தானுந்து

தானுந்து அல்லது சீருந்து இலங்கை வழக்கில் மகிழூந்து (Car/automobile) என்பது தன்னை இழுத்துச் செல்லும் உந்துப்பொறியை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் சக்கரமுள்ள இயக்கூர்தி ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும்.[1]

தானுந்து
கனடாவின் ஒன்றாரியோவில் உள்ள நெடுஞ்சாலை 401 என்ற பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் தானுந்துகள் மற்றும் சுமையுந்துகள் ஓட்டுகின்றன
வகைப்படுத்தல்வண்டி
தொழில்துறைபல்வேறு
பயன்பாடுபோக்குவரத்து
எரிம மூலம்பெட்ரோல், மின்சாரம், டீசல், இயற்கை எரிவளி, ஐதரசன், சூரிய ஆற்றல், தாவர எண்ணெய்
ஆற்றல் பொருத்தியஆம்
தானியக்கம்ஆம்
சக்கரங்கள்3–4
அச்சுகள்2
கண்டு பிடித்தவர்கார்ல் பென்ஸ்
கண்டு பிடித்த ஆண்டு1886

ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் குதிரைகளும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ கி.பி. 1890 ஆண்டு வாக்கில் எந்த விலங்கும் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டு பிடித்தனர். 1900 ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.

பயணியர் தானுந்துகள் - 2000
உலகளவில் பயணியர் தானுந்துகள் - 1000 பேருக்கான தானுந்துகளை குறிக்கும் வரைபடம்

உலகளவில் 600 மில்லியன் பயணியர் தானுந்துகள் இருப்பதாக (ஏறத்தாழ பதினோரு நபர்களுக்கு ஒரு தானுந்து) மதிப்பிடப்பட்டுள்ளன.[2][3] 2007ஆம் ஆண்டில் 806 மில்லியன் தானுந்துகளும் சிறு சரக்குந்துகளும் இருந்தன; இவற்றின் உந்துப்பொறிகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் க.மீ அளவிற்கும் கூடுதலான (260 பில்லியன் அமெரிக்க காலன்கள்) பெட்ரோல்/கல்நெய்யை எரித்ததாக மற்றொரு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் விரைவாக கூடி வருகின்றன.[4]

தானுந்துகளின் வரலாறு

சியாகுவார் (Jaguar) 1937

இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெருவளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்லது) பெட்ரோல் இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும், ஓட்டுனர் துணையில்லாமலும் என்று பற்பல கோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன.

1770 ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை பிரான்சு நாட்டு காப்டன் நிக்கொலாசு சோசப்பு க்யூனொ (Nicolas Joseph Cugnot) என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு கட்டைவண்டியிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்கூடியதாகவும், 10-15 மணித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது.இதனை படத்தில் காணலாம்.

முதல் நீராவி தானுந்துCugnot

பேரளவு உற்பத்தி

ரன்சொம் ஈ. ஓல்டுசு
ஹென்றி ஃபோர்ட் (1919)
ஃபோர்டு வடிவம் ட்டி, 1927, வாங்கத்தகு முதல் தானுந்தாக அமெரிக்காவில் மதிக்கப்பட்டது

வாங்கத்தகு தானுந்துகளை பெரிய அளவில் தயாரிப்பதைத் தொடக்கியவர், ரன்சொம் ஓல்டுசு ஆவார். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தனது ஓல்ட்ஸ் மொபைல் தொழிற்சாலையின் தொகுப்புவரிசைப் பகுதியில் செயல்படுத்தினார். ஐக்கிய அமெரிக்காவில் தாமஸ் பிளன்சர்ட் என்பவர் 1811 ஆம் ஆண்டு, தானுந்துகளின் பெருமளவு உற்பத்தியைத் துவக்கினார்.[5] இந்தக் கோட்பாட்டினை சிறந்த முறையில் 1914 ஆண்டு விரிவுபடுத்தியவர், ஹென்றி ஃபோர்ட் ஆவார்.

எடை

ஒரு தானுந்தின் எடை எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்திறனில் செல்வாக்கு செலுத்துகிறது. அதிக எடை எரிபொருள் நுகர்வினை அதிகரிப்பதுடன் செயல்திறனை குறைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜூலியன் ஆல்வூட் நடத்திய ஒரு ஆய்வு உலக ஆற்றல் பயன்பாட்டை பெரிதும் பளுவற்ற தானுந்துகளை பயன்படுத்தி குறைக்கலாம் என்கிறது, இவ்வகையில் 500 கிலோ சராசரி எடை அடையக்கூடியதாக கூறப்படுகிறது.[6]

ஷெல் எகோ மராத்தான் போன்ற சில போட்டிகளில், 45 கிலோ சராசரி தானுந்து எடை கூட அடையப்பெற்றிருக்கின்றன.[7] இந்த தானுந்துகள் ஒர் இருக்கை கொண்டவை (பொதுவாக நான்கு இருக்கை தானுந்துகள் இருந்தாலும் இவையும் தானுந்து என்ற வரையரையுள் அடங்கும்) இருப்பினும் இது தானுந்து எடையை பெரிய அளவில் இன்னும் குறைக்கலாம் என்பதையும் மற்றும் அதனை தொடர்ந்த குறைந்த எரிபொருள் பயன்பாட்டையும் (அதாவது 2560 km/l எரிபொருள் பாவனையை) காட்டுகிறது.[8]

இருக்கை அமைப்பும் உருவ வடிவமைப்பும்

பெரும்பாலான தானுந்துகள் நான்கு அல்லது ஐந்து இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சில பெரிய தானுந்து வகைகளில் ஆறு அல்லது ஏழு பேர் பயணிக்கத்தக்கதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பயன்படுத்தப்படும் தானுந்துகள் பெரும்பாலும் இரண்டு இருக்கைகளை உடையன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பொதிகளைக் கொண்டு செல்லும் வசதி என்பவற்றின் தேவைகளுக்கேற்ப தானுந்துகளின் அமைப்புகள் பலவகைப்படுகின்றன.

எரிபொருள் மற்றும் உந்துகை தொழினுட்பம்

The Nissan Leaf is an all-electric car launched in December 2010

தற்காலத்திலுள்ள பெரும்பாலா தானுந்துகள் உள்ளெரி எந்திரங்களில் பெட்ரோல் அல்லது டீசலை எரிவிப்பதன் மூலம் உந்தப்படுகின்றன. அவ்விரண்டு எரிபொருட்களும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அவை பருவநிலை மாற்றம் மற்றும் புவி சூடாதல் ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன.[9] வெகு வேகமாக ஏறிவரும் எரிபொருள் விலைகள், மரபு எரிபொருட்களை சார்ந்திருத்தலால் ஏற்பட்டுள்ள கவலை, வலுவான சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும்பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்திலுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக தானுந்துகளுக்கு மரபுசாரா எரிபொருட்கள் மூலம் மாற்று திறன் வழிமுறைகளில் இயக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முயற்சிகள் (எ-கா; கலப்பு வாகனம், உட்செருகு மின் வாகனம், ஐதரசன் வாகனங்கள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தனால் பயன்படுத்தும் இணக்கமுறு-எரிபொருள் வாகனங்கள்]] மற்றும் இயற்கை வாயு வாகனங்கள் உட்பட மாற்று எரிபொருள் வாகனங்களும் மக்களின் பயன்பாட்டில் அதிகரித்து வருகின்றன.

பாதுகாப்பு

சாலை போக்குவரத்து காயங்கள், உலகளாவிய காயம் தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டப் போதிலும், தானுந்துகளின் பிரபலம் இந்த புள்ளிவிவரகளையெல்லாம் குறைத்து மதிப்பிடுகிறது.

1869 இல் பார்சன்சுடவுன், அயர்லாந்தில் தானுந்து இறந்தவராக மேரி வார்டு முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்டார்.

செலவுத்தொகையும் பயன்பாடுகளும்

தானுந்துகளின் பயன்பாட்டின் விலையானது தானுந்தை வாங்குவது, கோளாறு ஏற்படும்போது சீர்செய்தல், பராமரிப்பு, எரிபொருள், மதிப்பிழப்பு, விபத்துகள் ஏற்படுதல், ஒட்டுதல் நேரம், வாகனங்கள் நிறுத்துவதற்கான செலவு, மற்றும் பல செலவுகள் ஆகியவற்றை ஒன்றுகூட்டி மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் பயன்பாட்டின் ஆதாயங்கள் தேவைப்படும்போது பயணத்திற்கான வாகன ஏற்பாடு, எங்கும் எளிதில் செல்லுதல், தற்சார்பு மற்றும் வசதி ஆகியவற்றைச் சொல்லலாம்.

தானுந்துகளின் பயன்பாட்டால் சமூகத்திற்கு ஏற்படும் செலவீனங்கள் என எடுத்துக்கொண்டால் சாலைகளின் பராமரிப்பு, இடங்களின் பயன்பாடு, சூழல் மாசுபாடு, பொதுமக்கள் நலன் குறைபாடு, சுகாதார பராமரிப்பு, தானுந்துகளின் பயன்பாட்டுக் காலம் முடியும்போது அவற்றை அப்புறப்படுத்துதல் ஆகியவற்றை குறிப்பிடலாம். சமூகத்திற்கு ஏற்படும் ஆதாயங்களும் மிக அதிகம். அவற்றுள் சில: பொருளியல் ஆதாயங்கள், எ-கா: தானுந்துகளை தயாரித்தல் மற்றும் பராமரிப்புகளால் வேலைகள் ஏற்படுதல், செல்வம் உருவாதல், போக்குவரத்து பயன்பாடு, ஓய்வுக்கால பயன்பாடு மற்றும் பயணங்களுக்கான பயன்பாடு, வரிகளால் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கூறலாம். ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்குச் செல்வதென்பது ஒரு சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

நடுநிலை மதிப்பீடு

தொழில்மயமான நாடுகளில் தானுந்துகளே பெருமளவிலான காற்று மாசுபாட்டுக்கு காரணமாகின்றன. வழமையான பயணிகள் தானுந்துகள் பெருமளவிலான பசுமை இல்ல வாயுக்கள் (முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடு), சிறிய அளவில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் சில ஹைட்ரோகார்பன்களை வெளிவிடுகின்றன.

தானுந்துகளின் பயன்பாட்டால், பல விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் வாழ்விடம் அழிதல் மற்றும் காற்று மாசுபாட்டால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. மேலும் பல விலங்குகள் சாலை விபத்துகளில் இறக்கின்றன.

வாகனங்கள் மற்றும் அவற்றின் மூலம் பல இடங்களுக்கு சென்று வருவது ஆகிய வகைகளில் வாகனப் பயன்பாடு அதிகரித்து அதனால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

மரபுசார் எரிபொருட்களின் பயன்பாடு இருபது மற்றும் இருபத்தோறாம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கு தானுந்துகளின் பயன்பாடு அதிகரித்தது ஒரு முக்கியமான காரணமாகும்.

ஓட்டுனரல்லாத உந்துகள்

முழுவதும் தானியங்கு உந்துகள், அல்லது ஓட்டுநரல்லாத உந்துகள், தற்போது முன்மாதிரி வடிவங்களில் இருக்கின்றன. 2020-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வகை உந்துகள் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் ஏ. அர்த் எனும் வடிவமைப்பாளர் மற்றும் எதிர்கால நோக்காளியின் கூற்றுப்படி, இவ்வகை உந்துகள் ஒரு சில பதிகங்களில் தற்போதிருக்கும் தானுந்துகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துவிடும்.

எதிர்கால தொழில்நுட்பங்கள்

பெட்ரோல்/மின்சார கலப்பு வாகனங்கள், உட்செலுத்து கலப்புகள், மின்கல மின்சார வாகனங்கள், ஐதரசன் தானுந்துகள், மாற்று எரிபொருட்கள் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆகியன தற்காலத்தில் விரிவான ஆராய்ச்சிகள் தானுந்து உந்த தொழில்நுட்பத்துறையில் செய்யப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் தானுந்துக்கான இயங்கு ஆற்றலைத் தரக்கூடிய பல்வேறு வழிமுறைகளும் ஆராயப்பட்டுவருகின்றன.

டியூராலுமினியம், கண்ணாடி இழை, கார்பன் இழை, கார்பன் மீநுண் குழாய் போன்று பலவித பொருட்கள் தானுந்துகளைத் தயாரித்தலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்ற எஃகி-ற்குப் பதிலாக பயன்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திறவூற்று மேம்பாடு

திறவூற்று வடிவமைப்பு அடிப்படையில் தானுந்துகளைத் தயாரிப்பதற்கென பல செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை OSCar மற்றும் Riversimple ஆகியவையாகும். ஆனாலும் இதுவரை எதுவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை, அவற்றுக்கான மென்பொருட்களாகட்டும் வன்பொருட்களாகட்டும் எதுவும் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டவில்லை.

தானுந்துகளுக்கு மாற்று

பொதுப் பயன்பாட்டு போக்குவரத்து வகைகளான பேருந்து, தொடர்வண்டிகள், மெட்ரோ ரயில்கள் போன்றவையும் மிதிவண்டிப் பயன்பாடு மற்றும் நடைபயணம் ஆகியவையும் தானுந்துப் பயன்பாட்டுக்கு மாற்றாக உள்ளன. சில நகரங்களில் தானுந்துப் பகிர்வுத் திட்டங்களும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பொது மிதிவண்டிப் பகிர்வுகளும் கோபன்காகென் மற்றும் ஆம்சடெர்டாம் போன்ற நகரங்களில் செயல்பாட்டில் உள்ளன.

தொழில் துறை

தானுந்துகளின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவை தானுந்துத் தொழிற்துறையின் பணிகளாகும். 2008-ஆம் ஆண்டில் 70 மில்லியனுக்கும் மேலான தானுந்துகள் உலக அளவில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.[10] உலக அளவில் உயர்ந்துவரும் எண்ணெய் விலையும், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்திசெய்வதில் பொதுப் போக்குவரத்து முறைகளின் வளர்ச்சியும் சற்று மந்தமான சூழலை உருவாக்கியுள்ளது.[11] உலகப் பொருளாதார மந்தநிலையின் காரணத்தால் அமெரிக்காவின் தானுந்துத் தொழிற்சாலைகளில் 50% வரை அடுத்த பத்தாண்டுகளில் மூடப்படலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.[12] சீனாவின் அபரிமிதமான வளர்ச்சியால், தானுந்து தயாரிப்பதிலும் அதற்கான சந்தை என்ற வகையிலும் 2009-ஆம் ஆண்டுப்படி சீனா முந்நிலை வகிக்கிறது. 2000-ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் தானுந்துகளை உள்நாட்டில் விற்ற சீனா, 2009-இல் 13.6 மில்லியன் தானுந்துகளை விற்றிருக்கிறது.[13]

பழைய தானுந்துகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தானுந்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தானுந்து&oldid=3909178" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை