நன்னெறி

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது நடத்தை தொடர்பில் சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது.[1] நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மெய்யியலில், நெறிமுறை அழகியலின் நிரப்புக்கூறாகக் கருதப்படுகிறது. நெறிமுறை, மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. நெறிமுறை தொடர்பான ஆய்வுப் பரப்பை நான்காக வகுப்பது உண்டு.[1]

  • மீநெறிமுறை
  • கடப்பாட்டு நெறிமுறை
  • பயன்பாட்டு நெறிமுறை
  • விளக்க நெறிமுறை

நெறிமுறை மனித ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முயல்கிறது. நல்லது - கெட்டது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், நீதி - குற்றம் ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம்.

வரைவிலக்கணம்

பலர், சமூக வழக்கு, சமய நம்பிக்கை, சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப நடந்து கொள்வதையே நெறிமுறை எனக் கருதுகின்றனர் என்றும், இதை ஒரு தனியான கருத்துருவாகக் கொள்வது இல்லை என்றும் நுண்ணாய்வுச் சிந்தனைக்கான நிறுவனத்தைச் சேர்ந்த தாமசு பால், லின்டா எல்டர் ஆகியோர் கூறுகின்றனர்.[2] பகுத்தறிவு கொண்ட மனிதர்களுக்கு எத்தகைய நடத்தைகள் உதவுகின்றன எத்தகைய நடத்தைகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் ஒரு தொகுதி கருத்துருக்களும், கொள்கைகளுமே நெறிமுறைகள் என பாலும், எல்டரும் வரைவிலக்கணம் தருகின்றனர்.[2] பொதுவாக நெறிமுறை என்னும் சொல் ஒழுக்கம் என்பதற்கு இணையாகப் பயன்பட்டு வருகிறது என்றும், சில வேளைகளில், குறிப்பிட்ட ஒரு மரபு, குழு அல்லது தனியாள் சார்ந்த ஒழுக்கக் கொள்கைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் இது பயன்படுவதாகவும் மெய்யியலுக்கான கேம்பிரிட்ச்சு அகரமுதலி கூறுகின்றது.[3]

"இயல்பறிவின் அடிப்படையில் எட்டப்படும் பகுத்தறிவுக்கு ஒத்த, அளவோடமைந்த, பொருத்தமான முடிவு" என்பதே "நெறிமுறை" என்பதற்கான பொதுவான பொருள். இதன்படி, வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் செய்யாமல், தேவையின் பொருட்டு அழிவு ஏற்படுத்தும் நிலையும் நெறிமுறையின் பாற்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடல்ரீதியான பாதிப்பு ஏற்படக்கூடிய பயமுறுத்தல் இருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லாதபோது, தற்காப்புக்காக எதிராளிக்குத் தேவையான அளவு பாதிப்பை ஏற்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நெறிமுறை, ஒழுக்கத்தைப் போல் விதிமுறைகளை முன்வைப்பதில்லை. ஆனால், ஒழுக்க விழுமியங்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பின்நவீனத்துவ நன்னெறி

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது.[4] அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.

நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.

உறுதிப்பாட்டுவாதம்

உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) என்பது கிமு 3 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் தோற்றம் பெற்ற ஒரு மெய்யியல் ஆகும். இது வாழ்வை அல்லது உலகை அணுகுவதற்கான ஒரு மனநிலையை எடுத்துரைக்கிறது. ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை எவை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, உலகின் இயல்பைப் புரிந்து நடப்பதே சிறந்தது என்பது இவர்களின் பரிந்துரை ஆகும்.

அறவழி தன்முனைப்பாக்கம்

அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காகச் செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது[5].

இன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.அறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம்.

பயனெறிமுறைக் கோட்பாடு

பயனெறிமுறைக் கோட்பாடு அல்லது பயனோக்கு கோட்பாடு (Utilitarianism) என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த பயனுடைமையைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான மெய்யியல் கோட்பாடு ஆகும். இது ஒரு வகையான விளைவுநெறிமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி பயனுடைமை என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் பண்டமாகக் கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற விருப்பச்சார்பு பயனோக்காளர்கள் எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது மாக்களையும் உட்படுத்தி புலனுணர்வு பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர்.

வரலாறு

எபிகியூரசின் பளிங்கு உருவச்சிலை

மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற கிரேக்க மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக, இதைத் துவக்கத்தில் ஜெரமி பெந்தாம்தான் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[6] அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "பெருமகிழ்ச்சிக் கோட்பாடு" என தனது கோட்பாட்டைத் திருத்திக் கொண்டார்.

பயன்படு நன்னெறி

பயன்படு நன்னெறி என்பது மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் வணிகம் போன்ற பல துறைகளில் நெறிமுறைசார் கேள்விகளை நிர்வகிக்கும் ஒரு நெறிமுறைகள் துறை ஆகும்.

முக்கியத் துறைகளில் பயன்படும் நன்னெறிகள்

உயிரி நன்னெறி

உயிரி நன்னெறி அல்லது உயிரி அறவியல் என்பது உயிரியல் மற்றும் மருத்துவத்தில் முன்னேற்றங்கள் மூலம் சர்ச்சைக்குரிய நெறிமுறைகள் பற்றிய ஆய்வு ஆகும். உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சட்டம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளில் எழுகின்ற நன்னெறி கேள்விகளுக்கு உயிரி நன்னெறி கவனம் செலுத்துகிறது. முதன்மை பராமரிப்பு மற்றும் பிற மருந்துகளின் கிளைகளில் எழும் மதிப்புகளின் பொதுவான கேள்விகள் ("சாதாரண நெறிமுறை") பற்றிய ஆய்வு இதில் அடங்கும்.

உயிரி நன்னெறியின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் உயிர் தொழில்நுட்ப நுட்பங்களின் வழிகாட்டுதலை எதிர்நோக்கியுள்ளது. இது அடிப்படை உயிரியல் மற்றும் எதிர்கால மனித குலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த வளர்ச்சி, படியெடுத்தல், மரபணு சிகிச்சை, மனித மரபியல் பொறியியல், விண்வெளி மற்றும் உயிர்களுக்கான வாழ்க்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் மூலம் அடிப்படை உயிரியல் கையாளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[7] உதாரணம் : மூன்று பெற்றோர் குழந்தை- குழந்தை உருவாகும் கருமுட்டையானது மரபணு அடிப்படையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் தொடர்புடைய மூவர், தாயிடமிருந்து டி.என்ஏ, தந்தை மந்றும் ஒரு பெண் நன்கொடையாளர் ஆகியோராவர்.[8] அதன்படி, புதிய உயிரி நன்னெறியானது அதன் மையத்தில் வாழ்வதற்கு அவசியம் தேவை. உதாரணமாக, உயிரியல் நெறிமுறைகள் கரிம மரபணு /புரத வாழ்வு தன்னை மதிப்பிடும் மற்றும் அதை வெளிப்படுத்தவும் முயல்கின்றன.[9] இத்தகைய உயிர்-அடிப்படையான கொள்கைகள், நெறிமுறைகள் ஒரு அண்டவியல் எதிர்கால வாழ்வை பாதுகாக்கக் கூடும். [10]

வணிக நன்னெறி

வணிக நன்னெறி (பெருநிறுவன நெறிமுறைகள் எனவும் அறியப்படுகிறது) என்பது பயன்படு நன்னெறியின் ஒரு வடிவமாகும், இது வணிக சூழ்நிலைகளில் ஏற்படும் நெறிமுறைசார் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அல்லது நெறிமுறைசார் சிக்கல்களை ஆராய்வதாகும். இது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது முழுவதுமாக தனிநபர்கள் மற்றும் வணிக அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துவரும் நேர்மையுணர்வில்-கவனம் செலுத்தப்பட்ட சந்தையிடங்களில், நெறிமுறைசார் வணிக செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான (நெறிமுறையியல் எனப்படுகிறது) தேவை அதிகரித்துவருகிறது.[11] அதேசமயம், புதிய பொது முனைப்புகள் மற்றும் சட்டங்கள் (எ.கா. அதிகப்படியான-புகையுமிழும் வாகனங்களுக்கு அதிக UK சாலை வரி விதிப்பு) வழியாக வணிக நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தொழில்துறையில் கட்டாயப்படுத்தப்படுகிறது.[12] வணிகங்கள் பொதுவாக நெறிமுறையற்ற முறையில் செயல்படுவதால் குறைந்த-கால ஆதாயங்களை அடையமுடியும்; எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் திடீரெனப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்கலாம்.

இராணுவ நன்னெறி

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நன்னெறி&oldid=3587328" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை