பண்ணுறவாண்மை

பண்ணுறவாண்மை அல்லது அரசனயம் (Diplomacy) என்பது குழுக்களின் அல்லது நாடுகளின் பேராளர்களுடன் பேரப் பேச்சுக்களை நடத்தும் நடைமுறையும் கலை ஆகும்.[1] நாடுகளிடையே விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே இது என்றும் பொருள் கொள்ளப்படுவது உண்டு. பொதுவாக இது, அமைதி, வணிகம், போர், பொருளாதாரம், பண்பாடு சூழல் மற்றும் மனித உரிமை விடயங்கள் ஆகியவை தொடர்பான விடயங்களில் நாடுகளிடையேயான உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவே இச்சொல் பயன்படுகிறது. இவ்விடயங்களை தொழில் அடிப்படையிலான பண்ணுறவாளர்களே கையாள்வர். நாடுகளிடையேயான ஒப்பந்தங்களை நாடுகளின் அரசியலாளர்கள் ஏற்றுக் கொண்டு கைச்சாத்திடுமுன், பண்ணுறவாளர்களே இவற்றுக்கான பேச்சுக்களை நடத்துவர். முறைசாராவிதத்தில்,சமூகக் கருத்தின் அடிப்படையில் கூறுவதாயின் பொதுவான பிரச்சனைகளிற்கு இருதரப்புகளும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளைக் காணுதல் அல்லது தந்திரோபாயமான சாதகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உத்திகளை மோதலற்ற விதத்தில் பிரயோகிப்பதே அரசனயம் ஆகும். 1900 வாக்கில் "பண்ணுறவாளர்கள்" என்ற வார்த்தை பண்ணுறவு சேவைகள், தூதரக சேவைகள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக டேவிட் ஸ்டீவன்சன் தெரிவிக்கிறாா்.[2]

நியூ யார்க் நகரில் தலைமையகத்தைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிகப் பெரிய இராசதந்திர அமைப்பு ஆகும்.
Ger van Elk, Symmetry of Diplomacy, 1975, Groninger Museum.

வரலாறு

பண்ணுறவாண்மையைக் கையாளுவது ஒரு நாட்டுக்கு இருக்கவேண்டிய முக்கிய தகுதிகளுள் ஒன்று. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் நகர அரசுகள் உருவானபோதே பண்ணுறவாண்மை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. வரலாற்றுக் காலத்தின் பெரும்பகுதியில், குறிப்பிட்ட சில பேச்சுக்களுக்காக பண்ணுறவாளர் வேற்று நாடுகளுக்கு அனுப்பப்படுவர். பணி முடிந்ததும் உடனடியாகவே அவர்கள் திரும்பிவிடுவர். இன்னொரு நாட்டுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக வலுவைக் கொடுப்பதற்காக, அனுப்பப்படும் பண்ணுறவாளர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களது நெருங்கிய உறவினராகவோ அல்லது மிகவும் உயர்ந்த பதவி வகிப்பவர்களாகவோ இருப்பர்.

ஐரோப்பாவில் பண்ணுறவாண்மை

ஐரோப்பாவில் ஆரம்பகால நவீன பண்ணுறவாண்மை தோன்றியது.[3] 13-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால மறுமலர்ச்சி காலத்தில் முதலாவது தூதரகங்கள் பெரும்பாலும் வடக்கு இத்தாலியின் மாநிலங்களில் நிறுவப்பட்டது. குறிப்பாக இத்தாலியின் மற்ற நகர மாநிலங்களுக்கான நிரந்தர தூதரகங்கள் நிறுவிய பிரான்செஸ்கோ ஸ்ஃபோர்ஸா ஆட்சிகாலத்தில் மிலன் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. டஸ்கனி மற்றும் வெனிஸ் 14 ஆம் நூற்றாண்டு முதல் பண்ணுறவாண்மை மையங்களை வளர்த்துக் கொண்டன. இத்தாலிய தீபகற்பத்தில் நவீன பண்ணுறவாண்மையின் பல மரபுகள் தொடங்கியது நாட்டின் தலைநகருக்கு தூதுவர்களை அனுப்பும் முறைகள் போன்றவை தொடங்கின.

நவீன பண்ணுறவாண்மையின் விதிகள்

இத்தாலியில் இருந்த பண்ணுறவாண்மை நடைமுறை ஐரோப்பா முழுவதும் பரவியது. 1455 ஆம் ஆண்டில் பிரான்சின் அரசவைக்கு ஒரு பிரதிநிதியை மிலன் முதன்முதலாக அனுப்பியிருந்தது. இருப்பினும், பிரெஞ்சுப் பிரதிநிதிகள் அதன் உள்விவகாரங்களில் தலையிடுவார்கள் என்பதால் உளவுத்துறையினருக்கு பயந்து பிரெஞ்சு பிரதிநிதிகளை நடத்துவதற்கு மிலன் மறுத்துவிட்டது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற வெளிநாட்டு சக்திகள் இத்தாலிய அரசியலில் முக்கிய பங்காற்றியதால் தூதர்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைவில் முக்கிய ஐரோப்பிய நாடுகள் பிரதிநிதிகளை பரிமாறிக்கொண்டன. ஸ்பெயின் நிரந்தர பிரதிநிதிகளை அனுப்பிய முதல் நாடாக இருந்தது.1487 ஆம் ஆண்டில் செயின்ட் ஜேம்ஸ் அவைக்கு ( இங்கிலாந்து) ஒரு தூதரை நியமித்தது.[4] 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிரந்தர தூதுக்குழுக்கள் வழக்க மரபாக மாறியது. எனினும், புனித ரோமானிய பேரரசர், நிரந்தர தூதுவர்களை தவறாமல் அனுப்பவில்லை, ஏனென்றால் அனைத்து செருமானிய இளவரசர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்ய முடியாத நிலை இருந்தது.

1500-1700 ஆம் ஆண்டில் நவீன பண்ணுறவாண்மை விதிகள் மேலும் மேம்பாடுகள் செய்யப்பட்டன.[5] 1715 ஆம் ஆண்டில் இத்தாலிக்கு பதிலாக பிரான்சு பண்ணுறவாண்மை கொள்கையை முன்னெடுத்தது. உயர் பதவியில் இருக்கும் பிரதிநிதி தூதுவர் ஆவார்.[6][7][8] அந்த நேரத்தில் தூதுவர் ஒரு உயர் பதவி வகிப்பவராக இருந்தார். நாட்டின் பிரதிநிதித்துவத்துடன் அவர் ஒப்படைக்கப்பட்ட மரியாதைக்குரிய பதவி வகித்தார். தூதுவர்களுக்கு கடுமையான தரநிலைகள் மேம்படுத்தப்பட்டன. தேவையான பெரிய குடியிருப்புக்கள், விருந்தினர் மாளிகைகள் தேவை, அவற்றின் நட்பு நாடுகளின் அவை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தல் போன்றவையாகும். ரோமின் கத்தோலிக்கத் தூதுவர்கள் அதிக சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டனர். பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய தூதுவர்களின் நூறு நபர்கள் வரை இருந்தனர்.

பண்ணுறவாண்மை தற்போது ஒரு சிக்கலான விவகாரமாக உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தூதுவர்கள் , அவர்களுக்கு அளிக்கப்படும் மிகவும் சிக்கலான முன்னுரிமைகளால் மிகவும் விவாதத்திற்கு உட்படுகின்றனர். அரசுகள் பொதுவாக இறையாண்மை முறைமையால் வரிசைப்படுத்தப்பட்டன. கத்தோலிக்க நாடுகளுக்கு வத்திக்கானில் [9][10] இருந்து வந்த தூதர் முதன்மையானவராக இருந்தார் இவருக்கு அடுத்து ராஜ்யங்களிலிருந்து வந்தவர்களுக்கும் பின்னர் டச்சுக்கள் மற்றும் சர்வாதிகார நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. குடியரசு நாடுகளின் பிரதிநிதிகள் மிகக் கீழ் நிலையில் மதிக்கப்பட்டனர். ( பெரும்பாலும் பல ஜேர்மனிய, ஸ்காண்டிநேவிய மற்றும் இத்தாலிய குடியரசுகளின் தலைவர்களைக் இச்செயல்முறை கோபப்படுத்தியுள்ளனர்). இருராஜ்யங்களுக்கிடையில் முன்னுரிமையைத் தீர்மானிப்பது பெரும்பாலும் மாறிக்கொண்டிருக்கும் பல காரணிகளைச் சார்ந்திருப்பதால் தொடர்ந்து இடைவெளியைத் தாண்டிச் செல்கிறது.

தூதுவர் விலக்களிப்பு

பண்ணுறவாளர் அல்லது தூதுவர்களின் புனிதத்தன்மை நீண்ட காலமாகவே பேணப்படுகிறது. இந்த புனிதமானது தூதுவர் விலக்களிப்பு என அறியப்பட்டாலும், பல்வேறு காலகட்டங்களில் தூதுவர்கள் கொல்லப்பட்ட பல வழக்குகள் இருந்த போதிலும் இப்பதவி பொதுவாக பெரும் கௌரவம் என்று கருதப்படுகிறது. செங்கிஸ் கான் மற்றும் மங்கோலியர்கள் பண்ணுறவாளர்களின் உரிமைகளை வலுவாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துதலுக்கு நன்கு அறியப்பட்டனர். மேலும் இந்த உரிமைகளை மீறிய எந்தவொரு தேசத்துக்கும் எதிராக கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளை அவர்கள் அடிக்கடி செய்து வந்திருக்கிறார்கள்.பண்ணுறவாளர் உரிமைகள் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் நிறுவப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தூதுவர் விளக்களிப்பு (Diplomatic Immunity) என்பது ஒரு சட்டபூர்வமான விதிவிலக்கு ஆகும். இது பிறநாட்டுத் தூதுவர்களுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவர்களின் மீது உள்நாட்டுச் சட்டப்படி அல்லது நாட்டின் சட்டங்களின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் நாட்டிலிருந்து வெளியேற்ற வழிவகை உள்ளது. இராஜதந்திர உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தத்தில் சர்வதேச சட்டமாக நவீன இராஜதந்திர விதிவிலக்கு குறியிடப்பட்டது (1961) [11]

பண்ணுறவாளர்கள் அல்லது தூதுவர்களின் தகவல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. ஆதலால் அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளும் ஆவணங்களும் எவ்வித சோதனைளும் செய்யப்படாமல் எல்லைகளை கடந்து, கொண்டு செல்ல நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இச்செயல்முறையில் தூதுவர்கள் அல்லது அவர்களுக்காக கொண்டு வரப்படும் அல்லது கொண்டுசெல்லப்படும் சீலிடப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் அடங்கிய பெட்டகத்துக்கு "தூதுவர் பை” (Diplomatic Bag or Diplomatic Pouch) என அழைக்கப்படுகிறது. இப்பை எவ்விதமான சுங்கம், கலால், மற்ற பிற சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்காலத்தில் ரேடியோ மற்றும் எண்முறை மின்னணு தகவல் தொழில்நுட்பங்கள் மிகச்சிறந்த தரத்தில் இருந்த போதிலும் இம்முறையில் தகவல் தொடர்பு பொதுவான அம்சமாக இன்றும் நடைமுறையில் உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகள் ஒரு முழு கொள்கலக் கப்பலையும் “தூதுவர் பைகளாக” பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவை எவ்வித சோதனைகளுமின்றி அனுமதிக்கப்படுகின்றன.[12]

தூதரக விரிகல், பிற காரணங்களால் ஏற்படும் விரோதப் போக்குகள் காரணமாக தூதுவர்களின் ​​தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக பிணக்கு ஏற்பட்ட நாடுகளில் பணியாற்றும் பண்ணுறவாளர்கள் அல்லது தூதுவர்கள் பெரும்பாலும் திரும்பப் பெறப்படுகின்றனர்.[13] அதே நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் அந்நாடு நட்பாக இருந்தாலும், உள்நாட்டு எதிர்ப்பாளர்களிடமிருந்து அல்லது தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுமாயின் தூதர்கள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.[14] சிலநேரங்களில் தற்காலிகமாக விருந்தினர் நாட்டின் மீது அதிருப்தி தெரிவிக்கவும் தூதுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், கீழ்-நிலை ஊழியர்கள் தூதுவர்களின் பண்ணுறவாண்மைப் பணியினை செய்ய வேண்டியிருக்கலாம். சில வேளைகளில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடல், உளவுபார்த்தல் போன்ற நெறிபிறழ் நடத்தைகளின் காரணமாக விருந்தினர் நாட்டால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்படுவர்.[15]

உளவு

பண்ணுறவான்மையானது உளவு மற்றும் ஒற்றுத் தகவல்களை சேகரித்தல் பணியுடன் நெருங்கிய தொடர்புடையது. தூதரகங்களானது பண்ணுறவான்மை நடவடிக்கைகளுக்கும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் முக்கியத் தளமாக விளங்குகிறது.[16] உதாரணமாக விருந்தினர் நாட்டின் இராணுவ விவகாரங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை பற்றிய தீவிரமான கண்கானிப்பை மேற்கொண்டு தனது நாட்டு அரசுக்கு அவ்வப்போது அல்லது தேவைப்படும் போது தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். சில நேரங்களில் உளவுப்பணியினர் தங்களது இந்த பணியினை மறைக்க முயற்சிப்பதில்லை. இவ்வாறான உளவாளிகள் விருந்தினர் நாட்டின் இராணுவ வீரர்கள் அல்லது விமான நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அந்நாட்டால் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே அழைக்கப்படுகிறார்கள். பல தூதரகங்களில் மிகத் தீவிரமாக செயல்படும் உளவாளிகள் போலியான வேறு பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுவர். ஆனால் அவர்களின் முக்கிய பணியானது சட்டப்பூர்வமற்ற வகைகளில் புலனாய்வு தகவல்களை சேகரிப்பது உள்ளூர் அல்லது வேவுகாரர்களின் உளவு வளையங்களை ஒருங்கிணைப்பது போன்றவை இவர்களின் பணிகளாக உள்ளன.[17]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Diplomacy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பண்ணுறவாண்மை&oldid=3811787" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை