போர்ட் இந்தியா நிறுவனம்

ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ford India Private Limited) இந்தியாவில் போர்ட் தானுந்து நிறுவனத்திற்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் சீருந்து தயாரிப்பாளர்களில் ஆறாவதாக உள்ளது.

ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஅக்டோபர் 1995 ( மகிந்திரா போர்ட் இந்தியா லிமிடெடாக)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு
முதன்மை நபர்கள்மைக்கேல் போன்ஹம், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்
தொழில்துறைதானுந்து தொழில்துறை
உற்பத்திகள்தானுந்துகள்
பணியாளர்10,000
தாய் நிறுவனம்போர்ட் தானுந்து நிறுவனம்
இணையத்தளம்www.india.ford.com
ஃபோர்ட் ஐகான்

வரலாறு

1996ஆம் ஆண்டு புதிய ஃபோர்ட் இந்தியா பி.லிமிடெட்டின் உற்பத்தி துவங்கினாலும் இதன் ஆரம்பம் 1907ஆம் ஆண்டு போர்ட் மாடல் ஏ உடன் தொடங்கியது. தற்போதைய தொழிற்சாலை சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ளது. 1926ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சி 1954ஆம் ஆண்டு மூடப்பட்டது. மீண்டும் மகிந்தரா நிறுவனத்துடன் 50-50 இணைந்த முயற்சியாக மகிந்தரா போர்ட் இந்தியா லிமிடெட் (MFIL) என அக்டோபர் 1995 அன்று தொடங்கியது. போர்ட் தானுந்து நிறுவனம் தனது பங்கை 72% ஆக மார்ச் 1998இல் உயர்த்தி ஃபோர்ட் இந்தியா பி. லிட் என மறுபெயரிட்டது. [1]

நிறுவன ஆளுமை

ஃபோர்ட் இந்தியாவின் மேலாண்மையை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக மைக்கேல் போன்ஹம், செயல் இயக்குனர் (இயக்கம்) சந்தீப் சன்யால், செயல் இயக்குனர் (சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை) நிகெல் ஈ. வார்க், துணைத் தலைவர் (நிதி) மற்றும் முழுநேர இயக்குனராக குல்ஜித் ராணா, துணைத் தலைவர் (மனிதவளம்) வைரமணி பாண்டியன் ஆகியோர் நிர்வகிக்கின்றனர்.

தயாரிப்பு வசதிகள்

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மறைமலை நகரில் ஆண்டுக்கு 100,000 அலகுகள் தயாரிக்கக்கூடிய போர்ட் இந்தியாவின் முதன்மை தொழிற்சாலை அமைந்துள்ளது. மார்ச் 2010இல் இதன் புதிய இரக வண்டி போர்ட் ஃபிகோவை அறிமுகப்படுத்துகையில் [2] இந்தத் திறனளவை 200,000 அலகுகளாக இரட்டிப்பாக்க போர்ட் தானுந்து நிறுவனம் $500 மில்லியன் செலவழித்துள்ளது. இதனை ஆண்டுக்கு 250,000 அலகுகளாக உயர்த்த புதிய தொழிலக வசதிகளையும் அமைத்து வருகிறது. [3][4]

இரகங்கள்

தற்போது

  1. போர்ட் எண்டவர் ( 2004 அறிமுகமானது)
  2. பியெஸ்டா ( 2005 அறிமுகமானது)
  3. ஃபோர்ட் ஃபிகோ ( 2010 அறிமுகமானது)

நிறுத்தப்பட்டது

  1. ஃபோர்ட் ஐகான் (1999-2010)
  2. போர்ட் எஸ்கார்ட் (1996–2001)
  3. போர்ட் மொண்டியோ (2001–2006)
  4. போர்ட் இஃபூஷன் (2004–2010)

விற்பனை மற்றும் சேவை பிணையம்

ஏப்ரல் 2011 நிலவரப்படி, போர்டு இந்தியாவிற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மூன்று நடுவண் ஆட்சிப்பகுதிகளிலும் உள்ள 107 நகரங்களில் 170 முகமைகள் செயல்பட்டு வருகின்றன.

விற்பனை செயல்திறன்

2010 ஆண்டில், போர்ட் இந்தியா தனது 2009ஆம் ஆண்டின் விற்பனையான 29,488 சீருந்துகளுக்கெதிர் 83,887 சீருந்துகளை விற்று 172% வளர்ச்சியைக் கண்டுள்ளது.[5]

ஏற்றுமதி

போர்டின் இந்தியத் தொழிற்சாலையிலிருந்து குறைந்தளவு சீருந்துகள் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது. [6]

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை