நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)

தாய் நிகுயேன் (Tây Nguyên) அல்லது மேற்கு மேட்டுச் சமவெளி (Western Highlands) அல்லது நடுவண் மேட்டுச் சமவெளி (Central Highlands) என்பது வியட்நாமின் வட்டாரங்களில் ஒன்றாகும். இவ்வட்டாரத்தில் தாக்லாக் மாகாணம், தாக்நோங் மாகாணம், கியாலை மாகாணம், கோன் தும் மாகாணம், இலாம் தாங் மாகாணம் ஆகிய மாகாணங்கள் உள்ளன.

வியட்நாமில் அமைவிடப்

இவ்வட்டாரம் சிலவேளைகளில் சாவோ நிகுயேன் திரங் போ (Cao nguyên Trung bộ) (இதன் பொருள் ("நடுவண் மேட்டுச் சமவெளி (Midland Highlands)" என்பதாகும்) எனவும் அழைக்கப்படுகிறது. இது வியட்நாம் குடியரசில் சாவோ நிகுயேன் திரங் பான் (Cao nguyên Trung phần) (இதன் பொருள் ("நடுவண் மேட்டுச் சமவெளி (Central Highlands)" என்பதாகும்) என அழைக்கப்பட்டது.

மாகாணங்கள்

தாய் நிகுயேன் (நடுவண் மேட்டுச் சமவெளி) புள்ளிவிவரங்கள்
மாகாண-
மட்டப்
பிரிவு
தலைநகர்மக்கள்தொகை
(கணக்கெடுப்பு
ஏப்பிரல் 1,
2009)
பரப்பளவு
(கிமீ²)
தாக்லாக்புவோன்மா துவோத்1,737,60013,139.2 கிமீ²
தாக்நோங் மாகாணம்கியா நிகியா407,3006,516.9 கிமீ²
கியாலை மாகாணம்பிளிய்கு1,161,70015,536.9 கிமீ²
கோன் தும் மாகாணம்கோன் தும்383,1009,690.5 km²
இலாம்தோங் மாகாணம்தலாத்1,179,2009,776.1 கிமீ²

வரலாறு

நடுவண் மேட்டுச் சமவெளியில் காலங்காலமாக தேகர் எனப்படும் மோந்தகுனார்து மக்கள் வாழ்ந்துவந்தனர். நாம் தியேன் எனும் தெற்குநோக்கி அணிவகுப்போம் இயக்கத்தின்போது வியட்நாம் இப்பகுதியை வென்றது. தென்வியட்நாம் அரசும் இன்றைய ஒன்றுபட்ட வியநாம் பொதுவுடைமைக் குடியரசும் கட்டாயமாக கின் வியட்நாமியரைக் குடியேற்றியதும் இப்போது கின் வியட்நாமியர் இப்பகுதியில் தேகர்களைவிட பெரும்பான்மையினராக உள்ளனர். மோந்தகுனார்துகள் அனைத்து வியட்நாமியரின் முற்றுகையையும் அதாவது, பொதுவுடைமை எதிர்ப்பு தென்வியட்நாம் அரசையும் இன்றைய ஒன்றுபட்ட வியட்நாம் பொதுவுடைமை அரசையும், எதிர்த்துப் போராடினர்.

தாழ்நிலச் சாம் அரசையும் சாம் மக்களையும் மோந்தகுனார்துகள் தம் அரசர்களாக ஏற்றனர். இவர்களின் பொருள் வளம் சாமியரிடம் அமைந்தாலும் தாம் தன்னாட்சியுடன் வாழ்ந்துவந்தனர்.[1] After World War II concept of "Nam tiến" and the southward conquest was celebrated by Vietnamese scholars.[2] 1946 இல் இருந்தான பிரெஞ்சு இந்தோசீன ஆட்ச்யின்போது இப்பகுதி பேசு மோந்தகுனார்து து சுத்திந்தோசீனா எனப்பட்டது.[3]

பிரெஞ்சு ஆட்சி வரை வியட்நாமியர் நடுவண் மேட்டுச் சமவெளியில் நுழைந்ததே இல்லை. மோந்தகுனார்துகளை புலிய்யோடு திரியும் முரட்டுக் கட்டுமிராண்டிகளாகவே கருதிவந்தனர். அவர்கள் தண்ணீரை நஞ்சூட்டியும் கெட்ட ஆவிகளாகவும் வாழ்வதாக நம்பினர். பிரெஞ்சு ஆட்சியில் பலவகைத் தோட்டப்பயிர்களால் இப்பகுதி வளமுற்ரதும் வியட்நாமியர் இப்பகுதியில் ஆர்வம் காட்டலாயினர்.[4] மேலும், இப்பகுதிக் காடுகளின் இயற்கை வளங்களையும், கனிமவளங்களையும் மண்வளத்தையும் கண்டு இதன் புவியியல் முதன்மையையும் உணரலாயினர்.[5]

தெற்கு வியட்நாமையும் ஒன்றுபட்ட பொதுவுடைமை வியட்நாம் குடியரசையும் எதிர்த்து புல்ரோவின் மோந்தகுனார்துகள் கலகம் செய்தனர்.[6] தென்வியட்நாமிய அரசாலும் ஒன்றுபட்ட வியட்நாமிய அரசாலும் கின் வியட்நாமிய இனக்குழு மக்களின் குடியேற்றத் திட்டம் நடுவண் மேட்டுச் சமவெளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. [7][8] இப்போது கின் வியட்நாமிய மக்கள் பெரும்பான்மையராக நடுவண் மேட்டுச் சமவெளியில் அமைகின்றனர்.[9]

வியட்நாம் ஆட்சியை எதிர்த்த சிறுபான்மை இனக்குழு மக்களின் பேரெழுச்சியின்போது, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பெருந்திரளான சிறைக்கும் கொலைகளுக்கும் பின்னர், சிறிதுகாலம் நடுவண் மேட்டுச் சமவெளியில் அயல்நாட்டவர் செல்ல தடை செய்யப்பட்டது.[10][11]

புவிப்பரப்பியல்

தாக்லாக் மாகாணத்தில் மலைகள் சூழவுள்ள தோங்சோன் ஊர்.

தாய் நிகுயேன் மேட்டுச் சமவெளியின் எல்லைகளாக தாழ்நிலப் பகுதியில் இலாவோசும் வடகிழக்கில் கம்போடியாவும் அமைகின்றன. கோன் தும் மாகாணம் இலாவோசு, கம்போடியா எல்லைகளில் அமைகிறது.ஆனால், கியாலைமாகாணமும் தாக்லாக் மாகாணமும் கம்போடியாவை மட்டுமே எல்லையாகக் கொண்டுள்ளன. இலாம்தோங் மாகாணம் நில அரணால் பன்னாட்டு எல்லை எதையும் பெற்றில்லை.

உண்மையில், தாய் நிகுயேன் ஒருதன்மை வாய்ந்த மேட்டுச் சமவெளியில் அம்மையவில்லை. மாறாக, பல குத்துயர மேட்டுநிலத் தொடர்களில் அமைகிறது; இதில் உள்ள கோன் தும் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 500 மீ. கோன் பிளோங் மேட்டுச் சமவெளியும் கோன் நாநுங் மேட்டுச் சமவெளியும் பிளிய்கு மேட்டுச் சமவெளியும் 800 மீ குத்துயரத்தில் அமைகின்றன. மதிராக் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 500 மீ, தாக்லாக் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 800 மீ. மோநோங் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 800 மீட்டரில் இருந்து 1000 மீட்டர் வரை அமைகிறது, தாலாத் அல்லது இலாம் வியேன் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 1500 மீ. தீலின் மேட்டுச் சமவெளியின் குத்துயரம் 900 மீ முதல்1000 மீ வரை அமைகிறது. இந்த அனைத்து மேட்டுநிலங்களும் உயர்ந்த மலைத்தொடர்களாலும் மலைகளாலும் (தெற்கு ஆன்னமைட்டு மலைத்தொடர்.

தாய் நிகுயேன் அதன் காலநிலையையும் இடக்கிடப்பியலையும் பொறுத்து மூன்று துணைவட்டாரன்களாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன: வடக்கு தாய் நிகுயேன் (பாசு தாய் நிகுயேன்) (கோன் தும், கியாலை மாகான்ங்கள் அடங்கியது), இடைநிலை தாய் நிகுயேன் (திரங் தாய் நிகுயேன்) (தாக்லாக், தாக் நோங் மாகாணங்கள் அடங்கியது), தெற்கு தாய் நிகுயேன் (நாம் தாய் நிகுயேன்) (இலாம்தோங் மாகாணம் அடங்கியது). திரங் தாய் நிகுயேன் மற்ற துணை வட்டாரங்களைவிட்த் தாழ்வானது. எனவே, இங்கு வெப்பநிலை மற்ற இரண்டு வட்டாரங்களை விடக் கூடுதலாக அமைகிறது.

இனக்குழு மக்கள்

கீழே வியட்நாமின் இனக்குழு மாக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.. இவர்கள் நடுவண் மேட்டுச் சமவெளியிலும் அண்மிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் கதூயிக், பக்னாரிக், சாமிக் ஆகிய ஆட்டிரோனேசிய குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர். மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் வியட்நாமின் 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளன.

வேளாண்மை

தாய் நிகுயேன் பல தொடக்கநிலைக் காடுகளைக் கொண்டுள்ளன. இக்காடுகள் சாத் தியேன் தேசியப் பூங்கா, யோக்தோங் தேசியப் பூங்கா, கோங்காகின் தேசியப் பூங்கா ஆகிய வியட்நாமின் தேசியப் பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வட்டாரம் கடல்மட்ட்த்தில் இருந்து 500 முதல் 600 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் பசால்ட் உவர்நிலம் காஃபி. தென்னை, கருமிளகு, வெண்மல்பரி தோட்டங்கள் வைத்துப் பயிரிட ஏற்றதாகும். இங்கு, முந்திரியும் தொய்வ மரங்களும் பயிரிடப்படுகின்றன. காஃபி தாய் நிகுயேனின் முதன்மை விளைபொருளாகும். காப்பித் தோட்ட விளைச்சல் தாக்லாக் மாகாணத்தில் செழிப்பாக நடைபெறுகிறது. இந்த மாகாணத் தலைநகராகிய புவோன்மா துவோத்தில் பல காப்பித் தொழிலகங்கள் அமைந்துள்ளன.இவற்றில் திரங் நிகுயேனின் தொழிலகங்களும் அடங்கும். உலகில் பாக்சைட்டு தாது கிடைக்கும் மூன்றாம் இடமாகத் தாய் நிகுயேன் அமைகிறது[சான்று தேவை]. சுற்றுச்சூழல் சிக்கல்களாலும் தொழிலாளர் தட்டுபாட்டாலும் பாக்சைட்டுக் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பும் முரண்பாடுகளும் நிலவுகின்றன.

மரஞ்செடிகொடிகளும் விலங்குகளும்

தாய் நிகுயேன் வியட்நாமிலும் தென்கிழக்காசியாவிலும் மிகவும் பெயர்பெற்ற அச்சுறுத்தல்நிலை உயிரினங்கள் வாழும் இடமாகும். இங்கு, இந்தோசீனப் புலிகள், பேருருவக் கவுர்கள், ஆசியக் காட்டு நீரெருமைகள், பாந்தெங்குகள் (banteng), ஆசிய யானைகள் ஆகிய அச்சுறுத்தல்நிலை விலங்கினங்கள் வாழ்கின்றன.

வியட்நாமின் மேட்டுநிலச் சமவெளியில், இலாங்மூர்களும் மிகவும் அச்சுறுத்தப்படுகின்றன. இவை வியட்நாமியப் படை வீரர்களால் கொல்லப்படுகின்றன. இவற்றின் நிகழ்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.[12]

விக்கிமீடியா பொதுவகத்தில்,

Tay Nguyen
(Central Highlands)

என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை