நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் ஒரு மிக பிரம்மாண்டமான பல்கலைக்கழகம். இது சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆசிய அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [4]

நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்
Nanyang Technological University
வகைதேசியப் பல்கலைக்கழகம், பொது, தன்னாட்சி
உருவாக்கம்1991
நிதிக் கொடைS$2.3 billion (US$1.8 billion)[1]
வேந்தர்டோனி டான் கெங் யம்
தலைவர்பெர்டில் ஆண்டர்சன்
கல்வி பணியாளர்
1,700
நிருவாகப் பணியாளர்
2,500
மாணவர்கள்33,500 [2]
பட்ட மாணவர்கள்23,500
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்10,000
அமைவிடம்
நன்யாங் அவெனியூ
,
1°20′41″N 103°40′53″E / 1.34472°N 103.68139°E / 1.34472; 103.68139
வளாகம்200 எக்டேர்கள் [3]
நிறங்கள்     சிவப்பு
     நீலம்
சேர்ப்புவாஷிங்டன் ஒப்பந்தம், ABET, ASAIHL, AUN, ACU, DAAD
இணையதளம்www.ntu.edu.sg
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
சீனப் பெயர்
சீன எழுத்துமுறை 南洋理工大學
எளிய சீனம் 南洋理工大学
மலாய்ப் பெயர்
மலாய்Universiti Teknologi Nanyang
தமிழ்ப் பெயர்
தமிழ்நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

வளாகங்கள்

நிர்வாகக் கட்டிடம்
சீனப் பண்பாட்டு மையம், முன்னர் நிர்வாகக் கட்டிடமாக செயல்பட்டது

இதன் முதன்மை வளாகத்திற்கு யுன்னான் வளாகம் என்று பெயர். இது 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஜுரோங் மேற்கு மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.

பள்ளிகளும், கல்லூரிகளும்

இந்த பல்கலைக்கழகத்தில் 15 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு துறைகளைக் கற்பிக்கின்றன. [5]

  • பொறியியல் கல்லூரி
உலகின் பெரிய பொறியியல் கல்லூரி எனப் போற்றுகின்றனர். இங்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான இள நிலை மாணவர்களும், 3,500 முதுநிலை மாணவர்களும் பயில்கின்றனர். [6]

இங்கு கீழ்க்கண்ட பள்ளிகள் உள்ளன.

  • வேதியியல், உயிர்வேதிப் பொறியியல் பள்ளி
  • கட்டிடப் பொறியியல், சுற்றுச்சூழலியல் பள்ளி
  • கணிப்பொறியியல் பள்ளி
  • மின், மின்னணுப் பொறியியல் பள்ளி
  • மெட்டீரியல் சைன்ஸ், பொறியியல் பள்ளி
  • இயந்திரப் பொறியியல், வானூர்திப் பொறியியல் பள்ளி


  • நன்யாங் வணிகப் பள்ளி
இது சிங்கப்பூரின் முன்னணி வணிகப் பள்ளியாகத் திகழ்கிறது. இங்கு மேலாண்மைக் கல்வியில் முதுநிலைப் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.


  • அறிவியல் கல்லூரி

இங்கு இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்றில் உயிரியல் பாடங்களையும், இன்னொன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களையும் கற்பிக்கின்றனர்.


  • லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து செயலாற்றுகிறது.


  • கலை, சமூக அறிவியல், மாந்தவியல் கல்லூரி
கலை, ஊடகம், வடிவமைப்புப் பள்ளி


இங்கு மாந்தவியல், கலை, சமூகவியல் ஆகிய துறைகள் உள்ளன. மாந்தவியல் துறையில் சீன மொழி, பொருளாதாரம், வரலாறு, மொழியியல் ஆகிய பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

கல்வி

இள நிலைக் கல்வி

இங்கு 23,500 பேர் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80% பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மீதமுள்ளோர் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாணவர்களுக்கான கல்விச் செலவில் பெருந்தொகையை சிங்கப்பூர் அரசு செலுத்துகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 27 % கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும். [7] வேற்று நாட்டு மாணவர்களுக்கும் கட்டண சலுகை கிடைக்கும். அந்த சலுகையைப் பெற, சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். [8]

உயர்நிலைக் கல்வி

இங்கு 10,000 மாணவர்கள் முது நிலைக் கல்வியும், முனைவர் படிப்பையும் மேற்கொள்கின்றனர். இங்கு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.சில துறைகளில் சேர்வதற்கு தகுதிகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜி.ஆர்.இ, ஜிமேட் ஆகியன. ஆங்கிலம் பேசாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்திற்கான சிறப்புத் தேர்வில் (டோஃபெல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். [9]

பட்டங்கள்

இள நிலைப் பட்டங்கள்: [10]

  • கணக்கியல்
  • வணிகம்
  • கவின் கலை
  • அறிவியல்
  • பொறியியல்
  • கலை
  • தொடர்பாடல்

முது நிலைப் பட்டங்கள்:

  • வணிகம்
  • வணிக நிர்வாகம்
  • அறிவியல்
  • கலை
  • கல்வி
  • கல்வித் துறை நிர்வாகம்
  • பொறியியல்
  • பொது நிர்வாகம்
  • பயன்பாட்டு அறிவியல்
  • தொடர்பாடல் கல்வி

முனைவர் பட்டங்கள்:

  • மெய்யியல்
  • கல்வி

முன்னாள் மாணவர்கள்

  • க. குணாளன் - முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை