நாம் தமிழர் கட்சி

தமிழ் இன தேசியவாத கொள்கை கொண்ட இந்திய அரசியல் கட்சி

நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய,[4][5] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும்.[6] [7].[8] இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.[9]

நாம் தமிழர் கட்சி
சுருக்கக்குறிநாதக
தலைவர்சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) [1]
தொடக்கம்18 மே 2010
முன்னர்நாம் தமிழர் இயக்கம்
தலைமையகம்கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600 116.[2]
மாணவர் அமைப்புஅப்துல் ரகூப் மாணவர் பாசறை
இளைஞர் அமைப்புமுத்துக்குமார் இளைஞர் பாசறை
பெண்கள் அமைப்புசெங்கொடி மகளிர் பாசறை
கொள்கைதமிழ்த் தேசியம்
சூழலியம்
நிறங்கள்சிகப்பும்   மஞ்சளும்  
இ.தே.ஆ நிலைபதிவு செய்த கட்சிகள்[3]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவை)
தேர்தல் சின்னம்
மைக் (ஒலிவாங்கி)
கட்சிக்கொடி
இணையதளம்
naamtamilar.org
இந்தியா அரசியல்
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலக முகப்பு

இக்கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காணப்படுகிறது. 2009 மே 18 ஆம் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதையடுத்து அதை தொடர்ந்த ஓராண்டில் "நாம் தமிழர் கட்சி" தமிழ்த் தேசிய கொள்கைகளை பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கட்சியின் கொள்கைகள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.

தமிழின மீட்சி, ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு, மாநிலத் தன்னுரிமை, தமிழை வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது, இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது, தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்பது, மகளிருக்குச் சமபங்கு அளிப்பது, தமிழ்வழியில் கற்றோருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இக்கட்சியின் கொள்கைகளாகும்.[10][11] [12][13][14]

2016 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாட்டு கொடி

2016 ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. இதற்கு முந்தைய 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளுடன், சதவிகித அடிப்படையில் 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.[15][16][17][18]

2017 டாக்டர் ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

டாக்டர் ராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் 3802 வாக்குகள் பெற்று 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது.[19][20][21][22][23]

கட்சியின் சின்னம்

2019 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கானச் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் மறுக்கப்பட்டது. [சான்று தேவை]அதனை மேகாலாயாவிலுள்ள ஒரு மாநிலக் கட்சி தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்டச் சின்னமாகப் பெற்றுவிட்டது ௭னக் கூறி மறுத்தார்கள். [யார்?]பிறகு தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரியதால், அதனை ஒதுக்கினார்கள்.[24] ஆனால் அச்சின்னத்தை வாக்குப்பதிவு ௭ந்திரத்தில் அச்சிடுகிறபோது தெளிவற்றதாக, மிகவும் மங்கலானதாகப் பொறித்து இருட்டடிப்பு செய்ததாக இக்கட்சி குற்றஞ்சாட்டியது. இது குறித்து முறையிட உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாம் தமிழர் கட்சி அணுகியது.[25]

2024 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி மைக் சின்னம் வழங்கப்பட்டடுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல்

ஏப்ரல் மாதம் 18 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம், புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 23.03.2019 அன்று சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[26] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார் சீமான்.

நீலகிரி மக்களவைத் தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 26,995 வாக்குகளைப் பெற்றது.

22 தொகுதி இடைத்தேர்தல்-2019

18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார் சீமான்.[27][28]

2021 சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டுயிட்டது. 2021 மார்ச்சு 7 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[29][30]புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கட்சியின் வளர்ச்சி

ஆண்டுதேர்தல்சின்னம்பெற்ற வாக்குகள்விழுக்காடு %
2016சட்டமன்றத் தேர்தல்இரட்டை மெழுகுவர்த்தி4,58,1041.10%
2017இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்இரட்டை மெழுகுவர்த்தி3,8022.15%
201922 தொகுதி இடைத்தேர்தல்கரும்பு விவசாயி
தமிழகம்1,38,4193.15%
புதுச்சேரி1,0844.72%
மொத்த வாக்குகள்1,39,503
2019நாடாளுமன்றத் தேர்தல்கரும்பு விவசாயி
தமிழகம்16,45,1853.89% [31]
வேலூர்26,9952.63%
புதுச்சேரி22,8572.89%
மொத்த வாக்குகள்16,95,037
2021சட்டமன்றத் தேர்தல்கரும்பு விவசாயி
தமிழகம்31,08,9066.72%
புதுச்சேரி28,1893.4%
மொத்த வாக்குகள்31,37,095
2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்கரும்பு விவசாயி10,827[32]6.35%[32]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாம்_தமிழர்_கட்சி&oldid=3919296" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை