பிரிஸ்பேன்

ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரம்

பிரிஸ்பேன் அல்லது பிறிஸ்பேன் (Brisbane, /ˈbrɪzbən/, "பிறிஸ்பன்")[4] ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரும், அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும்,[5] ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர்.[6][7] மிதவெப்ப மண்டல காலநிலையுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் பிரிஸ்பேன் ஆற்றின் கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது.[8]

பிரிஸ்பேன்
குயின்ஸ்லாந்து

பிரிஸ்பேன் நகர மையமும் ஸ்டோரி பாலமும்
மக்கள் தொகை:1,857,594 (2007) [1] (3வது)
அடர்த்தி:918/கிமீ² (2,377.6/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு:1824
ஆள்கூறுகள்:27°28′04″S 153°01′40″E / 27.46778°S 153.02778°E / -27.46778; 153.02778
பரப்பளவு:5904.8 கிமீ² (2,279.9 சது மைல்) [3]
நேர வலயம்:AEST (பகலொளி சேமிப்பு இல்லை) (UTC+10)
அமைவு:
உள்ளூராட்சிகள்:
  • பிரிஸ்பேன்
  • இப்ஸ்விச், லோகன்
  • மோர்ட்டன் பே
  • ரெட்லாந்து
கவுண்டி:ஸ்டான்லி
மாநில மாவட்டம்:பல (38)
நடுவண் தொகுதி:
  • பிளையர், பொன்னர், போமன், பிரிஸ்பேன்
  • டிக்சன், ஃபாடென், ஃபோர்ட், கிரிஃபித்
  • லில்லி, லோங்மன், மோர்ட்டன், ஒக்ஸ்லி
  • பெட்ரி, ராயன்
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
25.5 °செ
78 °
15.7 °செ
60 °
1,146.4 மிமீ
45.1 அங்

நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.[5]

தற்போதுள்ள நகர வணிக மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் ஐரோப்பியக் குற்றவாளிகள் குடியேற்றம் 1824ஆம் உருவாக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு வடக்கு கீ பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றம் உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றம் மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் இருந்து குயின்சுலாந்து பிரிக்கப்பட்டு பிரிஸ்பேனைத் தலைநகராகக் கொண்டு தனிக் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகளின் அணியில் தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் டக்ளசு மெக்கார்த்தருக்காக பிறிஸ்பேன் நகரம் பெரும் பங்காற்றியது. பிறிஸ்பேன் நகரில் 1982 பொதுநலவாய விளையாட்டுக்கள், எக்சுபோ '88 கண்காட்சி, 2001 நல்லெண்ணப் போட்டிகள், 2014 ஜி-20 உச்சிமாநாடு உட்படப் பல பன்னாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வரலாறு

19ம் நூற்றாண்டு

பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிறிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.

ஐரோப்பியர் வருகைக்கு முன்பு பிறிஸ்பேன் பகுதியில் ஜாகிரா மற்றும் டுரூபல் இனத்தைச் சார்ந்த ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வசித்து வந்தனர்.[9] தற்போதைய மத்திய வணிகப் பகுதியை அவர்கள் மியான்-ஜின் (கூர்முனை வடிவ இடம் எனப் பொருள்) என அழைத்து வந்தனர்.[10] மொரிட்டோன் குடா முதலில் மேத்தியூ பிலிண்டர்சுவினால் கண்டுபிடிக்கப்பட்டது. 1799 சூலை 17 இல் பிலிண்டர்சு வூடி முனை என இன்று அழைக்கப்படும் இடத்தில் தரையிறங்கினார். குடாவில் இருந்து பார்க்கும் போது இவ்விடத்தில் சிவப்பு நிற செங்குத்துப் பாறைகள் காணப்பட்டமையினால் அவர் "ரெட் கிளிஃப் முனை" எனப் பெயரிட்டார்.[11] 1823 இல் ஆளுனர் தோமசு பிறிஸ்பேன் குற்றவாளிகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டார்.[12]


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரிஸ்பேன்&oldid=3369220" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை