நூர்சியாவின் பெனடிக்ட்

நூர்சியாவின் புனித பெனடிக்ட் (இத்தாலியம்: San Benedetto da Norcia) (சுமார்.480–543) ஒரு கிறித்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவரும் ஆவார். இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்கள் (64 km) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதி நாட்களைக் கழித்தார்.

நூர்சியா நகரின் புனித பெனடிக்ட்
புனித பெனடிக்ட்
ஓவியர்: ஃபிரா ஆன்ஜெலிக்கோ
துறவி, ஆதீனத் தலைவர்
பிறப்புசுமார் 480
நூர்சியா, இத்தாலி
இறப்பு543 (அகவை 63)
மோன்தே கசினோ
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
புனிதர் பட்டம்1220, உரோமை நகரம் by மூன்றாம் ஹோனோரியஸ்
முக்கிய திருத்தலங்கள்இவரின் கல்லரையின் அமைவிடமான மோன்தே கசினோவில் உள்ள ஆலயம்
திருவிழாஜூலை 11
சித்தரிக்கப்படும் வகை-மணி
-உடைந்த தட்டு
-உடைந்த கோப்பை மற்றும் நஞ்சினைக்குறிக்க பாம்பு
-உடைந்த பாத்திரம்
-தூரிகை
பாதுகாவல்-நஞ்சினால் பாதிக்கப்பட்டோர்
-பில்லி சூனியத்திலிருந்து தப்ப
-உழவர்
-பொற் கொல்லர்
-மரண படுக்கையில் இருப்போர் -ஐரோப்பா
-காய்ச்சல்
-துறவற சபையினர்
-பிள்ளை
-தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள்
-பாவ சோதனை

பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு

தனது 20ஆம் அகவையில் உலகை வெறுத்து உரோமைக்கு வெளியே வனவாசியாக வாழ்ந்தவர் இவர். தனிமையில் இறைவனை தியானிப்பதில் செலவிட்டார். அருகில் இருந்த ஆதீனத்தின் தலைவர் இறந்தபோது, அம்மடத்து துறவிகளின் வேண்டுதலின் பேரில் இவர் அவர்களுக்கு தலைவரானார். இவர் இயற்றிய கடின சட்டங்களினால் வெறுப்படைந்த துறவிகள் இவரை நஞ்சூட்டு கொல்ல திட்டமிட்டு நஞ்சு கலந்த கோப்பையினை இவரிடம் கொடுத்த போது, இவர் அதனை ஆசீர்வதிக்க, அக்கோபை உடைந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் அவர் மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் தனிமை வாழ்வுக்கு திரும்பினார்.

இவர் மோன்தே கசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும் போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின் படி இது நிகழ்ந்தது மார்ச் 21, 547.

1964இல் இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார்.[1]

இவரின் நினைவுநாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் பிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் மார்ச் 14 ஆகும்.[2] ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை ஜூலை 11இல் நினைவு கூர்கின்றது.

பெனடிக்டின் சட்டங்கள்

இவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ஒரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

பெனடிக்டின் பதக்கம்

பெனடிக்டின் பதக்கம், கி.பி. 1880

பெனடிக்டின் பதக்கம் முதன் முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்கய் அணியப்பட்டது. இதன் ஒருபக்கத்தில் பெனடிக்டின் உருவமும். மறுபக்கத்தில் சிலுவையும் அதனைச் சுற்றியும் அதன் மீதும் இலத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்படிருக்கும்.[3]

இப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை. ஆயினும் 1880ஆம் ஆண்டு இவரின் பிறப்பின் 1400ஆம் ஆண்டு நினைவுக்காக வெளியிடப்பட்ட போதிலிருந்து இது மக்களிடையே புகழ் பெறத்துவங்கியது. 1647ஆம் ஆண்டு பவேரியாவின் இருந்த ஒரு சூனியக்காரி, இப்பதகத்தை அனிபவர் மீது தனது மந்திரம் வேலைசெய்ய மறுப்பதாக கூறியுள்ளார். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் டிசம்பர் 23, 1741, மற்றும் மார்ச் 12, 1742[3] அன்று இப்பதக்கதை அருளிக்கமாக அணிய அதிராரப்பூர்வ அனுமதியளித்தார்.

பெனடிக்டின் தாக்கம்

சுவிட்சர்லாந்தில் உள்ள பெனடிக்டின் சிலை

மத்தியகாலத்தின் துவக்க நூற்றாண்டுகள் பெனடிக்டின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகின்றது.[4] ஏப்ரல் 2008இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புனித பெனடிக்ட் தனது வாழ்வினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அழிக்கமுடியா தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். உரோமைப் பேரரசின் அழிவால் இருள் சூழ்ந்திருந்த ஐரோபாவை மீட்டவர் இவர் என இவருக்கு புகழாரம் சூட்டினார்.[5]

மற்ற எந்த ஒரு தனி நபரையும் விட பெனடிக்ட் மேற்கு துறவு மடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் இயற்றிய சட்டங்கள் இன்றலவும் பல்லாயிரக்கணக்கான துறவுமடங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது.[6][7]

இவற்றையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Benedict of Nursia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

 இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  "St. Benedict of Nursia". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 

புனித பெனடிக்ட் குறித்தான படக்காட்சியகம்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை