பலூச்சி மொழி


பலூச்சி மொழி ஒரு வடமேற்கு ஈரானிய மொழியாகும். மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் உள்ள பலூச்சிஸ்தானின் பலூச் பகுதியின் முதன்மை மொழி இதுவாகும். இது சில பிராகுயிக்களால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது. இது பாகிஸ்தானின் ஒன்பது உத்தியோக மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

பலூச்சி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bal
ISO 639-3

கிளைமொழிகள்

பலூச்சி மொழிக்குப் பல கிளைமொழிகள் உள்ளன. எத்னோலாக் மூன்று கிளைமொழிகளாக, கிழக்குப் பலூச்சி, மேற்குப் பலூச்சி, தெற்குப் பலூச்சி என்னும் மூன்றையும் குறித்துள்ளது. ஈரானிக்கா கலைக்களஞ்சியம் ஆறு கிளைமொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. இவை, ரக்ஷானி, சரவானி, லக்ஷாரி, கேச்சி, கரையோரக் கிளைமொழிகள், கிழக்கு மலைப்பகுதிப் பலூச்சி என்பனவாகும். இவற்றுள் ரக்ஷானிக்குத் துணைக் கிளைமொழிகளாக கலாத்தி, பஞ்குரி, சர்ஹாத்தி என்னும் மூன்று மொழிகள் தரப்பட்டுள்ளன.

எழுத்து

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பலூச்சி எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியாகவே இருந்தது. உத்தியோக எழுத்து மொழியாக பாரசீகம் இருந்தபோதும், பலூச் நீதிமன்றங்களில் பலூச்சி பேசப்பட்டு வந்தது. பிரித்தானிய மொழியியலாளர்களும், அரசியல் வரலாற்று அறிஞர்களும் ரோம எழுத்து வடிவங்களையே பயன்படுத்தினர். பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர் பலூச் அறிஞர்கள், நஸ்டாலிக் அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் பாஷ்தூ மொழியை எழுதப் பயன்படுத்தும் மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஒலியனியல்

உயிர்கள்a, i, u, aː, iː, eː, uː, oː
கூட்டுயிர்கள்ai, au, aːi
வெடிப்பொலிக் கூறுகள்p, b, t, d, ʈ, ɖ, k, ɡ
வெடிப்புரசொலிகள்ʧ, ʤ
உரசொலிகள்s, z, ʃ, ʒ, h
  • Allophones for syllable final -b, -t, -d -> -v, -θ, -ð (Eastern Hill Balochi only)
  • Fricatives in unassimilated loanwords: f, x, ɣ
மூக்கொலிகள்m, n, ŋ
உருட்டொலிகள்r, ɽ
பக்க உயிர்ப்போலிகள்l
உயிர்ப்போலிகள்w, j
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பலூச்சி_மொழி&oldid=3135079" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை