மக்களவை (மலேசியா)

மலேசிய பாராளுமன்றத்தின் கீழவை

டேவான் ராக்யாட் (மலாய்: Dewan Rakyat, House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் என்றால் அவை. ராக்யாட் என்றால் மக்கள். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் இங்குதான் விவாதிக்கப்பட்டு, இயற்றப்படுகின்றன.

மக்களவை
டேவான் ராக்யாட்
Dewan Rakyat
House of Representatives
13-ஆவது நாடாளுமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
தலைமை
நாடாளுமன்ற சபாநாயகர்
பண்டிக்கார் அமின் மூலியா, பாரிசான் நேசனல்அம்னோ
5 மே 2013 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்222 உறுப்பினர்கள்
அரசியல் குழுக்கள்
(6 மே 2013)
  மலேசிய சோசலிச கட்சி (0)
  சுயேட்சைகள் (0)
தேர்தல்கள்
அண்மைய பொதுத் தேர்தல்
மலேசியப் பொதுத் தேர்தல், 2018
கூடும் இடம்
மலேசிய நாடாளுமன்றம், கோலாலம்பூர், மலேசியா
வலைத்தளம்
www.parlimen.gov.my

அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் சம்மதத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்களாகின்றன. நாடாளுமன்ற மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.

டேவான் ராக்யாட்டின் உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அமைப்பு

மலேசிய நாடாளுமன்றம் என்பது மலேசியாவின் ஆக உயர்ந்த சட்டப் பேரவையாகும். சட்டங்களை இயற்றுவதும், சட்டங்களை மாற்றித் திருத்தி அமைப்பதும் அதன் தலையாய பண்பு நலன்களாகும். மலேசிய அரசர் நாட்டுத் தலைவராக இருந்தாலும், அவருக்குச் சார் நிலையான தகுதியில், மலேசிய அரசியலமைப்பின் 39வது விதிகளின்படி மலேசிய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.[1]

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும், அவருக்கு நாடாளுமன்ற சட்ட விலக்களிப்பு (ஆங்கில மொழி: Parliamentary immunity) அதாவது நாடாளுமன்ற தடைக்காப்பு வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தன் கருத்துகளைச் சொல்வதில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இனத் துவேச, அரசுப் பகையை மூட்டிவிடும் விசயங்களைப் பற்றி பேசுவதில் அல்லது எழுதுவதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.

13 மே இனக்கலவரம், பூமிபுத்ராகளின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை. தவிர, மலேசியப் பேரரசரையும், நீதிபதிகளையும் குறை சொல்வதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்படுகின்றனர்.[2]

ஒரு சட்டம் எப்படி இயற்றப்படுகிறது

மலேசிய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா எப்படி சட்டம் ஆக்கப்படுகிறது. அதன் பின்னணி:

  • ஓர் அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர் ஒரு மசோதாவிற்கான வரைவோலையைத் (ஆங்கில மொழி: Draft) தயார் செய்கிறார். வரைவோலை தயார் செய்வதில் மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் உதவி செய்கிறார்.
  • அந்த வரைவோலையைப் பற்றி மலேசிய அமைச்சரவை முதலில் விவாதிக்கிறது.
  • அமைச்சரவை சம்மதம் தெரிவித்ததும், வரைவோலை எனப்படுவது ஒரு மசோதா எனும் தகுதியைப் பெறுகிறது.
  • அந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நகல் மசோதா விநியோகிக்கப்படுகிறது.
  • டேவான் ராக்யாட்டில் மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெறுகிறது. முதல் கட்டமாக அமைச்சர் அல்லது ஒரு துணையமைச்சர், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது.
  • இரண்டாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
  • மூன்றாவது கட்டமாக, அந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறுவதற்காக, அவர்களின் வாக்களிப்பிற்குச் செல்கின்றது. மசோதா நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை தேவை. சில சமயங்களில் ஓர் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் போதும்.
  • அந்த மசோதாவிற்கு பெரும்பான்மை கிடைத்ததும், டேவான் நெகாரா (மலாய்: Dewan Negara) எனும் மேலவைக்கு அனுப்பப்படுகிறது. டேவான் ராக்யாட்டில் எப்படி மூன்று கட்டங்களில் அந்த மசோதாவின் வாசிப்பு நடைபெற்றதோ, அதே போல இங்கேயும் மூன்று கட்டங்களில் வாசிப்பு நடைபெறும்.
  • அந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் இருந்து டேவான் நெகாரா தடைவிதிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிக்காமல் போகலாம். ஆனால், அது காலதாமதத்தை தான் ஏற்படுத்தும். ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு காலதாமதம் செய்யலாம். அதற்குப் பின்னர், டேவான் நெகாராவின் சம்மதம் இல்லாமலேயே, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
  • அந்த மசோதா மலேசிய பேரரசரின் பார்வைக்கும், சம்மதத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 30 நாள்கள் கால அனுமதி வழங்கப்படுகிறது.
  • பேரரசர் சம்மதிக்கவில்லை என்றால் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர் அந்த மசோதாவை மறுபடியும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி விடுவார்.
  • அடுத்து வரும் 30 நாள்களுக்குள், நாடாளுமன்றம் அந்த மசோதாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து, மறுபடியும் பேரரசரின் சம்மதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • இதன் பின்னர் 30 நாள்களுக்குள் பேரரசர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அவர் சம்மதிக்கிறாரோ இல்லையோ அதன் பிறகு அந்த மசோதாவை ஒரு சட்டமாக ஆக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
  • அரசாணையில் (ஆங்கில மொழி: Government Gazette) இடம்பெறும் வரையில் அந்த மசோதா ஒரு சட்டமாகக் கருதப்பட மாட்டாது. அல்லது ஒரு சட்டமாகச் செயல்படவும் முடியாது.

நாடாளுமன்றச் சபாநாயகர்

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கான குறைந்த வயது 21. நாடாளுமன்றத்தின் தலைவரை சபாநாயகர் என்று அழைக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். அவரைத் தவிர இரு துணைச் சபாநாயகர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

டேவான் ராக்யாட்டின் அன்றாட அலுவல்களைக் கவனித்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அலுவலகம் இருக்கிறது. இதன் தலைவரை பேரரசர் நியமனம் செய்கிறார். அவரைப் பதவியில் இருந்து பேரரசர் அல்லது நீதிபதிகள் மட்டுமே நீக்க முடியும்.

தேர்தல் முடிவுகள் 2013

[உரை] – [தொகு]
மலேசியாவில் 2013 மே 5 இல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கட்சி (கூட்டணி)வாக்குகள்வாக்கு %இடங்கள்வாக்கு %+/–
தேசிய முன்னணிBN5,237,69947.3813359.91 7*
அம்னோUMNO3,252,48429.428839.64 9
மலேசிய சீனர் சங்கம்MCA867,8517.8573.15 8
மலேசிய இந்திய காங்கிரசுMIC286,6292.5941.80 1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சிPBB232,3902.10146.31
மலேசிய மக்கள் இயக்கக் கட்சிGerakan191,0191.7310.45 1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சிSUPP133,6031.2110.45 5
ஐக்கிய சபா கட்சிPBS74,9590.6841.80 1
சரவாக் மக்கள் கட்சிPRS59,5400.5462.70
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சிSPDP55,5050.5041.80
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்புUPKO53,5840.4831.35 1
Liberal Democratic PartyLDP13,1380.1200.00 1
ஐக்கிய சபா மக்கள் கட்சிPBRS9,4670.0910.45
மக்கள் முற்போக்குக் கட்சிPPP7,5300.0700.00
மக்கள் கூட்டணிPR5,623,98450.878940.09 7
மக்கள் நீதிக் கட்சிPKR2,254,32820.393013.51 1
ஜனநாயக செயல் கட்சிDAP1,736,26715.713817.12 10
மலேசிய இஸ்லாமிய கட்சிPAS1,633,38914.78219.46 2
மாநில சீர்திருத்தக் கட்சிSTAR45,3860.4100.00
அகில மலேசிய இஸ்லாமிய முன்னணிBerjasa31,8350.2900.00
சரவாக் தொழிலாளர் கட்சிSWP15,6300.1400.00
சபா முற்போக்கு கட்சி[a]SAPP10,0990.0900.00 2
Love Malaysia PartyPCM2,1290.0200.00
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சிKITA6230.0100.00
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிபெர்சமா2570.0000.00
சுயேட்சைகள்IND86,9350.7900.00
செல்லுபடியான வாக்குகள்11,054,577
பழுதடைந்த வாக்குகள்|202,570
மொத்த வாக்குகள் (84.84%)11,257,147100.0222100.0
வாக்களிக்காதோர்2,010,855
பதிவு செய்த வாக்காளர்கள்13,268,002
சாதாரண வாக்காளர்கள்12,885,434
தொடக்க வாக்காளர்கள்235,826
அஞ்சல் வாக்குகள்146,742
வாக்கு வயது (21 இற்கும் மேற்பட்டோர்)17,883,697
மலேசிய மக்கள் தொகை29,628,392

மூலம்: Election Commission of Malaysia
மூலம்: Nohlen et al. [1]

சான்றுகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மக்களவை_(மலேசியா)&oldid=3905195" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை