முகம்மது முர்சி

முகம்மது முர்சி (Mohamed Morsi, அரபு மொழி: محمد مرسى عيسى العياط‎, 8 ஆகத்து 1951 – 17 சூன் 2019) ஓர் எகிப்திய அரசியல்வாதி. இவர் எகிப்தின் ஐந்தாவது அரசுத்தலைவராக[1] 2012 முதல் 2013 வரை இருந்துள்ளார். 2013 சூன் மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து இராணுவப் புரட்சி ஒன்றில் இவர் இராணுவத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[2]

முகம்மது முர்சி
Mohamed Morsi
محمد مرسي العياط
2013 இல் முர்சி
எகிப்தின் 5-வது அரசுத்தலைவர்
பதவியில்
30 சூன் 2012 – 3 சூலை 2013
பிரதமர்கமால் கன்சோரி
எசாம் கான்டில்
Vice Presidentமகுமுது மெக்கி
முன்னையவர்முகம்மது உசைன் தந்தாவி (இடைக்கால)
பின்னவர்அட்லி மன்சூர்
(இடைக்கால)
கூட்டுச்சேரா இயக்கத்தின் பொதுச் செயலர்
பதவியில்
30 சூன் 2012 – 30 ஆகத்து 2012
முன்னையவர்முகம்மது உசைன் தந்தாவி
பின்னவர்மகுமூத் அகமதிநெச்சாத்
விடுதலை மற்றும் நீதிக் கட்சித் தலைவர்
பதவியில்
30 ஏப்ரல் 2011 – 24 சூன் 2012
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்சாத் எல்-கத்தாட்னி
மக்கள் பேரவை உறுப்பினர்
பதவியில்
1 திசம்பர் 2000 – 12 திசம்பர் 2005
முன்னையவர்நூமன் குமா
பின்னவர்மகுமுது அபாசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-08-08)8 ஆகத்து 1951
எல் ஆத்வா, எகிப்து
இறப்பு17 சூன் 2019(2019-06-17) (அகவை 67)
கெய்ரோ, எகிப்து
அரசியல் கட்சிவிடுதலை மற்றும் நீதிக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
முசுலிம் சகோதரத்துவம்
துணைவர்
நக்லா மகுமுது (தி. 1979)
பிள்ளைகள்5
முன்னாள் கல்லூரிகெய்ரோ பல்கலைக்கழகம்
தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கையெழுத்து

இவர் தனது அரசுத்தலைவர் பதவிக் காலத்தில், அரசியலமைப்பைத் தற்காலிகமாக மாற்றி அமைத்தார். இதன் மூலம் அரசுத்தலைவருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு, நீதிமன்ற ஒப்புதல் இன்றி சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.[3] 2013 சூன் 30 இல் அரசுத்தலைவரைப் பதவி விலகக்கோரி நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.[4][5][6] இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவும், அரசியல் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டி மூர்சிக்கு இராணுவத்தினரால் 48 மணி நேரக் கெடு விதிக்கப்பட்டது.[7] சூலை 3 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் பத்தா அல்-சிசி, எதிர்க்கட்சித் தலைவர் முகம்மது அல்-பராதிய் ஆகியோர் தலைமையிலான இராணுவப் புரட்சிக் குழு கூடி மூர்சியைப் பதவியில் இருந்து அகற்றியது.[8][9] இராணுவம் அரசியலமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி, அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் அட்லி மன்சூரை இடைக்காலத் தலைவராக அறிவித்தது.[10] இராணுவப் புரட்சிக்கு எதிராக மூர்சிக்கு ஆதரவான முசுலிம் சகோதரத்துவம் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியது. இவ்வார்ப்பாட்டங்களில் 817 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[11] இப்படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் அல்-பராதி பதவி விலகினார்.[12]

மூர்சி மீதான விசாரணைகளை அடுத்து அவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[13] 2016 நவம்பரில் இவரது மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டு, விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாயின.[14] 2019 சூன் 17 அன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, மூர்சி காலமானார்.[15][16]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முகம்மது_முர்சி&oldid=3538005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை