பேரியம் சல்பேட்டு

பேரியம் சல்பேட் என்பது (Barium Sulfate) BaSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் மணமற்ற, வெண்ணிற படிகத் திண்மம் ஆகும். இது நீரில் கரையாத தன்மை உடையது. இது பேரியம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் முக்கிய வணிக மூலமாக விளங்கும் கனிம பாரிட்டாக கிடைக்கிறது. வெள்ளைநிற ஒளிபுகா தோற்றம் கொண்ட மற்றும் உயர் அடர்த்தி அதன் பல முக்கிய பயன்பாடுகளில் இச்ரே்மத்தை பயன்படுத்திக் கொள்ள ஏதுவானதாக இருக்கிறது.[4]

பேரியம் சல்பேட்டு
Chemical structure of barium sulfate
3D model of barium sulfate
3D model of barium sulfate
இனங்காட்டிகள்
7727-43-7 Y
ChEBICHEBI:133326 N
ChEMBLChEMBL2105897 N
ChemSpider22823 Y
EC number231-784-4
InChI
  • InChI=1S/Ba.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2 Y
    Key: TZCXTZWJZNENPQ-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Ba.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
    Key: TZCXTZWJZNENPQ-NUQVWONBAD
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்24414
வே.ந.வி.ப எண்CR060000
SMILES
  • [Ba+2].[O-]S([O-])(=O)=O
UNII25BB7EKE2E Y
பண்புகள்
BaSO4
வாய்ப்பாட்டு எடை233.38 கி/மோல்
தோற்றம்வெண்ணிறப்படிகம்
மணம்odorless
அடர்த்தி4.49 கி/செமீ3
உருகுநிலை 1,580 °C (2,880 °F; 1,850 K)
கொதிநிலை 1,600 °C (2,910 °F; 1,870 K) (சிதைகிறது)
0.0002448 கி/100 மிலி (20 °செ)
0.000285 கி/100 மிலி (30 °செ)
கரைதிறன் பெருக்கம் (Ksp)
1.0842 × 10−10 (25 °செ)
கரைதிறன்எத்தனாலில் கரையாது.[1] சூடான அடர் கந்தக அமிலத்தில் கரையும்
-71.3·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.636 (ஆல்பா)
கட்டமைப்பு
படிக அமைப்புorthorhombic
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−1465 கிலோஜூல்·மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
132 ஜூல்·மோல்−1·K−1[2]
மருந்தியல்
ATC code
Pharmacokinetics:
Routes of
administration
வாய் வழியாக, மலக்குடல்
கழிப்புrectal
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுnot listed
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாதது [3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 15 மிகி/மீ3 (மொத்தம்) TWA 5 மிகி/மீ3 (resp)[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 மிகி/மீ3 (மொத்தம்) TWA 5 மிகி/மீ3 (resp)[3]
உடனடி அபாயம்
N.D.[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பயன்கள்

கதிரியக்க முரண்பாட்டுக் காரணி

பேரியம் சல்பேட்டு தொங்கல் கரைசலில் எக்சு-கதிர் மருத்துவப் படிமவியல் மற்றும் பிற கண்டறியும் நடைமுறைகளுக்கு ஒரு கதிரியக்க முரண்பாட்டுக் காரணி முகவராக மருத்துவ ரீதியாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் "பேரியம் உணவு" என்று அழைக்கப்படும் இச்சேர்மம் மனித இரையகக் குடற்பாதையின் படிமவியலில் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் மலக்குடலைக் கழுவும் கரைசலாக, ஒரு பால் போன்ற அடர்த்தியான கரைசலாக (பெரும்பாலும் இனிப்பு மற்றும் சுவையூட்டும் முகவர்கள் சேர்க்கப்பட்டு) கையாளப்படுகிறது. பேரியம் ஒரு கனமான உலோகமாக இருப்பினும் இதன் நீரில் கரையக்கூடிய சேர்மங்கள் பெரும்பாலும் அதிக நச்சுத்தன்மை கொண்டவையாகும். இருப்பினும், பேரியம் சல்பேட்டின் குறைந்த கரைதிறன் நோயாளியை உலோகத்தின் தீங்கு விளைவிக்கும் அளவை உறிஞ்சுவதிலிருந்து பாதுகாக்கிறது. பேரியம் சல்பேட் உடலில் இருந்து உடனடியாக அகற்றப்படுகிறது, ஒப்பீட்டளவில் பேரியத்தின் அதிக அணு எண் (Z = 56) காரணமாக, இதன் சேர்மங்கள் இலேசான அணுக்கருக்களிலிருந்து பெறப்பட்ட சேர்மங்களைக் காட்டிலும் எக்சு-கதிர்களை மிகவும் வலிமையாக உறிஞ்சுகின்றன.

நிறமி

தொகுப்புமுறை பேரியம் சல்பேட்டின் பெரும்பகுதி வண்ணப்பூச்சுகளுக்கு வெள்ளை நிறமியின் ஒரு பகுதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி

வணிக ரீதியாக பெறப்படும் பேரியம் அனைத்தும் பாரைட்டிலிருந்து பெறப்படுகின்றன, இது பெரும்பாலும் மிகவும் தூய்மையற்றது. பேரியம் சல்பைடு கொடுக்க கார்போவெப்பக் குறைப்பு ( கற்கரி மூலம் வெப்பப்படுத்துதல்) மூலம் பாரைட் செயலாக்கத்திற்குட்படுத்தப்படுகிறது:

BaSO4 + 4 C → BaS + 4 CO

பேரியம் சல்பேட்டுக்கு மாறாக, பேரியம் சல்பைடு தண்ணீரில் கரையக்கூடியது மற்றும் உடனடியாக ஆக்சைடு, கார்பனேட்டு மற்றும் ஆலைடுகளாக மாற்றப்படுகிறது. மிகவும் தூய்மையான பேரியம் சல்பேட்டை உற்பத்தி செய்ய, சல்பைடு அல்லது குளோரைடு சல்பூரிக் அமிலம் அல்லது சல்பேட் உப்புகளுடன் வினைப்படுத்தப்படுகிறது:

BaS + H 2 SO 4 → BaSO 4 + H 2 S.

இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் பேரியம் சல்பேட் பெரும்பாலும் பிளாங்க் ஃபிக்ஸே என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் பிரெஞ்சு மொழியில் "நிரந்தர வெண்மை" என்பதாகும். வண்ணப்பூச்சுகள் போன்ற நுகர்வோர் தயாரிப்புகளில் எதிர்கொள்ளும் பேரியத்தின் வடிவமே பிளாங்க் ஃபிக்ஸே ஆகும்.[5]

ஆய்வகத்தில் பேரியம் அயனிகள் மற்றும் சல்பேட் உப்புகளின் கரைசல்களை இணைப்பதன் மூலம் பேரியம் சல்பேட்டு உருவாக்கப்படுகிறது. பேரியம் சல்பேட்டு அதன் கரையாத தன்மையின் காரணமாக பேரியத்தின் மிகக் குறைந்த நச்சுத்தன்மை உடைய உப்பு என்பதால், பேரியம் உப்புகளைக் கொண்ட கழிவுகள் சில நேரங்களில் சோடியம் சல்பேட்டுடன் வினைபப்படுத்தப்படுகின்றன. பேரியம் சல்பேட்டு சல்பேட்டின் மிகவும் கரையாத உப்புகளில் ஒன்றாகும். அதன் குறைந்த கரைதிறன் Ba2+ அயனிகளுக்கும் சல்பேட்டிற்கும் கனிம பண்பறி பகுப்பாய்விற்னா ஒரு சோதனையில் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

பேரியம் சல்பேட்டு கார்பன் மூலம் பேரியம் சல்பைடாக குறைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மாற்றத்தின் தற்செயலான கண்டுபிடிப்பு முதல் செயற்கை பாஸ்பரின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.[4] சல்பைடு, சல்பேட்டைப் போலன்றி, நீரில் கரையக்கூடியது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேரியம்_சல்பேட்டு&oldid=3849578" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை