மயிலாடுதுறை மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.

மயிலாடுதுறை மாவட்டம் (Mayiladuthurai district) என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.[1][2][3][4][5]

மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
நாடு India
மாநிலம் தமிழ்நாடு
நிலப்பரப்புசோழ நாடு
தோற்றுவித்தவர்எடப்பாடி க. பழனிசாமி
வட்டங்கள்குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி
அரசு
 • மாவட்ட ஆட்சியர்மகாபாரதி, இ.ஆ.ப.
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்மீனா, இ.கா.ப.
பரப்பளவு
 • மொத்தம்1,172 km2 (453 sq mi)
பரப்பளவு தரவரிசை38
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்9,17,000
 • தரவரிசை34
 • அடர்த்தி782/km2 (2,030/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN609 001
வாகனப் பதிவுTN 82
இணையதளம்https://mayiladuthurai.nic.in

இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.[6]

இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளனர்.[7][8]

மயிலாடுதுறை மாவட்டம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக 28 டிசம்பர் 2020 அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி என இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி என நான்கு வருவாய் வட்டங்கள், 15 குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களைக் கொண்டிருக்கும்.[9][10]

மாவட்ட எல்லைகள்

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 2 வருவாய்க் கோட்டங்களையும், 4 வருவாய் வட்டங்களையும், 15 குறுவட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[11]

வருவாய் கோட்டங்கள்

வருவாய் வட்டங்கள்

  1. மயிலாடுதுறை வட்டம்
  2. சீர்காழி வட்டம்
  3. குத்தாலம் வட்டம்
  4. தரங்கம்பாடி வட்டம்

உள்ளாட்சி & ஊரக வளர்ச்சி அமைப்புகள்

நகராட்சிகள்

  1. மயிலாடுதுறை
  2. சீர்காழி

பேரூராட்சிகள்

  1. குத்தாலம்
  2. தரங்கம்பாடி
  3. மணல்மேடு
  4. வைத்தீசுவரன்கோவில்

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
  2. சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
  3. குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
  4. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
  5. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஎஸ். இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)பி. வி. பாரதி
மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)வி. இராதாகிருஷ்ணன்
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)எஸ். பவுன்ராஜ்

வழிபாடு & சுற்றுலா இடங்கள்

தொழில் நிலவரம்

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.ஆண்டு தோறும் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தும் மாவட்ட அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது

பிரபலங்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை