நேபாள குடியரசுத் தலைவர்

நேபாள நாட்டின் அரசு முறை தலைவர்

நேபாள குடியரசுத் தலைவர், (President of the Federal Democratic Republic of Nepal) (நேபாளி: राष्ट्रपति), நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு மற்றும் முப்படைகளின் தலைவர் ஆவார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழித்து, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்த நாளில் குடியரசுத் தலைவர் பதவி மே 2008ல் உருவாக்கப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ஆவார்.

நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு குடியரசுத் தலைவர்
தற்போது
ராம் சந்திர பௌதெல்

13 மார்ச்சு 2023 முதல்
வாழுமிடம்சீதள் நிவாஸ்
நியமிப்பவர்மறைமுகத் தேர்தல்
பதவிக் காலம்ஐந்தாண்டுகள்
உருவாக்கம்28 மே 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-05-28)
துணை குடியரசுத் தலைவர்துணைக் குடியரசுத் தலைவர்
ஊதியம்நேபாள ரூபாய் 1,09,410 (மாதந்தோறும்)[1]
இணையதளம்www.presidentofnepal.gov.np

வித்யா தேவி பண்டாரி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, அக்டோபர் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் மார்ச் 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

நேபாள நாடாளுமன்றத்தின், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், நேபாள குடியரசுத் தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க இயலாது.

அதிகாரங்கள்

இந்தியக் குடியரசுத் தலைவர் போன்றே, நேபாளக் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் சடங்கு சம்பிரதாயம் போன்றதே. பிரதம அமைச்சரின் ஆலோசனையின் படியே நேபாள குடியரசுத் தலவர் செயல்படுகிறார்.

குடியரசுத் தலைவர் பதவியின் வரலாறு

நேபாள இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தின் படி நேபாளத்தில் சனவரி, 2007 அன்று மன்னராட்சி முறை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது. நேபாளத்தின் தற்காலிக குடியரசுத் தலைவராக முன்னாள் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 2008ல் கூடிய நேபாள நாடாளுமன்றம், ராம் பரன் யாதவ்வை, நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நேபாளத்தில் 247 ஆண்டு கால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது.

நேபாளக் குடியரசுத் தலைவர்கள் (2008 முதல் - தற்போது வரை)

எண்பெயர்
(பிறப்பு–இறப்பு)
படம்தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்பதவியேற்ற நாள்விலகிய நாள்துணை குடியரசுத் தலைவர்வாக்குகள்
1ராம் பரன் யாதவ்
(1948–)
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 200823 சூலை 200829 அக்டோபர் 2015பரமானந்த ஜா
308 / 601

(2nd round)
2வித்யா தேவி பண்டாரி
(1961–)
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 201529 அக்டோபர் 201513 மார்ச்சு 2023நந்த கிசோர் புன்
327 / 601
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018
3ராம் சந்திர பௌதெல்
(1944–)
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 202313 மார்ச்சு 2023பதவியில்
566 / 881

நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2023

நேபாளத்தின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் மார்ச் 9, 2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் ராம் சந்திர பௌதெல் மற்றும் சுபாச்சந்திர நெம்வாங் ஆகியோர் போட்டியிட்டனர். ராம் சந்திர பௌதெல் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

வேட்பாளர்அரசியல் கட்சிகள்வாக்குகள்
ராம் சந்திர பௌதெல்நேபாளி காங்கிரஸ்556
சுபச்சந்திர நெம்வாங் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்260
செல்லாத வாக்குகள்5881

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை