நாகப்பட்டினம் மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
நாகப்பட்டினம்
மாவட்டம்

நாகப்பட்டினம் கடற்கரை

நாகப்பட்டினம் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு India
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம்நாகப்பட்டினம்
பகுதிமத்திய மாவட்டம்
ஆட்சியர்
மருத்துவர். அ. அருண்
தம்புராஜ், இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

-
நகராட்சிகள்2
வருவாய் கோட்டங்கள்2
வட்டங்கள்4
பேரூராட்சிகள்8
ஊராட்சி ஒன்றியங்கள்11
ஊராட்சிகள்434
வருவாய் கிராமங்கள்523
சட்டமன்றத் தொகுதிகள்6
மக்களவைத் தொகுதிகள்2
பரப்பளவு1940.00 ச.கி.மீ.
மக்கள் தொகை
16,16,450 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
611 xxx
தொலைபேசிக்
குறியீடு

043645, 04364
வாகனப் பதிவு
TN-51
பாலின விகிதம்
1025 /
கல்வியறிவு
83.59%
இணையதளம்nagapattinam பரணிடப்பட்டது 2021-06-22 at the வந்தவழி இயந்திரம்

நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாகப்பட்டினம் ஆகும். இது தமிழத்தின், கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.

மாவட்டப் பிரிப்பு

1991 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. 24 மார்ச் 2020 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த மயிலாடுதுறை வட்டம், சீர்காழி வட்டம், குத்தாலம் வட்டம் மற்றும் தரங்கம்பாடி வட்டம் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3][4][5]

வரலாறு

நாகப்பட்டினம் பண்டைய காலம்முதல் துறைமுக நகரமாகவே இருந்தது.[6] வடநாட்டினர் தமிழரை 'நாகர்' என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று'. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது. 'பதறிதிட்டு' என்னும் பகுதியில் முன்பு புத்தவிகாரை இருந்துள்ளது. இவ்விகாரை கி.மு. 265-270 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பெற்றிருக்கலாம். அசோகர் கல்வெட்டு சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் புத்த பள்ளிகளை எழுப்பியதைக் கூறுகிறது. சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் எழுப்பித்த புத்தப்பள்ளியை நாகப்பட்டினத்தில் தான் கண்டதாகக் குறித்துள்ளார். புத்த விகாரங்களின் வெளிப்பகுதியில் சீன நாட்டு முறையில் கோபுரங்கள் இருந்துள்ளன. நரசிம்மவர்மன் காலத்தில் 'புதுவெளிகோபுரம்' ஒன்றை கட்டியுள்ளார்.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயம் மன்னர் சூளாமணிவர்மன் நாகையில் 'சூளாமணி விகாரை'யை அமைத்தான். இந்த பெளத்தபள்ளிக்கு இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை பள்ளிச்சந்தமாக தானமாக அளித்துள்ளனர். இதைப்பற்றிய செப்பேடு ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டனில் இன்றும் உள்ளது. நரசிம்மவர்மன் எழுப்பிய 'புதுவெளிகோபுரம்' 1882 வரை இருந்துள்ளது. பின்னர் கிருத்துவ குருமார்கள் ஆங்கில அரசிற்கு எழுதி இதை இடித்து விட்டனர். இதன் அடியில் கண்டெடுக்கப்பட்ட 5 புத்தர் சிலைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது.

நாகப்பட்டினத்தை அடுத்த' 'பரவை' என்ற கடற்துறை சார்ந்த ஊரில் 'நீர்ச்சுழல்' அடிக்கடி ஏற்பட்டு பல கலங்கள் மூழ்கியதற்கான அகச்சான்றுகள் பல கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் 'சோழகுல வல்லிபட்டினம்' என்ற பெயரைப் பெற்றிருந்தது. வணிகத் துறைமுகபட்டினமாகவே இருந்து வந்துள்ளது.[7] கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயு வெளிப்பட்டுள்ளது. அக்கால மக்கள் இயற்கைவாயு வெளிப்பட்ட கிணற்றை 'புகையுண்ணிக்கிணறு' என்று அழைத்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்ச்சக்கீசியருக்குத் தாரை வார்த்தனர். கி.பி. 1500 முதல் 1658 வரை ஆண்டனர். அக்காலத்தில் போர்ச்சுக்கீசியர் பல மீனவர்களைக் கொன்றனர். நாகூரில் இருந்த அரங்கநாதர் கோயிலை இடித்தனர். போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் இப்பகுதியை 1658 முதல் 1824 வரை ஆண்டனர். தஞ்சை மராட்டிய மன்னர் ஏக்கோஜியுடன் உடன் படிக்கை செய்து கொண்டு குத்தகையாக நாகையை எடுத்தனர். இவர்களுக்குப் பின் நாகை ஆங்கிலேயர் கைக்கு வந்தது. இந்திய விடுதலைக்குப்பின்னர், தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள்தொகை பரம்பல்

2,569 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,616,450 ஆகும். அதில் ஆண்கள் 798,127 ஆகவும்; பெண்கள் 818,323 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.57% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 629 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 83.59% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 165,245 ஆகவுள்ளனர்.[8]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 1,435,072 (88.78%), கிறித்தவர்கள் 47,579 (2.94 %), இசுலாமியர் 128,617 (7.96%) ஆகவும் உள்ளனர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டத்தில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டமும், இரண்டு வருவாய் வட்டங்களும் உள்ளது.[9]

வருவாய்க் கோட்டம்

வட்டங்கள் (தாலுக்காக்கள்)

நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[10]

உள்ளாட்சித் துறை

இம்மாவட்டம் இரண்டு நகராட்சிகளையும், நான்கு பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[11]

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

  1. திட்டச்சேரி
  2. வேளாங்கண்ணி
  3. கீழ்வேளூர்
  4. தலைஞாயிறு

ஊராட்சித் துறை

இம்மாவட்டம் 6 ஊராட்சி ஒன்றியங்களையும்[12], 193 ஊராட்சிகளையும் கொண்டது.[13]

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[14]

ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள்

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டினம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் நகரம் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.

2004 ஆழிப்பேரலை

நாகப்பட்டிணம், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும், ஆழிப்பேரலையையும் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்றாகும்.

வேளாண்மை

காவிரியின் கடைமடை பகுதியாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. விவசாயமே முதல்நிலை தொழிலாக இருப்பதால் வேறு தொழில்கள் இம்மாவட்டத்தில் குறைவே. குறிப்பாக நெல்விளைச்சலில் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் விளைச்சல் அதிகம். நெல் தவிர கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் முதலியவை விளைவிக்கப்படுகிறது. தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் நெல்வித்துக்களை உண்டாக்கி அறித்துள்ளது. மயிலாடுதுறையில் 2 1/2 இலட்சம் ஏக்கரில் நெல், மணிலா, எள், கரும்பு, தென்னை முதலிய பயிறிடப்படுகின்றன.

உப்பளத்தொழில்

உப்பளத்தொழில் இம்மவாட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம்,[15] தரங்கம்பாடி ஆகிய இடங்களில் காய்ச்சப்படுகிறது. வேதாரண்யத்துக்கு அருகேயுள்ள உப்பளங்கள் சிறு வணிகர்களாலும், பெருவணிகர்களாலும், குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகின்றன. 'மேட்டூர் கெமிகல்' குழுமத்தார் இரசாயனப் பொருள்களின் உற்பத்தியில் பயன்படுத்துவதற்காக 'வெள்ளை உப்பு' (Reined Salt) செய்வதற்கு, வேதாரண்யத்தில், குத்தகைக்கு எடுத்து மேட்டூருக்கும், ஆல்வாய்க்கும் உப்பு அனுப்புகின்றனர். வேதாரண்யம் பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் 20 இலட்சம் டன் உப்புக்காய்ச்சப்படுகிறது. வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது. இங்கு தொழிற்சாலைகள் ஏற்பட இருக்கின்றன. மீன்பிடிக்காரருக்கான வலைகள், புகையிலையும் கருப்பட்டியும் வைப்பதற்கான தாழ ஓலைப்பாய்கள் இங்கு கோடியக் கரையிலும், வேதாரண்யத்திலும் கைத்தொழிலாக வளர்ந்துவந்துள்ளது. நெல் வாணிபத்திற்கு குற்றாலம் புகழ் பெற்றது. மயிலாடுதுறையை அடுத்த கூறைநாட்டில் பட்டுப்புடவை நெய்யும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது.

மீன்பிடித்தொழில்

திருமுல்லைவாயில் தொடக்கம் கோடியக்கரை வரையுள்ள கிட்டத்தட்ட 120 கி.மீ கடற்கரையைக் கொண்டிருப்பதால் சிறப்பானபயன் தொழிலாக மீன்பிடித்தல் விளங்குகிறது.[16] சாதாரண கட்டுமரங்களை பயன்படுத்தியே இங்கு தொழில் செய்யப்படுகிறது. சில இடங்களில் இயந்திர படகு மீன்பிடியும் நடைபெறுகிறது. பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை முதலிய இடங்களில் பெருமளவு மீன்பிடிக்கப்படுகிறது. இங்கு சுறா, வாளை, திருக்கை, நெத்திலி, நண்டு மற்றும் கடலோரப் பகுதிகளில் நன்னீர் இறாலும் வளர்க்கப்படுகிறது. மீனும், கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாகையில் மீனவர் பயிற்சி நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை