மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்

மின்கடத்துமை (மின்கடத்துதிறன்) என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக எவ்வளவு நன்றாகக் கடத்த வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு. இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை அனைத்துலக முறை அலகுகளில் (SI) மீட்டர் ஒன்றுக்கான சீமன்சு (S·m−1)என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்கடத்துமை பொதுவாக கிரேக்க எழுத்து ஃசிக்மா (sigma, σ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது.

மின்தடைமை (மின் தடைத்திறன்) என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக ஓடுவதை எவ்வளவு நன்றாக தடுத்தெதிர்க்க (தடை எழுப்ப) வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு. இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை அனைத்துலக முறை அலகுகளில் (SI) ஓம்-மீட்டர் (Ωm) என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்தடைமை பொதுவாக கிரேக்க எழுத்து ரோ (rho, ρ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது

மின்தடைமை (மின்தடைத்திறன்), மின்கடத்துமை (மின்கடத்துதிறன்) ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தலைகீழ் விகிதத் தொடர்புடையது.

வரைபிலக்கணங்கள்

இரு மின்முனைகளுக்கு இடையே ஒரு தடையி. தடையியின் நீளம் , குறுக்குவெட்டுப் பரப்பு .

ஒரு பொருளின் மின் தடைத்திறன் அல்லது மின் தடைமை, ρ (ரோ), என்பது, அப்பொருளில் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டச் செறிவு இருப்பதற்கு, எவ்வளவு மின்புலம், அப் பொருளுள் இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது மின்தடைமை = மின்புலம் வகுத்தல் மின்னோட்டச் செறிவு:

இங்கு

ρ நிலையான தடைத்திறன்(ஓம்-மீட்டரில் (Ω-m) அளக்கப்படும்,
E மின்புலத்தின் அளவு(மீட்டருக்கு வோல்ட் (V/m) இல் அளக்கப்படும்);
J மின்னோட்டத்தின் செறிவு(சதுர மீட்டருக்கு அம்பியர் (A/m²) எனும் அலகில் அளக்கப்படும்.

பொதுவாக ஒரு தடையி சீரான பண்புகள் கொண்ட ஒருபொருளால் ஆக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பும் ( ) கொண்டு இருந்தால், அதன் நீளத்தை ( ) இரட்டித்தால் அதன் தடைமம் ( ) இரட்டிக்கும். ஆகவே மின்தடைமமானது, நீளத்தின்( ) நேர் சார்பு (நேர்விகிதம்) உடையது. அதாவது . அதே போல குறுக்கு வெட்டுப்பரப்பு இரட்டிப்பாக ஆனால், அது அதிக மின்னோட்டத்துக்கு இடம் தருமாகையால் மின் தடைமமானது ( ), இரு மடங்காகக் குறையும். இதனால் மின் தடைமமானது குறுக்குவெட்டுப் பரப்புக்கு எதிர்விகிதத்தில் (தலைகீழ் சார்பில்) இருக்கும். அதாவது . இருவிளைவும் சேர்ந்து மின்தடைமம் ( ), . இந்த சார்பு (விகித) உறவை சமன்பாடாக ஆக்கும் மாறிலியே மின்தடைமை அல்லது மின்தடைத்திறன் எனப்படுவது. இது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மாறாத அடிப்படை மின்பண்பு ஆகும். மின்தடைமம் ( ) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டால் குறிக்கப்பெறும்:

இதில் ஒரு பொருளின் அடிப்படை மின்பண்பு, மின்தடைமை அல்லது மின்தடைத்திறன் ρ என்பதாகும்.

ஒரு மின்தடையியின் தடைமம் R என்றால், அதன் நீளம், குறுக்குவெட்டுப்பரப்பு ஆகியவை அறியக்கூடியது என்றால், அதன் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் ρ:

இங்கு

R சீரான பொருளொன்றின் தடைமம் (ஓம் (Ω) அலகில் அளக்கப்படும்,
தடையிப் பொருளின் நீளம்(மீட்டரில் (m)அளக்கப்படும்,
A தடையிப் பொருளின் குறுக்குவெட்டுப் பரப்பு(சதுர மீட்டரில் (m²)அளக்கப்படும்.

பொருட்களின் தடைத்திறன்கள்

  • மாழை(உலோகம்) முதலான மின்கடத்திகள் உயர் மின்கடத்துதிறனையும் (மின்கடத்துமையும்) குறைந்த மின் தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
  • கண்ணாடி முதலான மின் வன்கடத்திகள் அல்லது மின்காவலிகள் குறைந்த மின்கடத்துதிறனையும் உயர் மின்தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
  • குறைகடத்திகளின் மின்கடத்துதிறன் (மின்கடத்துமையும்) இடைப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அயலணுக்கள் சேர்த்தல், வெப்பநிலை, ஒளிவீழ்ச்சி போன்றவற்றால் மிக மிகப்பெரிதும் மாறுபடக்கூடியது.

கீழுள்ள அட்டவணை 20 °C (68 °F) வெப்பநிலைகளில் வேறுபட்ட பொருட்களின் மின்கடத்துமை அல்லது மின்கடத்துதிறன், மற்றும் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் மற்றும் அவற்றின் வெப்பநிலைக் குணகம் என்பவற்றைத் தருகிறது.

பொருள்ρ [Ω·m] at 20 °Cσ [S/m] at 20 °Cவெப்பநிலை
குணகம்[குறிப்பு 1]
[K−1]
மேற்கோள்கள்
வெள்ளி1.59×10−86.30×1070.0038[1][2]
செம்பு1.68×10−85.96×1070.0039[2]
Annealed Copper[குறிப்பு 2]1.72×10−85.80×107[சான்று தேவை]
தங்கம்[குறிப்பு 3]2.44×10−84.52×1070.0034[1]
அலுமினியம்[குறிப்பு 4]2.82×10−83.5×1070.0039[1]
கல்சியம்3.36×10−82.98×1070.0041
தங்குதன்5.60×10−81.79×1070.0045[1]
நாகம்5.90×10−81.69×1070.0037[3]
நிக்கல்6.99×10−81.43×1070.006
லித்தியம்9.28×10−81.08×1070.006
இரும்பு1.0×10−71.00×1070.005[1]
பிளாற்றினம்1.06×10−79.43×1060.00392[1]
தகரம்1.09×10−79.17×1060.0045
ஈயம்2.2×10−74.55×1060.0039[1]
தைத்தானியம்4.20x10−72.38×106X
மங்கனின்4.82×10−72.07×1060.000002[4]
கொன்சுதான்சன்4.9×10−72.04×1060.000008[5]
இரசம்9.8×10−71.02×1060.0009[4]
நிக்குறோம்[குறிப்பு 5]1.10×10−69.09×1050.0004[1]
Carbon (amorphous)5 to 8×10−41.25 to 2×103−0.0005[1][6]
காபன்(காரீயம்)[குறிப்பு 6]2.5 to 5.0×10−6 ⊥basal plane
3.0×10−3 //basal plane
2 to 3×105 ⊥basal plane
3.3×102 //basal plane
[7]
காபன் (வைரம்)[குறிப்பு 7]~1012~10−13[8]
சேர்மானியம்[குறிப்பு 7]4.6×10−12.17−0.048[1][2]
கடல்நீர்[குறிப்பு 8]2×10−14.8[9]
குடிநீர்[குறிப்பு 9]2×101 to 2×1035×10−4 to 5×10−2[சான்று தேவை]
அயனகற்றப்பட்ட நீர்[குறிப்பு 10]1.8×1055.5 × 10−6[10]
சிலிக்கான்[குறிப்பு 7]6.40×1021.56×10−3−0.075[1]
GaAs5×107 to 10−35×10−8 to 103[11]
கண்ணாடி1010 to 101410−11 to 10−15?[1][2]
Hard rubber101310−14?[1]
சல்பர்101510−16?[1]
வளி1.3×1016 to 3.3×10163 to 8 × 10−15[12]
மெழுகு101710−18?
படிகம் (fused)7.5×10171.3×10−18?[1]
PET102010−21?
Teflon1022 to 102410−25 to 10−23?

மேற்கோள்களும் குறிப்புகளும்

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை