் பிராஜ் பாஷா ஆகிய மொழிகளில் பல பிரபலமான படைப்புகளை எழுதினார். மேலும், அனுமன் சாலிசா மற்றும் இராமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சமசுகிருத இராமாயணத்தின் மறுவடிவமான ராமசரிதமானஸ் என்ற காவியத்தின் ஆசிரியர் என்று நன்கு அறியப்பட்டவர்.[4][5]

துளசிதாசர்
வாரணாசியின் சிறீகங்கா பப்ளிஷர்ஸ் 1949-ல் வெளியிடப்பட்ட துளசிதாசரின் படம், ராமசரிதமானஸ் இதழில் வெளியிடப்பட்டது.
பிறப்பு(1511-08-11)11 ஆகத்து 1511
சோரோன், தில்லி சுல்தானகம்
(நவீன உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு30 சூலை 1623(1623-07-30) (அகவை 111)[சான்று தேவை]
வாரணாசி, அயோத்தி இராச்சியம், முகலாயப் பேரரசு (நவீன வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா)
இயற்பெயர்இராம்போலோ துபே
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்கோசுவாமி, துறாவி , அபிநவ வால்மீகி, பக்தசிரோன்மணி
Sect associatedஇராமநந்தி சம்பிரதாயம்
தத்துவம்விசிட்டாத்துவைதம்
குருநரஹரிதாசர் (நரஹரியானந்தாச்சரியர்)
மேற்கோள்

சீதையும் இராமனும் முழுப் படைப்பிலும் வியாபித்திருப்பதை உணர்ந்து, அவர்கள் அனைவரையும் நான் கூப்பிய கைகளுடன் வணங்குகிறேன்”.[1][2]

Tulsidas Home in Varanasi Where Ramacharitra Manas Hanuman Chalisa was written located near Tulsi Ghat Varanasi
இராமசரிதமானஸ், அனுமன் சாலிசா போன்றவை எழுதப்பட்ட வாரணாசியின் துளசி படித்துறை அருகே அமைந்துள்ளது துளசிதாசரின் இல்லம்.

துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார்.[6] வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை பார்த்ததாக நம்மப்படும் இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார். துளசிதாசர் இராமாயணத்தின் நாட்டுப்புற-நாடகத் தழுவலான இராமலீலை நாடகங்களைத் பரப்பத் தொடங்கினார்.[7]

இந்தி, இந்திய மற்றும் உலக இலக்கியங்களில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக துளசிதாசர் பாராட்டப்படிகிறார்.[8][9][10][11] இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் துளசிதாசர் மற்றும் இவரது படைப்புகளின் தாக்கம் பரவலாக உள்ளது. இன்றும் உள்ளூர் மொழி, இராமலீலை நாடகங்கள், இந்துஸ்தானி இசை, பிரபலமான இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்கிறது.[7][12][13][14][15][16]

வால்மீகி அவதாரம்

துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று பலர் நம்புகிறார்கள்.[17] மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிசிய புராணத்தில், இறைவன் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார்.[18]

நாபதாசர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும்துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதுகிறார்.[19][20][21][22] இதை இராமநந்தி பிரிவும் திடமாக நம்புகிறது.[18]

ஆரம்பகால வாழ்க்கை.

துளசிதாசர் பிறந்த இடம்

பிறப்பு

துளசிதாசர் இந்து நாட்காட்டியின்படி தமிழ் மாதமான ஆவணியில் (ஜூலை-ஆகஸ்ட்) சுக்ல பட்சத்தின் ஏழாவது நாளான சப்தமியில் பிறந்தார்.[23][24] இது கிரெகொரியின் நாட்காட்டி ஆகஸ்ட் 11,1511 உடன் தொடர்புடையது. இவரது பிறப்பிடமாக மூன்று இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் இந்த இடத்தை உத்தரபிரதேசத்தின் கன்ஷி ராம் நகர் மாவட்டத்தில் கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஒரு நகரமான சோரோன் என அடையாளம் காண்கின்றனர். 2012 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசாங்கத்தால் துளசி தாசரின் பிறப்பிடமாக சோரோன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18][25] இவரது பெற்றோர் ஹுல்சி மற்றும் ஆத்மராம் துபே ஆவர். பெரும்பாலான ஆதாரங்கள் இவரை பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த சனாத்யா பிராமணர் என்று அடையாளம் காட்டுகின்றன. ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் துளசிதாசர் பிறந்த ஆண்டை விக்ரமாண்டு 1568 (கிபி 1511) என்று குறிப்பிடுகின்றனர்.[26] இந்திய அரசும் மாநில அரசுகளும் பிரபலமான கலாச்சாரத்தில் துளசிதாசர் பிறந்த ஆண்டிற்கு ஏற்ப கிபி 2011 ஆம் ஆண்டில் இவரது 500 வது பிறந்த நாளைக் கொண்டாடின.

பயணங்கள்

துறவியான பிறகு, துளசிதாசர் தனது பெரும்பாலான நேரத்தை வாரணாசி, பிரயாகை, அயோத்தி மற்றும் சித்ரகூடம் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளார். மேலும் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சென்று, பல்வேறு நபர்களுடன் உரையாடி, துறவிகள் மற்றும் சாதுக்களைச் சந்தித்து, தியானம் செய்தார்.[27] இந்துக்களின் நான்கு புனித தலங்கள் (பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் ராமேஸ்வரம்) மற்றும் இமயமலை இவர் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி மூல கோசைன் சரிதம் விவரிக்கிறது.[27][28] இன்றைய திபெத்திலுள்ள மானசரோவர் பகுதிக்கும் சென்று இராம்சரிதமனசில் நான்கு கதை சொல்பவர்களில் ஒருவரான காகபுசுண்டியை (காகம்) இவர் தரிசனம் செய்தார்.[29][30]

அனுமன் தரிசனம்

துளசிதாசர் தனது படைப்புகளில் பல இடங்களில் அனுமன் மற்றும் இராமனை நேருக்கு நேர் சந்தித்ததாக சுட்டிக்காட்டுகிறார்.[27][31] அனுமன் மற்றும் இராமனுடனான இவரது சந்திப்புகள் பற்றிய விரிவான விவரங்கள் பிரியதாசரின் பக்திராசபோதினி என்ற படைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.[32] பிரியதாசாரின் கூற்றுப்படி, துளசிதாசர் வாரணாசிக்கு வெளியே உள்ள காடுகளுக்கு காலையில் சென்று தண்ணீர் பானையில் நீரை எடுத்து வந்துள்ளார். நகரத்திற்குத் திரும்பியதும், மீதமுள்ள தண்ணீரை ஒரு குறிப்பிட்ட மரத்திற்கு ஊற்று வந்தார். அந்த மரத்தில் குடியிருந்த பிரேதம் என்ற தாகத்தைத் தணிக்கும் ஒரு வகை பேய் ( எப்போதும் தண்ணீருக்காக தாகமாக இருப்பதாக நம்பப்படுகிறது) துளசிதாசர் முன் தோன்றி இவருக்கு ஒரு வரத்தை வழங்கியது.[33] துளசிதாசர் தனது கண்களால் இராமனைப் பார்க்க விரும்புவதாகக் கேட்கிறார். அதற்கு பிரேதம் அது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் அனுமனிடம் வேண்டினால் வரம் கிடைக்கும் எனவும் துளசிதாசரை வழிநடத்தியது. மேலும் துளசிதாசரின் இராமகதையைக் கேட்க தினமும் ஒரு தொழு நோயாளியைப் போல அனுமன் தினமும் வந்து செல்வதாகவும் கூறுகிறார்.

அன்று மாலை தனது கதையைக் கேட்க வந்த தொழுநோயாளியை பின்தொடர்ந்து காடுகளுக்குச் செல்கிறார். இன்று சங்கட மோட்ச அனுமன் கோயில் அமைந்துள்ள இடத்தில்[34], துளசிதாசர் தொழுநோயாளியின் காலில் விழுந்து, "நீ யார் என்று எனக்குத் தெரியும்" என்றும் "நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது" என்றும் கூறுகிறார். அவர் அறியாதவர் போல நடித்தாலும் துளசிதாசர் மனம் தளரவில்லை. இறுதியில் தொழுநோயாளி தனது அனுமன் வடிவத்தை வெளிப்படுத்தி துளசிதாசரை ஆசீர்வதித்தார். மேலும் துளசிதாசர் அனுமனிடம் இராமனை நேருக்கு நேர் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். அனுமன் சித்திரகூடம் சென்றால் இராமனை காணலாம் எனவும் கூறுகிறார்.

இராமனின் தரிசனம்

பிரியதாசாரின் கூற்றுப்படி, துளசிதாசர் அனுமனின் அறிவுறுத்தலைப் பின்பற்றி சித்ரகூடம் பகுதியில் ராம்காட் என்ற இடத்தில் ஒரு ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். ஒரு நாள் துளசிதாசர் சித்ரகூட மலையை சுற்றிவருகிறார். அபோது பச்சை நிற ஆடைகளை அணிந்த இரண்டு இளவரசர்கள், கறுப்பு நிறத்திலும் சிகப்பு நிறத்திலுமான இரு குதிரைகள் மீது ஏறி கடந்து செல்வதை பார்க்கிறார். துளசிதாசர் அதைக் கண்டு மயங்கி விடுகிறார்.[27][29][34] துளசிதாசர் இந்த சம்பவத்தை கீதாவளி பாடலில் குறிப்பிட்டுள்ளார். [27]

அடுத்த நாள் காலை, புதன்கிழமை, அமாவாசை நாளில், விக்ரம் 1607 (கிபி 1551 அல்லது கிபி 1621 (கிபி1565) சில ஆதாரங்களின்படி, ராமர் மீண்டும் துளசிதாசருக்கு தோன்றினார்.[27][28][29][34]

இராமசைரிதமானஸ்

துளசிதாசர் இந்த நூலை விக்ரம்_நாட்காட்டி 1631ல் (1574 கி.பி) அயோத்தி நகரில் இயற்றியுள்ளார்.[n 1] [37]

இந்த நூல் எழுதப்பட்டபோது இந்தியாவில் முகலாய மன்னர் அக்பர் ஆட்சியிலிருந்தார். இதிலிருந்து துளசிதாசரும் ஆங்கிலக்கவிஞரான வில்லியம் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.[n 2][n 3]

இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறுஆக்கமாக கருதப்பட்டாலும்[43][44][45][46][47] [n 4], அவதி என்ற பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்த நூல்[57][58][59], மொழி பெயர்ப்பு இல்லை. உண்மையில், இந்த நூல் சமசுகிருதம் மற்றும் பிற இந்திய மொழியில் எழுதப்பட்டுள்ள பல்வேறு இராமாயணங்களையும், புராணங்களையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இறப்பு

துளசிதாசர் தனது 91வது வயதில், 1623 ஜூலை 31 அன்று (விக்ரம் 1680ஆம் ஆண்டின் சிரவண மாதம்) கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அசி படித்துறையில் காலமானார். இவரது பிறந்த ஆண்டைப் போலவே, பாரம்பரிய கணக்குகளும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் இவரது இறப்பு தேதியில் உடன்படவில்லை.[60][61]

இதனையும் காண்க

குறிப்பு

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துளசிதாசர்&oldid=3937464" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை