முரளி விஜய்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

முரளி விஜய் (Murali Vijay (பி. ஏப்ரல் 1, 1984, சென்னையில்) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் ஒரு வலது-கை மட்டையாளர்; துவக்க ஆட்டக்காரர். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் , தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

முரளி விஜய்
Murali Vijay during practice in Australia
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முரளி விஜய் கிருஷ்ணா
பிறப்பு1 ஏப்ரல் 1984 (1984-04-01) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டப்பெயர்Monk
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குதுவக்க ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 260)6 நவம்பர் 2008 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு14 திசம்பர் 2018 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 181)27 பெப்ரவரி 2010 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப9 சூலை 2015 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்26 (formerly 8)
இ20ப அறிமுகம் (தொப்பி 27)1 மே 2010 எ. ஆப்கானித்தான்
கடைசி இ20ப19 சூலை 2015 எ. சிம்பாப்வே
இ20ப சட்டை எண்8
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–தற்போதுவரைதமிழ்நாடு
2009–2013சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 8)
2014டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 8)
2015–2017கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 8)
2018–2020சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 1 (formerly 888))
2018எசெக்ஸ் கவுண்டி (squad no. 8)
2019சோமர்செட் கவுண்டி (squad no. 1)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒபதுப20இமுதது
ஆட்டங்கள்6117984
ஓட்டங்கள்3,9823391693,292
மட்டையாட்ட சராசரி38.2921.1818.7740.64
100கள்/50கள்12/150/10/07/18
அதியுயர் ஓட்டம்1677248155
வீசிய பந்துகள்3543612287
வீழ்த்தல்கள்1109
பந்துவீச்சு சராசரி198.0037.0029.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
000
சிறந்த பந்துவீச்சு1/121/193/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
49/–9/–3/–39/–
மூலம்: ESPNcricinfo, 6 திசம்பர் 2018

முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக சில துடுப்பாட்டச் சங்கங்களின் சார்பாக விளையாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். 2006-2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் ஒருவரானார். அக்டோபர் 2008 ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். நவம்பர் 2008 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை, கவுதம் கம்பீருக்கு ஓர் போட்டியில் விளையாடத் தடை விதித்ததால் அவருக்குப் பதிலாக துவக்க வீரராக களம் இறங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை

முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[1] 2003 ஆம் ஆண்டில் சென்னை, ஆழ்வார் பேட்டை துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார். பின் சீ. கே. நாயுடு கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தத் தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆனால் முரளி விஜய் சரியான ஆட்டத் திறனை இதில் வெளிப்படுத்தத் தவறினார். அவர் விளையாடிய 6 போட்டிகளிலும் சராசரியாக 26.45 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.[2] அதன் பின்பும் சில துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். 2005-2006 ஆம் ஆண்டிற்கான சீ. கே. நாயுடு கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 26.50 சராசரி ஓட்டங்களைப் பெற்றார்.[3]

இந்தத் தொடரில் சரியான திறனை வெளிபடுத்தத் தவறினாலும் இவருக்கு பெப்ரவரி 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் கிடைத்தது. பெப்ரவரி 16 அன்று கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 17 ஓட்டங்கள் எடுத்தார்.[4] பின் இரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.[5]

தேர்வு ஆட்டங்களில்

நவம்பர் 2008, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நாக்பூரில் நடந்த நான்காவது டேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கவுதம் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கியதே அவரது அறிமுக ஆட்டமாகும். டிசம்பர் 2009, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மீண்டும் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கினார். முதல் ஆட்டப் பகுதியில் 87 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 2010இல் விளையாடிய போது முதல் நூறு அடித்தார்.

சாதனைகள்

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு தேர்வு தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியத் துவக்க வீரர் எனும் சாதனையை முரளி விஜய் படைத்தார். 2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 284 ஓட்டஙக்ள் எடுத்தார். இதற்கு முன் வீரேந்தர் சேவாக் ,2003-04 ஆம் ஆண்டில் 464 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

தேர்வு சதங்கள்

No.ScoreMatchBalls4s6sAgainstVenueYearResult
11398310142  ஆத்திரேலியாஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர், இந்தியா2010வெற்றி[6]
216714361232  ஆத்திரேலியாஇராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், உப்பல் காலன், ஐதராபாத்து (இந்தியா), India2013வெற்றி[7]
315315317193  ஆத்திரேலியாபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி, சண்டிகர், இந்தியா2013வெற்றி[7]
414623361251  இங்கிலாந்துடிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம், இங்கிலாந்து2014சமன்
514429213220  ஆத்திரேலியாபிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா2014தோல்வி
615032272121  வங்காளதேசம்பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம், ஃபாதுல்லா, வங்கதேசம்2015சமன்

இந்தியன் பிரீமியர் லீக்

முரளி விஜயின் இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் புள்ளிவிவரங்கள்
ஆண்டுஅணிஆட்டப் பகுதிஓட்டங்கள்HSசராசரிஸ்டிரைக் ரேட்100504s6s
சென்னை சூப்பர் கிங்ஸ்[8][9][10][11][12]4603115.0089.550042
20101545812735.23156.84123626
2011164349527.12128.02033420
20121433611325.84125.84103919
2013153125522.38109.0902278
2014டெல்லி டேர்டெவில்ஸ்112075218.81107.8101205
2015கிங்சு இலெவன் பஞ்சாபு112513922.81110.0800278
2016கிங்சு இலெவன் பஞ்சாபு144538934.84124.45055010
000000000
2009–2014 Total[13]100251112726.43123.3921323789

வெளியிணைப்புகள்

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: முரளி விஜய்


சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முரளி_விஜய்&oldid=3718979" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை