மத்தேயோ ரீச்சி

மத்தேயோ ரீச்சி, சே.ச (இத்தாலிய ஒலிப்பு: [matˈtɛo ˈrittʃi]; அக்டோபர் 6, 1552 – மே 11, 1610; எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: பின்யின்: dòu; மரியாதைப் பெயர்: 西 tài) என்பவர் இத்தாலிய இயேசு சபை குருவும், சீன இயேசு சபை மறைப்பணியைத்துவங்கிய தந்தையர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் ஆவார். இவருக்கு இப்போது இறை ஊழியர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

இறை ஊழியர்
மத்தேயோ ரீச்சி
பதவிசீன மறைப்பணியின் இயேசு சபை தலைவர்
சுய தரவுகள்
பிறப்பு(1552-10-06)6 அக்டோபர் 1552
மசேரடா, திருத்தந்தை நாடுகள்
இறப்பு11 மே 1610(1610-05-11) (அகவை 57)
நினைவிடம்சஹால்ன் கல்லரை
சமயம்கத்தோலிக்க திருச்சபை
குறிப்பிடத்தக்க ஆக்கம்முதல் சீன நிலப்படம்
துறவற சபைஇயேசு சபை
பதவிகள்
பதவிக்காலம்1597-1610
பின் வந்தவர்நிக்கோலோ லான்கோபார்தோ

வாழ்க்கை சுறுக்கம்

மத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். உரோமையில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் லிஸ்பன் நகரில் பயனத்தை துவங்கி கோவாவை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.

ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் மக்காவு வந்தடைந்தார்.[1] சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார்.[2] பெய்ஜிங்கில் உள்ள அமல உற்பவ அன்னை பேராலயத்தை கட்டியவர் இவரே. இவ்வாலயமே இன்நகரின் மிகப்பழைய கிறித்தவ ஆலயமாகும்.[3] இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே.[4]

சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.[5] கன்பூசிய படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.[6]

தனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை மக்காவுவிலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக பேரரண் நகரத்துக்குள் அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார்.[7] இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Matteo Ricci
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மத்தேயோ_ரீச்சி&oldid=3590712" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை