போர்ட் தானுந்து நிறுவனம்

ஃபோர்ட் மோட்டார் கம்பனி (Ford Motor Company, நியாபசF) ஐக்கிய அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் நகரின் புறநகர் டியர்போர்ன் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு தானுந்து தயாரிப்பு நிறுவனமாகும். 1903ஆம் ஆண்டு சூன் 16 அன்று ஹென்றி ஃபோர்டால் நிறுவப்பட்டது. தான் தயாரிக்கும் ஃபோர்ட், லிங்கன் வகைகளைத் தவிர யப்பானில் உள்ள மாசுடாவிலும் பிரித்தானிய ஆசுடன் மார்ட்டின் வகை தானுந்துகளிலும் சிறு பங்கு கொண்டுள்ளது. ஃபோர்டின் முன்னாள் பிரித்தானிய நிறுவனங்களான சியாகுவர் சீருந்துகளும் லாண்ட் ரோவரும் மார்ச் 2008ஆம் ஆண்டில் இந்தியாவின் டாட்டா மோட்டார்சுக்கு விற்கப்பட்டன. 2010ஆம் ஆண்டில் தனது வோல்வோ சீருந்துகள் நிறுவனத்தை கீலி தானுந்துகள் நிறுவனத்திற்கு விற்றது. [2] 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தனது மெர்க்குரி இரக தானுந்துகளை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஃபோர்ட் மோட்டார் கம்பனி
Ford Motor Company
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைசூன் 16, 1903
நிறுவனர்(கள்)ஹென்றி ஃபோர்ட்
தலைமையகம்டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்வில்லியம் கிளே ்போர்ட் (இளையவர்)
(செயல் தலைவர்)
ஆலன் முலாலி
(முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைதானுந்து தொழில்துறை
உற்பத்திகள்தானுந்து
தானுந்து உதிரிப்பாகங்கள்
சேவைகள்தானுந்து நிதியம்
ஊர்தி வாடகை
சேவைகள்
வருமானம் ஐஅ$128.954 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம் ஐஅ$7.149 பில்லியன் (2010)[1]
நிகர வருமானம் ஐஅ$6.561 பில்லியன் (2010)[1]
மொத்தச் சொத்துகள் ஐஅ$165.693 பில்லியன் (2010)[1]
மொத்த பங்குத்தொகை ஐஅ$-642 மில்லியன் (2010)[1]
பணியாளர்164,000 (2010)[1]
பிரிவுகள்ஃபோர்ட்
லிங்கன்
துணை நிறுவனங்கள்ஆட்டோமோடிவ் காம்போனென்ட்சு ஓல்டிங்கசு
ஃபோர்ட் மோட்டார் கிரெடிட் கம்பனி
டிரோல்லர் வெகுலோசு இசுபெசல்சு
்போர்ட் ஐரோப்பா
்போர்ட் டோ பிராசில்
இணையத்தளம்Ford.com

சீருந்துகளை பெருமளவில் தயாரிப்பதற்காகவும் பெருந்தொகையான தொழிலாளர்களின் மேலாண்மை சீர்மைக்காகவும் ஹென்றி ஃபோர்ட் ஒன்றன்பின் ஒன்றான நகரும் இணைப்பு வரிசைகளை விவரமான பொறியியல் அறிவுடன் வடிவமைத்து ஓர் புதுமையான தயாரிப்பு முறைமையை அறிமுகப்படுத்தினார். இது 1914ஆம் ஆண்டுகளில் தயாரிப்பு முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உலகளவில் ஃபோர்டிசம் என்று அழைக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு விற்பனைகளைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஃபோர்ட் இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளவில் ஐந்தாவதாகவும் விளங்குகிறது.[3] 2010 இறுதியில் ஐரோப்பாவின் ஐந்தாவது தயாரிப்பாளராகவும் உள்ளது. [4] 2010 பார்ட்சூன் 500 பட்டியலில், தனது 2009ஆம் ஆண்டு உலகளவு விற்பனை வருமானமான $118.3 பில்லியன் மூலம், எட்டாவது அமெரிக்க நிறுவனமாகவும் விளங்குகிறது.[5] 2008ஆம் ஆண்டில் ஃபோர்ட் உலகளவில் 5.532 மில்லியன் தானுந்துகளை[6] தனது 90 தொழிற்சாலைகளில் 213,000 பணியாளர்களைக் கொண்டு தயாரித்துள்ளது. 2008-2010 ஆண்டுகளில் ஏற்பட்ட தானுந்துத் தொழில் பின்னடைவின்போது 2009ஆம் ஆண்டு உலகளவில் இதன் உற்பத்தி 4.817 மில்லியனாகக் குறைந்தது. 2010ஆம் ஆண்டு நிகர இலாபம் $6.6 பில்லியனாகவும் கடன்தொகை $33.6 பில்லியனிலிருந்து குறைந்து $14.5 பில்லியனாகவும் இருந்தது. [7][8] 2007ஆம் ஆண்டு முதல் ஜே. டி. பவர் அண்ட் அசோசியேட்சு வழங்கும் தரக் கணிப்பு விருதுகளில் பிற தானுந்து தயாரிப்பாளர்களை விடக் கூடுதலாகப் பெற்று வருகிறது. அவர்களது பல்வகை இரக சீருந்து தரக் கணிப்புகளில் ஐந்து ஃபோர்ட் இரகங்கள் முதலிடத்திலும் [9] மற்றும் பதினான்கு முதல் மூன்று இடங்களுக்குள்ளும் உள்ளன.[10]

மேற்கோள்கள்

உசாத்துணைகளும் மேற்படிப்புக்காகவும்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ford
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை