தேசிய தொழினுட்பக் கழகங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(தேசிய தொழில்நுட்ப கழகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (தே. தொ. க / N I Ts ), இந்தியாவின் முதன்மையான பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்கும் கல்லூரிகளாகும். அவை துவக்கத்தில் மண்டல பொறியியல் கல்லூரிகள் (RECs) என அழைக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாடு அமைச்சகம், இந்திய அரசு, துவக்கத்தில் இருந்த 17 மண்டல பொறியியல் கல்லூரிகளையும், படிப்படியாக, தேசிய தொழில்நுட்பக் கழகங்களாக மேம்படுத்த முடிவெடுத்தது. தற்போது அகர்த்தலாவில் அண்மையில் திறக்கப்பட்டதையும் சேர்த்து 20 தே. தொ.கழகங்கள் உள்ளன. இந்திய அரசு தேசிய தொழில்நுட்பக் கழகங்கள்(NIT) சட்டம் 2007 கீழ் இந்த 20 கல்லூரிகளையும் கொணர்ந்து அவை தன்னிச்சையாக இயங்க வழி வகுத்துள்ளது. இக்கல்லூரிகள் மண்டல மேம்பாட்டிற்காக ஒவ்வொரு பெரும் இந்திய மாநிலத்திலும் ஓர் தே.தொ.க அமையவேண்டும் என்ற அரசின் விதிகளுக்குட்பட்டு இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றன. தே.தொ.க சட்டத்தின்படி, ஒவ்வொரு தே.தொ.கவும் தன்னிச்சையான தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக செயல்பட்டு தமது கல்வித்திட்டங்களையும் செயற்பாட்டுக் கொள்கைகளையும் தாமே வகுத்துக்கொள்கின்றன.

தே.தொ.க அமைவிடங்கள்

வரலாறு

பண்டிட் ஜவஹர்லால் நேருவின் கனவான அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் சிறந்த இந்தியாவை உருவாக்குவதை நிறைவேற்றவும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களை வளர்த்தெடுக்கவும் இந்திய அரசினால் பதினான்கு மண்டல பொறியியல் கல்லூரிகள் 1959க்கும் 1965க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டன. அவை போபால், அலகாபாத், கோழிக்கோடு, துர்காபூர், குருச்சேத்திரா, ஜம்செட்பூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ரூர்க்கேலா, ஸ்ரீநகர், சூரத்கல், சூரத், திருச்சிராப்பள்ளி, மற்றும் வாரங்கல் என்ற இடங்களில் அமைக்கப்பட்டன. மேலும் மூன்று கல்லூரிகள் 1970 மற்றும் 1990களுக்கிடையே சில்சார், அமீர்பூர், மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. ஒவ்வொன்றுமே மைய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிறுவனமாகும். அண்மையில் மனிதவள மேம்பாடு அமைச்சகம் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு, பாட்னா (பிகார் பொறியியல் கல்லூரி - 110 ஆண்டு வரலாறுள்ள கல்லூரி), ராய்பூர் (அரசு பொறியியல் கல்லூரி),[1] மற்றும் அகர்தாலா (திரிபுரா பொறியியல் கல்லூரி)[1], தேசிய தொழில்நுட்பம் கல்லூரி தகுதி வழங்கியுள்ளது. மாநிலங்களின் தேவைக்கேற்பவும் செயல்படுத்தக் கூடியதாயினும் வருங்கால தே.தொ.கழகங்கள் முற்றிலும் புதியதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள அரசு பொறியியல் கல்லூரியினை மேம்படுத்தியோ அமைக்கப்படும். இவ்வகையில் முற்றிலும் புதியதாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்ஃபால் நகரில் 21வது தே.தொ.க ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இருபது தே.தொ.கழகங்களுமே இளங்கலை,முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடதிட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் வழங்கி வருகின்றன. துவக்கத்தில் மண்டல பொறியியல் கல்லூரிகளாக இருந்தபோது பட்டமேற்படிப்பிற்கான முழு செலவுகள் மற்றும் மற்ற படிப்புகளுக்கான மீண்டும் எழாத செலவுகளையும் மைய அரசு ஏற்றது. மாநில அரசும் மைய அரசும் அன்றாட செலவுகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டன. ஆனால், தே.தொ.கவாக மேம்படுத்திய பிறகு, மைய அரசே இக்கல்லூரிகளின் அனைத்து செலவுகளையும் மேற்கொள்கிறது. கூடுதல் இ.தொ.கழகங்கள் அமைக்க பல மாநிலங்களிலிருந்தும் எழுந்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு அன்றிருந்த மனிதவளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மண்டல பொறியியல் கல்லூரிகளை தேசிய தொழில்நுட்பக் கழகங்களாக மேம்படுத்த முடிவு செய்தார். 2003ஆம் ஆண்டு அனைத்து மண்டல பொறியியல் கல்லூரிகளும் மைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அண்மைய மாற்றங்கள்

2002 முதல், இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம் படிப்படியாக அனைத்து (17) மண்டல பொறியியல் கல்லூரிகளும் தேசிய தொழில்நுட்பக் கழகங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மண்டல பொறியியல் கல்லூரிகளின் பங்களிப்பையும் அவற்றின் முன்னாள் மாணவர்களின் சாதனைகளையும் கருத்தில் கொண்டு அவற்றின் திறனை இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்று வளர்த்தெடுக்க இந்த மேம்பாடு செய்யப்பட்டது. இந்த மேம்பாட்டின் வாயிலாக அவற்றிற்கு வருடாந்திர நிதி கூடுதலாக்கப்பட்டும், கூடுதல் வேலை தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தகுதி வழங்கப்பட்டு தாமே பட்டங்கள் வழங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இவை இக்கல்லூரிகளில் கல்வித்தரத்தை வெகுவாக மேம்படுத்தி யுள்ளன. இந்த மாற்றங்கள் மைய அரசு ஏற்படுத்திய உயர்மட்ட மீளாய்வுக் குழு(HPRC)[2] வின் பரிந்துரைகளின்படி செய்யப்பட்டன. முனைவர். ஆர்.ஏ. மாஷேல்கர்தலைமையில் அமைந்த இக்குழு "வருங்கால ம.பொ.கல்லூரிகளின் கல்விச்சிறப்பிற்கான திட்ட முன்வரைவு (Strategic Road Map for Academic Excellence of Future RECs)" என்ற அறிக்கையை 1998ஆம் ஆண்டு அரசிடம் அளித்தது.

2008ஆம் ஆண்டிலிருந்து தே.தொ.கவின் சராசரி ஆண்டு நிதி ரூ.50 கோடியாக கூடுதலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தே.தொ.கவும் உலக வங்கியிடமிருந்து ரூ.20 -25 கோடிகள் தொழில்நுட்பக் கல்வி தரமேம்பாட்டுத் திட்டத்தின் (TEQIP) கீழ் பெறுகிறது. இந்த திட்டம் நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. தே.தொ.கழகங்களில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு 800,000 பேர் பங்கேற்கும் அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (AIEEE ) தேர்வு மூலம் நிகழ்கிறது. இந்த மேம்பாட்டிற்குப் பிறகு, மாணவர் தரம், மேலாண்மை அமைப்பு, கல்வித்திட்ட ஆராய்வு மற்றும் மாணவர் வேலைவாய்ப்பு என்ற வகைகளில் பெரும் முன்னேற்றத்தை இக்கல்லூரிகள் எட்டியுள்ளன.

தேசிய தொழில்நுட்ப கழகங்களின் பட்டியல்

தேசிய தொழில்நுட்ப கழகங்களின் அமைவிடம்
பெயர்தொடங்கிய ஆண்டுசுருக்கம்அமைந்துள்ள நகரம்மாநிலம்/ஆட்சிப்பகுதிஇணையதளம்
தேசிய தொழில்நுட்ப கழகம், குருசேத்திரா1963 (2002)NITKKRகுருச்சேத்திரம்அரியானாnitkkr.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் காலிக்கட்1961 (2002)NITCகோழிக்கோடுகேரளா
இலட்சத்தீவுகள்
nitc.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் தெல்லி2010NITDபுது டெல்லி
சண்டிகர்
டெல்லி
nitdelhi.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் அகர்த்தலா1965 (2006)NITAஅகர்தலாதிரிபுரா

nita.ac.in

தேசிய தொழில்நுட்ப கழகம், துர்க்காப்பூர்1960 (2003)NITDGPதுர்காபூர்மேற்கு வங்காளம்nitdgp.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், கோவா2010NITG்பர்மாகுடிகோவா
தமன் மற்றும் தியூ
தாத்ரா மற்றும் நகர் அவேலி
nitgoa.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், புதுச்சேரி2010NITPYகாரைக்கால்புதுச்சேரிnitpy.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், போபால்1960 (2002)MANITபோபால்மத்தியப் பிரதேசம்manit.ac.in பரணிடப்பட்டது 2019-09-10 at the வந்தவழி இயந்திரம்
மால்வியா தேசிய தொழில்நுட்ப கழகம் ஜெய்ப்பூர்1963 (2002)MNITஜெய்ப்பூர்இராச்சசுத்தான்mnit.ac.in பரணிடப்பட்டது 2013-05-06 at the வந்தவழி இயந்திரம்
மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகம்1961 (2001)MNNITஅலகாபாத்உத்தரப் பிரதேசம்mnnit.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் மணிப்பூர்2010NITMNPஇம்பால்மணிப்பூர்nitmanipur.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் மேகாலயா2010NITMசில்லாங்மேகாலயாnitm.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் மிசோரம்2010NITMZஅய்சோல்மிசோரம்nitmz.ac.in/
தேசிய தொழில்நுட்ப கழகம் நாகாலாந்து2010NITNதிமாபூர்நாகாலாந்துnitnagaland.ac.in
பீ. ரா (பீம்ராவ் ராம்ஜி) அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம் ஜலந்தர்1987 (2002)NITJஜலந்தர்பஞ்சாப்nitj.ac.in பரணிடப்பட்டது 2019-04-18 at the வந்தவழி இயந்திரம்
தேசிய தொழில்நுட்ப கழகம், ஜம்சேத்பூர்1960 (2002)NITJSRஜம்சேத்பூர்சார்க்கண்ட்nitjsr.ac.in பரணிடப்பட்டது 2017-06-13 at the வந்தவழி இயந்திரம்
விசுவேரய்யா தேசிய தொழில்நுட்ப கழகம்1960 (2002)VNITநாக்பூர்மகாராட்டிரம்vnit.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், பாட்னா1886 (2004)NITPபாட்னாபீகார்nitp.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் ராய்பூர்1956 (2005)NITRRராய்ப்பூர்சத்தீசுகர்nitrr.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் ரூர்கேலா1961 (2002)NITRKLரூர்கேலாஒடிசாnitrkl.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம் சிக்கிம்2010NITSKMஇரவங்கலாசிக்கிம்nitsikkim.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், சில்சார்1967 (2002)NITSசில்சார்அசாம்www.nits.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், சிறீநகர்1960 (2003)NITSRIசிறிநகர்சம்மு காசுமீர்www.nitsri.net பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம்
சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப கழகம், சூரத்1961 (2003)SVNITசூரத்குசராத்துsvnit.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், சுரத்கல்1960 (2002)NITKமங்களூர்கருநாடகம்nitk.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி1964 (2003)NITTதிருச்சிராப்பள்ளிதமிழ் நாடுnitt.edu
தேசிய தொழில்நுட்ப கழகம் உத்தராகண்டம்2010NITUKசிறி நகர்உத்தராகண்டம்nituk.com/
தேசிய தொழில்நுட்ப கழகம், வாரங்கல்1959 (2002)NITWவாரங்கல்தெலுங்கானாnitw.ac.in
தேசிய தொழில்நுட்ப கழகம், அருணாச்சலப் பிரதேசம்2010NITAPயூபியாஅருணாச்சலப் பிரதேசம்

www.nitap.in

தேசிய தொழில்நுட்ப கழகம், ஹமிர்பூர்1986 (2002)NITHஹமிர்பூர்இமாச்சலப் பிரதேசம்nith.ac.in

வருங்காலம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் சட்டம், 2007 நிறைவேற்றப்பட்டுள்ளது[3]. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் 2007-2008 கல்வியாண்டிலிருந்து நடப்புக்கு வருகின்றன. 15 ஆகஸ்ட் 2007 முதல் நடப்புக்கு வரும் இச்சட்டம் ஒவ்வொரு தே.தொ.கழகத்தையும் நாட்டின் முதன்மையான கல்விக்கழகமாக அறிவிக்கிறது. இவை உலக அளவில் சிறந்த தொழில்நுட்பக் கல்விக்கான கல்விக்கூடமாக விளங்க வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவிலுள்ள பெரும்பாலான கல்லூரிகளுக்கும் இதே நிலை நிலவுகிறது. வருங்கால தே.தொ.க மாணவர்கள் இவற்றின் மதிப்பை பலமடங்கு உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இத்தகைய உலகளாவிய சிறப்புநிலை எய்த செய்ய வேண்டுவன:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை