நிலவின் கலை

நிலவின் கலை என்பது புவியில் இருந்து காணக்கூடிய நிலவின் முற்பக்கத்தில் கதிரவ ஒளி பதியும் போது ஏற்படும் வடிவம் ஆகும். ஒவ்வொரு நிலவு மாதத்திற்கு (சுமார் 29.53 நாட்கள்) ஒரு முறை நிலவின் கலைகள் மாறுகின்றன.

வட துருவத்தில் இருந்து காணும்போது நிலவின் கலைகள்
தென் துருவத்தில் இருந்து காணும் போது நிலவின் கலைகள்

நிலவின் சுழற்சியானது புவியின் ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நிலவின் முற்பக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி இருக்கின்றது. இப்பக்கத்தின் மீது விழும் கதிரவ ஒளியின் அளவைப் பொறுத்து வானில் வெவ்வேறு வடிவங்களில் நிலவு காட்சியளிக்கும்.[1]

நிலவின் கலைகள்

நிலவின் கலைகள் அனைத்தையும் மறைமதி, வளர்மதி, முழுமதி மற்றும் தேய்மதி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். பிறைமதி, அரைமதி மற்றும் குமிழ்மதி ஆகிய சொற்கள் நிலவின் வடிவங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.

நிலவின் முதன்மையான எட்டுக் கலைகள்
கலைவட துருவம்தென் துருவம்காணும் நிலைஉச்ச நிலைசராசரி நிலவு எழும் நேரம்சராசரி நிலவு வீழ்ச்சி நேரம்வட துருவம்தென் துருவம்புகைப்படம்
(வட துருவத்தில் இருந்து காணும் போது)
மறைமதி0%புலப்படாதுநண்பகல்6 am6 pm
புலப்படாது
வளரும் பிறைமதிவலப்புறம், 1–49% ஒளிர்வட்டம்இடப்புறம்,

1–49% ஒளிர்வட்டம்

காலை முதல் அந்தி சாயும் பின்பு வரை3 pm9 am9 pm
வளரும் அரைமதிவலப்புறம், 50% ஒளிர்வட்டம்இடப்புறம், 50% ஒளிர்வட்டம்மதியம் மற்றும் மாலை6 pmநண்பகல்நள்ளிரவு
வளரும் குமிழ்மதிவலப்புறம், 51–99% ஒளிர்வட்டம்இடப்புறம், 51–99% ஒளிர்வட்டம்பிற்பகல் மற்றும் இரவின் பெரும்பாலான நேரம்9 pm3 pm3 am
முழுமதிமுழுமையான ஒளிர்வட்டம்கதிரவ மறைவு முதல் எழுச்சி வரைநள்ளிரவு6 pm6 am
தேயும் குமிழ்மதிஇடப்புறம், 99–51% ஒளிர்வட்டம்வலப்புறம், 99–51% ஒளிர்வட்டம்இரவின் பெரும்பாலான நேரம் மற்றும் அதிகாலை3 am9 pm9 am
தேயும் அரைமதிஇடப்புறம், 50% ஒளிர்வட்டம்வலப்புறம், 50% ஒளிர்வட்டம்பின்னிரவு மற்றும் காலை6 amநள்ளிரவுநண்பகல்
தேயும் பிறைமதிஇடப்புறம், 49–1% ஒளிர்வுவலப்புறம், 49–1% ஒளிர்வுபொழுது விடியும் முன்பு இருந்து பிற்பகல் வரை9 am3 am3 pm

வளர்தலும் தேய்தலும்

நிலவும் கதிரவனும் புவியின் ஒரே பக்கத்தில் இணைந்திருக்கும் போது புவியை நோக்கி இருக்கும் நிலவின் பிற்பக்கம் கதிரவ ஒளியின்றி இருளாக இருக்கும். இதுவே மறைமதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி மெல்ல மெல்ல அதிகரிப்பதால் நிலவு வளர்வது போல் தோன்றும். இதுவே வளர்மதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி முழுமையாக பதியும் போது நிலவு வட்ட வடிவாகத் தெரியும். இதுவே முழுமதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு அந்த ஒளி மெல்ல மெல்ல குறைவதால் நிலவு தேய்வது போல் தோன்றும். இதுவே தேய்மதி என்று அழைக்கப்படுகிறது. பிறகு ஒளி முற்றிலும் குறைந்து மீண்டும் புதுநிலவு வரும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிலவின்_கலை&oldid=3601166" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை