மல்லிகைத் தேநீர்

மல்லிகைத் தேநீர் அல்லது மல்லிப்பூ தேநீர்(茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா, ஆங்கிலம்:Jasmine tea) சீன மக்களால் பருகப்படும் தேநீர் வகைகளில் ஒன்றாகும். [1][2]அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள். இந்திய தாயக மலர்களில் ஒன்றான அரபு மல்லி என்று உலகின் பல இடங்களிலும் அழைக்கப்படும் மல்லிகை இனத்திலிருந்து இத்தேநீர் உருவாக்கப்படுகிறது.[3] இதனை சீனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தயாரிப்பதாகக் கூறுகின்றனர். தயாரிப்பு முறையானது, பெரும்பாலும், பச்சைத் தேநீர் என்பதன் அடிப்படையிலுள்ளது. ஆனால், சில நேரங்களில் ஓலாங்க் அடிப்படையிலும் தயாரிக்கின்றனர். இதன் தயாரிப்பு முறையானது மிக அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டது. ஈரிலைஅமைவில்(Bifoliatum) உள்ள தேயிலைகளோடு ஒரு குறிப்பிட்ட அளவு மலர்ந்த மல்லிகைப் பூக்கள் பக்குவபடுத்தப்பட்டு கலக்கப்படுகின்றன.

மல்லிப்பூ தேநீர்

மல்லிகைப் பூவின் தரம்

Jasminum sambac மொட்டுகள்

உயர்தர மல்லிகை தேயிலையை உற்பத்தி செய்வதற்கு, அதன் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் தேயிலை இலைகளின் தரத்துடன், மல்லிகைப் பூக்களின் தரமும் முக்கியமானதாகும். தரம் என்பது பூக்களின் தோற்றத்தையும், புத்துணர்ச்சியையும் மட்டும் குறிப்பதல்ல; நறுமணத்தை வெளியிடுவதில் பூக்களின் வளர்ச்சி நிலையையும் குறிக்கிறது. மல்லிகை பூக்கள் ஒரு நாள் மட்டுமே பூத்து, 12 முதல் 20 மணிநேரம் வரை மலர்ந்து இருக்கும் இயல்புடையது. பொதுவாக மாலை 6 முதல் 8 மணி வரை இரவில் பூக்கள் பூத்திருக்கும். மல்லிகை உற்பத்தியாளர்கள் பொதுவாக பகலில் பூ மொட்டுகளைப் பறிப்பார்கள். பறிக்கப்பட்ட பூ மொட்டுகள் சேமித்து வைக்கப்படுவதில்லை, ஆனால் அந்த இரவில் நறுமண செயல்முறைக்காக நேரடியாக தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. மல்லிகைப் பூக்களை பறிப்பதில் அனுபவம் தேவை, பறித்த மொட்டுகள் அந்த இரவில் பூக்க வேண்டும். ஏற்கனவே மலர்ந்த மொட்டுகள் பயன்படுத்த முடியாதவை; பறித்த மொட்டுகள் இரவில் மலரா விட்டாலும் அதனை பயன்படுத்தமாட்டர்.

மல்லிகை தேயிலைத் தூள்

மல்லிகை தேயிலைத் தூள்

மல்லிகை மலரின் வாசம் மற்றும் நறுமணம் ஆகியவற்றை உட்கிரகிப்பதற்குத் தேயிலைக்கு நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். மிக உயர் தரங்களுக்கு இந்த செய்முறையானது ஏழு முறைகள் வரையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும். காரணம், மலர்களின் உள்ளார்ந்த ஈரப்பசையை தேயிலை உட்கிரகித்து விட்டால், அது கெடாதிருக்க அதனை மறுதீயிட வேண்டும். பயன்படுத்தப்பட்ட மலர்களை இறுதிப் பொருளிலிருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் விடலாம். காரணம் இந்த மலர்கள் முழுதும் வறண்டு வாசமற்றே இருக்கும். அடர்த்தி மிகுதியான தேயிலைகளிலிருந்து இதழ்களை ஊதி நீக்குவதற்கு ராட்சசக் காற்றாடிகள் பயன்படுகின்றன. அசாமிய தேநீர் மல்லியும், இத்தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு கலந்து உருவாக்கப்படுகிறது.[4]

இத்தேநீரின் வேதிப்பண்புகள்

ஐட்டன்(Aiton); α-பார்னசீன்(α-farnesene); 3-ஹைட்ராக்ஸி-3-மெத்தில்குளூட்டரில் கோஎன்சைம் ஏ சின்தேஸ்( 3-hydroxy-3-methylglutaryl coenzyme A synthase - HMGS); 3-ஹைட்ராக்ஸி-3-மெத்தில்குளூட்டரில் கோஎன்சைம் ஏ ரிடக்டேஸ் ( 3-hydroxy-3-methylglutaryl coenzyme A reductase - HMGR); ஃபார்னெசில் பைரோபாஸ்பேட் சின்தேஸ் (farnesyl pyrophosphate synthase - FPPS); லோவாஸ்டாடின்(lovastatin); டெர்பீன் சின்தேஸ் (terpene synthase - TPS) ஆகியவை இருப்பதால் உடலுக்கும், மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஏற்றது.[5][6][7]

காட்சிக்கூடம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மல்லிகைத்_தேநீர்&oldid=3820177" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை